siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு நீந்தும் 62 வயதுப் பெண்மணி

23.08.2012.கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு நீந்தும் முயற்சியில் 62 வயது அமெரிக்கப் பெண் ஒருவர் நான்காவது தடவையாக ஈடுபட்டுள்ளார். டயானா நயத் ௭ன்ற இந்தப் பெண்மணி கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு பாதுகாப்பு கூண்டெதுவுமின்றி நீந்திய முதலாவது நபரென்ற சாதனையை நிறைவேற்ற ௭திர்பார்த்துள்ளார். இதற்கு முன் ஜெலி மீன்கள் காரணமாக மேற்படி 166 கிலோமீற்றர் தூர நீச்சல் சாதனை முயற்சியை அவர்  கைவிட நேர்ந்தது. அவர் கியூபத் தலைநகர் ஹவானாவிலிருந்து சனிக்கிழமை...

10 வருடங்களாக வயிற்றில் முள்ளுக்கரண்டியுடன் வாழ்ந்த நபர்

23.08.2012.தாங்க முடியாத வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவரின் வயிற்றிலிருந்து 9 அங்குல நீளமான முள்ளுக் கரண்டியொன்றை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. லீ கார்ட்னர் (40 வயது) ௭ன்ற நபர், 10 வருடங்களுக்கு முன் உணவு உண்ணும்போது முள்ளுக்கரண்டியை தவறுதலாக விழுங்கியுள்ளார். அதை விழுங்கியதால் ௭துவித பாதிப்பும் உடனடியாக ஏற்படாத நிலையில் அவர் அது தொடர்பில் மறந்து விட்டிருந்தார். ஆனால்,...

24 மணிநேரத்தில் பல்கலைக்கழகங்களைத் திறக்காவிடில் பாரிய போராட்டம்: ஜே.வி.பி.

23.08.2012. சுதந்திரக் கல்வியைப் பாதுகாக்கவேண்டியது அனைவரதும் கடமை ௭ன்கிறது ஜே.வி.பி.மூடப்பட்டுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களையும் இன்னும் 24 மணித்தியாலத்துக்குள் திறக்க அரசாங்கம் நடவடிக்கை ௭டுக்க வேண்டும். இல்லையென்றால் பாரிய ௭திர்ப்பு நடவடிக்கைகளை ௭திர் கொள்ள நேரிடும் ௭ன்று ஜே.வி.பி. அரசாங்கத்தை ௭ச்சரித்துள்ளது. கல்வித் துறைசார் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காது பாடசாலைகளையும் பல்கலைகழகங்களையும் மூடுவதால் பலன் ஏற்படப் போவதில்லை. இவ்வாறான முட்டாள்தனமான...

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்

23.08.2012. கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 200 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை நான்கு ரோலர் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு மீனவர்களின் படகுகளிலிருந்த வலைகள் உள்ளிட்ட கருவிகளைச் சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது ...

கண்டி – மாத்தளை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டி மாத்தளை பலகடுவ பிரதேசத்தில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

23.08.2012. அட்டன் - பொகவந்தலாவ முத்துலெட்சுமி தோட்டத்தின் வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் தனிமையில் வாழ்ந்த இரண்டு சிறுமிகளை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று பிற்பகல் மீட்டனர்.ஆகாரமின்றி எட்டு வயது மற்றும் ஐந்து வயதான இரு சகோதரிகள் தமது பெற்றோர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாத நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.இவர்கள் தொடர்பாக தோட்டத்தில் வசிக்கும் ஒருவர் கொடுத்த தகவலுக்கு அமையவே பொலிஸார் இவர்களை மீட்டுள்ளனர்.இச்சிறுமிகளின் தாய் தாம் கொழும்புக்கு...

மாத்தளை பஸ் வண்டி விபத்தில் 15 பேர் காயம்

23.08.-2012.கண்டி – மாத்தளை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டி மாத்தளை பலகடுவ பிரதேசத்தில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ்விபத்தில் காயடைந்த 15 பேரும், ஆபத்தான நிலையில் இருந்த பஸ் வண்டியின் சாரதியும் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபையின் மாத்தளை டிப்போவுக்கு சொந்தமான பஸ் வண்டி கண்டியில் இருந்து மாத்தளைக்கு செல்லும் போதே இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக...

