siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

அஜித்தின் 52வது படம் கர்வம்?

30.09.2012.By.Rajah.விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு கர்வம் என பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பில்லா வெற்றிக்கு பின்பு அஜித் தனது 52வது படத்தில் மீண்டும் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்காக தன்னுடைய உடல் எடையை முழுவதும் குறைத்திருக்கிறார் அஜித்.
அதற்குரிய படங்கள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியானபோது படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.
தற்போது படத்தின் படப்பிடிப்புக்களில் விஷ்ணு மற்றும் அஜித் மும்முரமாக இருக்கிறார்கள். எனவே படப்பிடிப்புகளை இன்னும் 2 மாதங்களில் முடித்துவிடலாம் என கூறப்படுகிறது.
எனவே அதற்குள் படத்திற்கு ஒரு நல்ல பெயர் வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கர்வம் என தலைப்பிட்டுருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல் இனிதான் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 53வது படத்திற்கு வெற்றிகொண்டான் என தலைப்பு வைத்திருப்பதாக மற்றொரு தகவலும் கொலிவுட்டில் உலா வருகின்றன.

பலத்த சூறாவளியால் இருளில் மூழ்கிய ஜப்பான்

30.09.2012.By.Rajah.ஜப்பானை கடும் சூறாவளி புயல் தாக்கியதில் பல பகுதிகள் இருளில் மூழ்கின. ஜப்பானின் டோக்கியோ மற்றும் ஒகினாவா பகுதிகளை ஜிலாவத் என்ற புயல் 144 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கியது.
இதனால் பல்வேறு இடங்களில் மரங்களும், விளக்கு மற்றும் சிக்னல் கம்பங்களும் தெருக்களில் சாய்ந்தன.
மின் கம்பிகள், தகவல் தொடர்பு கோபுரங்கள் சாய்ந்துள்ளதால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலத்த சூறைக் காற்று வீசி வருவதால் ரயில் மற்றும் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பலத்த மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் கழுத்தறுக்கப்பட்டு 3 குழந்தைகளுடன் சீக்கிய பெண் கொலை

30.09.2012.By.Rajah,பெல்ஜியத்தில் சீக்கிய பெண், அவரது மூன்று மகன்கள் உள்பட 4 பேர் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜஸ்பீர்சிங் (வயது 38).
இவர் பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்ஸ் நகரில் கடந்த 15 ஆண்டுகளாக ரெஸ்டாரண்ட் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஈட்டர்பீக் பகுதியில் தனது மனைவி, மூன்று மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளியன்று தனது வீட்டிற்கு தொடர்பு கொண்டு பேச முயன்ற போது எந்த பதிலும் இல்லை.
சந்தேகமடைந்த அவர் வீட்டிற்கு சென்று பார்த்த போது மனைவி மற்றும் மூன்று மகன்களும் கழுத்து அறுக்கப்பட்டு மர்மான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளனர்.
இது குறித்து ஜஸ்பீர் சிங் பொலிசில் புகார் தெரிவித்துள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது.

கட்டிப் புரண்டு சண்டை போட்ட பெண்கள்: போர்க்களமாக மாறிய ஷாப்பிங் மால்

30.09.2012.By.Rajah.சவுதி அரேபியாவின் தஹரான் நகரில் உள்ள ஷாப்பிங் மாலில், பெண்கள் இருவர் திடீரென சண்டை போட்டுக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தஹரான் நகரில் உள்ள ஷாப்பிங் மாலில், பொருட்களை வாங்கி கொண்டிருந்த சில பெண்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, பெரும் சண்டையாக மாறியது.
ஆளாளுக்கு தலையைப் பிடித்தும், செருப்புகளை எடுத்து அடித்துக் கொண்டும், கையில் இருந்த பேக்குகளால் சரமாரியாக அடித்தும் சண்டை போட ஆரம்பித்தனர்.
இதனையடுத்து அங்கிருந்த பொலிஸார் ஓடி வந்தனர். வந்தவர்கள் அனைவரும் ஆண்கள். சவுதி நாட்டுச் சட்டப்படி ஆண்கள் பெண்களைத் தொடக் கூடாது. எனவே அவர்கள் சண்டையை விலக்கி விட முடியாமல் திகைத்து நின்றனர்.
இதையடுத்து பெண் பொலிஸாருக்குத் தகவல் போனது. ஆனால் அவர்கள் வருவதற்குள் சண்டை மேலும் உக்கிரமாகி விட்டது. மாலில் இருந்த கடைகளுக்குள் ஓடி ஓடி சண்டை போட்டனர் அந்தப் பெண்கள். இதனால் அங்கிருந்த பல பெண்கள் காயமடைந்தனர்.
அதன் பின்பு வந்த பெண் பொலிஸார், சண்டை போட்ட பெண்களை கடும் சிரமத்துக்கு மத்தியில் விலக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சண்டையால் அந்தப் பகுதியே போர்க்களம் போல காணப்பட்டது

