30.09.2012.By.Rajah,கொலிவுட்டில் விரைவில் வெளியாக உள்ள த்ரில்லர் படமான 'சௌந்தர்யா'வை இயக்கியவர் சந்திரமோகன். |
இவர் தற்போது ஏ.பி.சி.ட்ரீம்ஸ் எண்டர்டெயினர்ஸ் சார்பில் 'பாலக்காட்டு மாதவன்'
என்ற படத்தை இயக்கியுள்ளார். இது குறித்து சந்திரமோகன் கூறுகையில், கதையின் நாயகனாக கலக்கல் கதாபாத்திரத்தில் விவேக் ரசிகர்களை சிரிக்க வைக்கப்போகிறார். கதையின் நாயகியாக நடித்துள்ள சோனியா அகர்வாலுக்கு இப்படம் திருப்புமுனையாக அமையும். தமிழ் சினிமாவின் திரைக்கதை திலகம் கே.பாக்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அவரின் ஆலோசனையில் படத்தின் திரைக்கதை மேலும் சுவாரஸ்யமாகி வலிமை பெற்றுள்ளது. மலையாள பட உலகின் பழம்பெரும் நடிகை 'செம்மீன்' ஷீலா, இப்படத்தின் கதையை கேட்டு சிரித்து, சிரித்து கண்கலங்கினார் என்றும் மலையாள படங்களுக்கு இசையமைத்த அஜம்ல் அஜீஸ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார் எனவும் கூறியுள்ளார் |
ஞாயிறு, 30 செப்டம்பர், 2012
கலக்கலான கொமெடி படத்தில் விவேக்-சோனியா அகர்வால் ஜோடி
ஞாயிறு, செப்டம்பர் 30, 2012
செய்திகள்