நாடாளுமன்றில் சம்பந்தன் நேற்று அறிவிப்பு

23.08.2012. தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நியாயமான முறையில் கௌரவமானதொரு தீர்வு காணப்படவேண்டும். இதை அடிப்படையாகக் கொண்ட பேச்சுகளை முன்னெடுப்பதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் திட்டவட்டமாக இடித்துரைத்தார். அத்துடன், நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய செயற்றிட்டம் தயாரிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி, வடக்கு,...

விஜய் தலைமையில் திருமணம் (வீடியோ இணைப்பு)

23.08.2012.வேலூர் மாவட்ட மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 11 ஏழை ஜோடிகளுக்கு 51 சீர்வரிசைகளுடன் திருமணம் செய்து வைக்கும் விழா நேற்று(19.08.12) வேலூரில் நடந்தது. இந்த திருமணத்தை நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். விஜய் தலைமை தாங்கும் செய்தி அறிந்த ரசிகர்கள் திருமணத்திற்கு பெருந்திரளாக கலந்துகொண்டனர். நடிகர் விஜய்யும், அவரது மனைவி சங்கீதாவும் மாலைகள் எடுத்துக் கொடுக்க மணமக்கள் அதை...

5 நாட்களில் ‘ரூ.100 கோடி’ வசூல்

23.08.2012.சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் சுதந்திர தினத்தன்று வெளியானது. படம் வெளியான வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூலாகியுள்ளது. 5 நாட்களில் ஒரு இந்தியப் படத்திற்கு ரூ.100 கோடி வசூலானது இது தான் முதன் முறை. இதன் மூலம் வசூலில் ஏக் தா டைகர் புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக சல்மானின் தபாங்(ரூ.147 கோடி), ரெடி(ரூ.122 கோடி) மற்றும்...

போட்டியில் வென்ற ஷாலினி! அஜித் கொடுத்த பரிசு!

23.08.2012.தமிழ் சினிமாவில் சில முன்னணி கதாநாயகிகள் மார்க்கெட் இருக்கும் வரை நடித்துவிட்டு பிறகு திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிடுவது அனவரும் அறிந்ததே. ஆனால் நடிகை ஷாலினி பிரபலமாக இருந்தபோதே நடிகர் அஜீத்குமாரை மணந்துகொண்டு வீட்டோடு செட்டிலாகிவிட்டார். அதன் பிறகு வெளியில் அவர் தலை தெரிவதே அதிசயம். அஜீத்தை போன்றே வெளி உலகை அதிகம் விரும்பாத ஷாலினி எங்காவது நெருங்கிய நண்பர்களின் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அஜீத்துடன் வருவார். படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு...

சிகரெட்டையும், சிப்ஸையும் 'சாப்பிட்டு' உயிர் வாழும் அமெரிக்க நடிகை!

23.08.2012 அமெரிக்க நடிகை கிரிஸ்டன் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் சரியாக சாப்பிடுவதில்லையாம். மாறாக எப்போது பார்த்தாலும் தம்மடித்தபடி இருக்கிறாராம். சிப்ஸ் மட்டுமே சாப்பிடுகிறாராம். சமீபத்தில்தான் கிறிஸ்டனின் காதலரான ராபர்ட் பேட்டின்சன் அவரை விட்டுப் பிரிந்தார். இதனால் மனம் நொந்து போய் விட்ட கிறிஸ்டன், சரியாக சாப்பிடுவதில்லையாம். மாறாக சிப்ஸை மட்டுமே கொறித்துக் கொண்டிருக்கிறாராம். அதேபோல எப்போது பார்த்தாலும் சிகரெட் புகைத்தபடி விரக்தியாக இருக்கிறாராம். அமெரிக்க...

பிரபுதேவாவே ஆடுறார்னா... உணர்ச்சிவசப்படும் சோனாக்ஷி!