ஒரு வயது குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பெண்

30.09.2012.By.Rajah.அபுதாபியில் ஒரு வயது குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக வேலைக்கார பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரேபியர் ஒருவரின் வீட்டில் ஆசியாவை சேர்ந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று கணவன், மனைவி இருவரும் வெளியே சென்ற பிறகு அந்த குழந்தையை கீழே படுக்க வைத்து, அவன் மீது ஏறி உட்கார்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
அப்போது அக்குழந்தை கதறி அழுததும், குழந்தையை அடித்துள்ளார். பின்னர் தலையணையை எடுத்து குழந்தையின் வாயில் அமுத்தி அடக்கப் பார்த்துள்ளார்.
இந்த செயல்கள் அனைத்தும் வீட்டில் இருந்த ரகசியக் கமெராவில் பதிவாகி விட்டது. அந்தப் பெண் நிர்வாண கோலத்தில் குழந்தையை நாசப்படுத்திய காட்சியை பெற்றோர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
அதை போட்டு காட்டிய போது, நான் தான் இதைச் செய்தேன் என்று அப்பெண் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அப்பெண்ணுக்கு 15 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இளம் கால்பந்தாட்ட வீரரை குத்தி கொன்ற 14 வயது பெண் கைது

30.09.2012.By.Rajah..தெற்கு லண்டனில் இளம் கால்பந்தாட்ட வீரரை கத்தியால் குத்தி கொன்றதாக 14 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிக்ஸ்ட்டன் நகரில் லோபோரோ எஸ்டேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே 15 வயது கால்பந்தாட்ட வீரர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், இறந்து கிடந்தார்.
இக்கொலைக்கும், 14 வயது இளம் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து, அப்பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட இந்த பெண் நீதிமன்றத்திற்கு நாளை அழைத்து வரப்படுவாள் என்று பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் 16 வயது சிறுவன் ஒருவனை கைது செய்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே என் மகனை கொலை செய்த நபரை யாராவது பார்த்திருந்தாலோ, இக்கொலை குறித்து யாருக்கும் ஏதேனும் விபரம் தெரிந்தாலோ உடனடியாக பொலிசாரிடம் தெரிவிக்கும்படி இறந்து போன சிறுவனின் தாய் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இருந்து இரண்டாம் கட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் 30பேர் இன்று நாடு திரும்பினர்

 

