siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

ஆளணிப் பற்றாக்குறை; குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கும் நல்லூர் கந்தன் ஆலயச் சூழல்

23.08.2012.
நல்லூர் கந்தன் ஆலய உற்சவம் முடிவடைந்து 4நாட்களைக் கடந்த நிலையிலும் பொதுமக்களினாலும் வியாபாரிகளினாலும் போடப்பட்ட குப்பைகள் இன்னும் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஆலயச் சுழலை சுழ்ந்து அமைக்கப்பட்டிருந்த வியாபாரக்கடைகள் அகற்றப்பட்டு விட்டன. எனினும் பொது மக்கள் மற்றும் வியாபாரக்கடைகளிலிருந்து வீசப்பட்ட கழிவுப் பொருட்கள் காணப்படுவதுடன் துர் நாற்றமும் வீசுகின்றது.
புனிதமாக வைத்திருக்க வேண்டிய ஆலயச் சூழல் இவ்வாறு காணப்படுகின்றது இது மாநகர சபையினுடைய அசமந்தப்போக்கினால் மிகவும் வேதனையாக இருப்பதாக அங்கிருந்தவர்கள் சிலர் பேசிக்கொண்டதனையும் காண முடிந்தது.
இது தொடர்பில் மாநாகர சபை உத்தியோகத்தரிடம் கேட்ட போது,
ஆலயச் சுழலின் ஒவ்வொரு பகுதிகளாக இப்போது தான் துப்பரவு செய்து வருகின்றோம். இவற்றை வெகு விரைவில் முடித்து விடுவோம் ஆனால் தற்போது எங்களுக்கு ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது இதனாலேயே மந்தகதியில் வேலைகள் நடைபெறுகின்றது என அவர் தெரிவித்தார்.
எனினும் ஆலயத்தினுள் உட்பிரவேசிக்கும் நுழைவாயிலில் மக்கள் இளைப்பாறும் நோக்கோடு அமைக்கபட்ட கொட்டகைகளை போக்குவரத்து செய்பவர்களுக்கு இடையூறு இன்றி அகற்றி வருகின்றோம்.
அத்துடன் ஆலயத்தை சுழ உள்ள வீதிகளில் இடப்பட்ட மணல் மண்களை வீதியிலிருந்து அப்புறப்படுத்தி வருகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.