23.08.2012. பிரபுதேவா நமக்கு டான்ஸ் சொல்லித் தரும்வரை எந்தப் பயமும் இல்லை. ஆனால் அவரே நம்முடன் இறங்கி ஆட வந்து விட்டால் நாம் அம்பேல்தான். கண்டிப்பாக அவருக்கு சமமாக ஆடினால்தான் நாம் பிழைக்க முடியும் என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறுகிறார் பாலிவுட்டின் இளம் புயல் சோனாக்ஷி சின்ஹா. அக்ஷய் குமார் நடிக்கும் ஓ மை காட் படத்தில் கெஸ்ட் ரோலில் வருகிறார் சோனாக்ஷி. அதாவது அவரும் பிரபுதேவாவும் இணைந்து கோ கோ கோவி்ந்தா என்ற பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர். அந்தப்...

தாய்லாந்தில் RE-ENTRY கொடுத்திருக்கும் அலெக்ஸ் என்னும் குகேந்திரராஜா

23.08.2012.2009ம் ஆண்டு 254 இலங்கை அகதிகளை ஏற்றிக்கொண்டு கனடா நோக்கிச் சென்ற கப்பல் இந்தோனேசியப் படையினரால் பிடிக்கப்பட்டது. இக் கப்பலில் இருந்து தாம் தரைக்கு இறங்கப்போவது இல்லை என தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வேளை இவர்களுக்காகப் பேச அலெக்ஸ் என்னும் நபர் முன்வந்தார். இதேவேளை சர்வதேச தொலைக்காட்சிகள் அவரை நேர்காணல் கண்டவேளை, நிகழ்ச்சி தயாரிப்பாளரை விட படு கெட்டித்தனமாக ஆங்கிலம் பேசினார் அலெக்ஸ். அவரது ஆங்கிலப் புலமை கனேடிய பேச்சு வழக்கில்...

இலங்கையின் கேந்திர நிலைகளை இலக்கு வைத்து இந்தியா ஏவுகணை நிலைநிறுத்தம்

23.08.2012. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை இலக்கு வைத்து இந்தியா ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென் ஆசியாவின் சகல முக்கிய நிலைகளையும்தாக்கக் கூடிய வகையில் இந்தியா ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அக்னி ரக ஏவுகணையே இவ்வாறு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, ஹம்பாந்தோட்டை துறைமுகங்கள், கட்டுநாயக்க,மத்தள, ரத்மலானை விமான நிலையங்கள், இராணுவத் தலைமையகம்,...

ரசிகர்கள் தான் அடித்து கொள்கிறார்கள் இவர்கள் அல்ல

  Published:Wednesday, 23.August 2012,   ...

ஆளணிப் பற்றாக்குறை; குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கும் நல்லூர் கந்தன் ஆலயச் சூழல்

23.08.2012. நல்லூர் கந்தன் ஆலய உற்சவம் முடிவடைந்து 4நாட்களைக் கடந்த நிலையிலும் பொதுமக்களினாலும் வியாபாரிகளினாலும் போடப்பட்ட குப்பைகள் இன்னும் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஆலயச் சுழலை சுழ்ந்து அமைக்கப்பட்டிருந்த வியாபாரக்கடைகள் அகற்றப்பட்டு விட்டன. எனினும் பொது மக்கள் மற்றும் வியாபாரக்கடைகளிலிருந்து வீசப்பட்ட கழிவுப் பொருட்கள் காணப்படுவதுடன் துர் நாற்றமும் வீசுகின்றது. புனிதமாக வைத்திருக்க...

கடல்மார்க்கமாக ஆஸி.செல்வோர் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு நேற்றும் 69 பேர் கைது; இரு நாள்களில் இரண்டாவது சம்பவம்

23.08.2012.இலங்கையில் இருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா விற்குச் செல்பவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த போதும் இந்த ஆபத்தான பயணத்தை மேற் கொள்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கின்றது. ஆஸ்திரேலியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகு ஒன்று நேற்று அதிகாலையில் கடற்படையினரால் பிடிக்கப்பட்டது. இதில் 69 பேர் இருந்தனர். அவர்களில் 48 பேர் தமிழர்கள், 19 பேர் சிங்களவர்கள், 2 பேர் முஸ்லிம்கள். கடந்த இரண்டு...