30.09.2012.By.Rajah.{காணொளி, புகைப்படங்கள்}இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு புகலிடக் கோரிக்கையாளர்களாக சென்றோரில் இரண்டாம் பிரிவினர் இன்று காலை சுயமாக இலங்கைக்கு திரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை ரேடியே ஒஸ்திரேலியா என்ற ஊடகம் தெரிவித்துள்ளது. நௌறு தீவுகளில் இருந்து 2 பேரும் கிறிஸ்மஸ் தீவுகளில் இருந்து 20 பேரும் விலாவூட் மற்றும் யொங்கா ஹில் ஆகிய இடங்களில் இருந்து 6 பேருமாக மொத்தம் 28 பேர் இன்று இலங்கைக்கு புறப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் கிரிஸ் போவன் தெரிவித்துள்ளார்.
நௌறு தீவுகளுக்கு மாற்றப்படும் போது இலங்கை திரும்புவோரை பார்க்கும் போது அவர்கள் ஆட்கடத்தல்காரர்களால் பொய் வாக்குறுதி வழங்கப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்பட்டமை புலனாகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
30 இலங்கையர்கள் ஆஸி'யிலிருந்து நாடு திரும்பினர்
சட்டவிரோத குடியேறிகளாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 இலங்கையர்கள் இன்று மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் விசேட வானூர்தி அவர்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர்.
அவர்களுடன் 60 அவுஸ்திரேலிய பாதுகாப்பு தரப்பினரும் கட்டுநாயக்கவை வந்தடைந்ததாக எமது வானூர்தி தள செய்தியாளர்கள் தெரிவித்தார்..
இலங்கை திரும்பிய குடியேறிகள் பின்னர் விசாரணைகளுக்காக தேசிய ரகசிய தகவல் ஆய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் நவுரு தீவிற்கு செல்ல மறுத்தமையினாலேயே மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டனர்.
இதனிடையே, அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட சட்டவிரோத குடியேறிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டமையினால் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் எனக் கூறிக்கொண்டு வேறு நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியா சென்றவர்களும் வந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடிய கவனத்துடன் செயற்படுவதாக குடிவரவு குடியகல்வு நிர்வாகி சூலாநந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இன்று திருப்பியனுப்பப்பட்டவர்கள் குறித்து அவுஸ்திரேலியா அரசாங்கமும் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
அதில் குடிவரவு மற்றும் குடியேற்றத்துறை அமைச்சர் கிறிஸ் போவன் வெளியிட்டுள்ள கருத்தில், ஆட்கடத்தல் காரர்களால் தமது நாட்டுக்கு அழைத்துவரப்படுபவர்களுக்கு எந்த தருணத்திலும் வீசா வழங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு விசேட கவனமோ, வாழ்க்கை பாதுகாப்பு குறித்து திடீர் தீர்மானங்களோ, எடுக்கப்படமாட்டாது என்றும் கிறிஸ் போவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்கடத்தல் காரர்கள் அவுஸ்திரேலியாவில் நிலவும் தன்மை குறித்து போலியான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
சட்டவிரோத குடியேறிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கே திருப்பியனுப்பும் போது தேவையான வசதிகள் குறித்து அவுஸ்திரேலிய அதிகாரிகளே தீர்மானிப்பார்கள் என்றும் குடிவரவு மற்றும் குடியேற்றத்துறை அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறிருக்கையில், சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்டு கேரளா கடற்பிராந்தியத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 14 பேர் இன்று இலங்கை திரும்பியுள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்பியவர்க்ள சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், 13 இளைஞர்களும், ஒரு பெண்ணும் அந்த குழுவில் உள்ளடங்குகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22

 
29.09.2012.

கலக்கலான கொமெடி படத்தில் விவேக்-சோனியா அகர்வால் ஜோடி

30.09.2012.By.Rajah,கொலிவுட்டில் விரைவில் வெளியாக உள்ள த்ரில்லர் படமான 'சௌந்தர்யா'வை இயக்கியவர் சந்திரமோகன்.
இவர் தற்போது ஏ.பி.சி.ட்ரீம்ஸ் எண்டர்டெயினர்ஸ் சார்பில் 'பாலக்காட்டு மாதவன்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இதில் கொலிவுட்டின் நட்சத்திர கொமெடியன் விவேக், நடிகை சோனியா அகர்வாலுடன் இணைந்து நடித்துள்ளார்.
இது குறித்து சந்திரமோகன் கூறுகையில், கதையின் நாயகனாக கலக்கல் கதாபாத்திரத்தில் விவேக் ரசிகர்களை சிரிக்க வைக்கப்போகிறார்.
கதையின் நாயகியாக நடித்துள்ள சோனியா அகர்வாலுக்கு இப்படம் திருப்புமுனையாக அமையும்.
தமிழ் சினிமாவின் திரைக்கதை திலகம் கே.பாக்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
அவரின் ஆலோசனையில் படத்தின் திரைக்கதை மேலும் சுவாரஸ்யமாகி வலிமை பெற்றுள்ளது.
மலையாள பட உலகின் பழம்பெரும் நடிகை 'செம்மீன்' ஷீலா, இப்படத்தின் கதையை கேட்டு சிரித்து, சிரித்து கண்கலங்கினார் என்றும் மலையாள படங்களுக்கு இசையமைத்த அஜம்ல் அஜீஸ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார் எனவும் கூறியுள்ளார்

நான் கவர்ச்சியா நடிக்கக் கூடாதா? விஜயலட்சுமி

30.09.2012.By.Rajah.கொலிவுட்டில் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் நடிகை விஜயலட்சுமி.
இவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். தற்போதும் வெளியாகவுள்ள வனயுத்தம் படத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடித்துள்ளார்.
அடுத்து வர இருப்பது தமிழ் படம் எடுத்த சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படம்.
இதில் விஜயலட்சுமி படு கவர்ச்சியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் கூறுகையில், படத்துல எனக்கு நெகட்டிவ் கேரக்டர். எதையும் தூசு மாதிரி பார்க்குற பொண்ணு. எவ்வளவு திமிரா நடிக்க முடியுமோ, அவ்வளவு திமிரா நடிச்சிருக்கேன்.
எத்தனை படத்துலதான் குடும்ப குத்துவிளக்காக நடிச்சிட்டிருக்க முடியும். அதான் கிளாமரா நடிச்சிருக்கேன்.
ஏன் நான் கவர்ச்சியா நடிக்க கூடாதா என்ன? வனயுத்தம் பார்த்துட்டு ரெண்டாவது படம் பார்த்தீங்கன்னா கொஞ்சம் ஷாக்காத்தான் இருக்கும் என்கிறார்

ஆதிபகவன் படப்பிடிப்பு முடிந்தது: ஜெயம் ரவி மகிழ்ச்சி

30.09.2012.By.Rajah.அமீர் இயக்கி வரும் ஆதிபகவன் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி இசை சேர்ப்பு மற்றும் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக ஆதிபகவனுக்காக விதவிதமான கெட்-அப்புகளை போட்டு அதை மறைத்து வாழ்ந்து வந்த ரவி இப்போது நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ஆதிபகவன்ல ஒப்பந்தம் ஆகுறப்பவே இவ்ளோ காலம் ஆகும்னு எனக்குத் தெரியும்.
கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் பரவாயில்லையான்னு அமீர் சார் ஆரம்பத்திலேயே சொல்லிட்டார்.
ஏன்னா இது நிழல் உலக தாதாக்களோட கதை. படப்பிடிப்பு நடந்தப்போ கஷ்டமாத்தான் இருந்திச்சு.
அமீர் சார் அவர் நினைக்கிறது நம்மகிட்டேருந்து வர்ற வரைக்கும் விடமாட்டார்.
ஒரு சின்ன ஷாட்டுக்கு ஒரு நாள் வரைக்கும்கூட மெனக்கெடுவார். என்னடா நல்லா மாட்டிக்கிட்டோமேன்னு சில நேரங்கள்ல யோசிச்சிருக்கேன்.
ஆனா இப்போ படத்தை பார்க்குறப்போ அவ்ளோ சந்தோஷமா இருக்கு.
ரவி உங்களுக்கு பெரிய ஹிட் கொடுக்குறேன்னு அவரும் சொல்லியிருக்கார் என்றும் அது நடக்கும்னு நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார்


 
 

அனுஷ்காவின் பெரிய மனசு

30.09.2012.By.Rsajah.நடிகை அனுஷ்கா, நடிப்பதோடு மட்டும் நில்லாமல் தன்னுடன் உள்ளவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்.
தன் உதவியாளராக இருக்கும் திருநங்கைக்கு(வானம்) தான் நடிக்கும் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களைக் கொடுக்குமாறு இயக்குனரிடம் பரிந்துரை செய்கிறார்.
இரண்டாம் உலகம் படப்பிடிப்பில் சக நடிகர், நடிகைகளுக்கு யோகா கற்றுத் தந்தார்.
தெலுங்கில் நடிகை அமலா பாலுக்கு வாய்ப்பு வாங்கி தருகிறார். இது தவிர தற்போது புதிய விடயம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது தனக்கு நீண்ட காலமாக கார் ஓட்டியவருக்கு ஒரு காரைப் பரிசளித்துள்ளாராம்.
என்ன தான் நீண்ட காலமாக வாகன ஓட்டுநராக இருந்தாலும் யாரும் காரை பரிசளிப்பதில்லை. ஆனால் அனுஷ்கா இவ்வாறு செய்தமை அவருடைய நன்மதிப்பை திரையுலகில் சற்றே உயர்த்தியிருக்கிறது.
தற்போது இரண்டாம் உலகம், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

வித்யாபாலனுக்கு பூனை என்றாலே அலர்ஜியாம்

30.09.2012.By.Rajah.கமெரா முன்பு கவர்ச்சி காட்டவே பயம் கொள்ளாத பாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கு பூனை என்றாலே அலர்ஜியாம்.மறைந்த நடிகை சில்க் கதாப்பாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்றவர் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.
இதன் மூலம் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
படப்பிடிப்புகளில் மிகவும் தைரியமாக நடந்து கொள்ளும் வித்யாவுக்கு பூனைகள் என்றால் அலர்ஜியாம்.
ஒரு தடவை கமலிஸ்தான் ஸ்டியோவில் நடந்த படப்பிடிப்பிற்காக வந்திருந்தார் வித்யா பாலன்.
பரபரப்பான படப்பிடிப்புக்கு மத்தியில் உணவு இடைவேளை வந்தது.
அப்போது தனக்குரிய கேரவனுக்குள் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது சில பூனைகள் உள்ளே நுழைய, மிகவும் சப்தமிட்டுள்ளார் வித்யா பாலன்.
உடனே படக்குழுவினர் விரைந்து கேரவனை திறந்து பூனைகளை விரட்டியுள்ளனர்

பிறந்து, 20 நாட்களேயான பெண் குழந்தை விற்க முயற்சி. தாய், புரோக்கர்அதிரடி கைது


Sunday30,September2012.By.Rajah.பிறந்து, 20 நாட்களேயான பெண் குழந்தையை, 5,000 ரூபாய்க்கு விற்க முயன்ற தாய் மற்றும் புரோக்கரை போலீஸார் கைது செய்தனர்.திருச்சி உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். கார் டிரைவர். இவரது மனைவி கலைவாணி, 20. கலைவாணி, கர்ப்பமாக இருந்த போது அவரது கணவர் பிரிந்து சென்று விட்டார்.கடந்த, 20 நாட்களுக்கு முன், கலைவாணிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. கணவர், உறவினர்கள் துணை இல்லாததால், குழந்தையை வளர்க்க முடியாமல் கலைவாணி கஷ்டப்பட்டார்.முதலியார்சத்திரம் நடுத்தெருவைச் சேர்ந்த ராஜூ மனைவி பானு, 27விடம், கலைவாணி தன் நிலையை கூறினார். "குழந்தையை யாரிடமாவது விற்றுவிடலாம்' என, பானு ஆலோசனை கொடுத்தார்.

பீமநகர் கோரிமேடு கூனிபஜாரைச் சேர்ந்தவர் பரமசிவம்- முத்துலட்சுமி தம்பதியருக்கு, மூன்று மகன்கள். பெண் குழந்தை இல்லாததால், பானு, கலைவாணியின் பெண் குழந்தையை, முத்துலட்சுமியிடம் கொண்டு போய் கொடுத்தார்.முத்துலட்சுமிக்கும், அவரது மகன்களுக்கும், குழந்தையை பிடித்திருந்தது. குழந்தையை வளர்க்கும் எண்ணத்துடன் இருந்த முத்துலட்சுமியிடம், பானு, 5,000 ரூபாய் கேட்டார். அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி, பாலக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.பாலக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து, பெண் குழந்தையை பணத்துக்கு விற்க முயன்ற பானு, குழந்தையின் தாய் கலைவாணி ஆகியோரை கைது செய்தனர்.திருச்சி அரசு மருத்துவனையில் உள்ள, அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தையை ஒப்படைத்தனர்.