27.09.2012.By.Rajah.கூகுளின் பிரேசில் தலைவரான
பாபியோ ஜோஸ் சில்வா கொயல்கோவை(Fabio Jose Silva Coelho) கைது செய்ய பிரேசில்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூகுளின் யூடியூப்பில் வெளியாகும் வீடியோக்கள் உலக அளவில் மிகப் பெரிய வரவேற்பை
பெற்றுள்ளது. அது போன்று ஒவ்வொரு நாளும் இந்த யூடியூப்பில் புதுப்புது வீடியோக்கள்
வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பிரேசிலில் மேயர் தேர்தலில் போட்டியிடும் அல்சிடஸ் பெர்னல் என்பவரைப் பற்றிய இரு வீடியோக்கள் யூடியூப்பில் வந்திருக்கின்றன. மேலும் அவரை பற்றி தாக்கும் வகையில் அந்த வீடியோக்கள் வந்திருக்கிறன. எனவே இந்த வீடியோக்கள் பிரேசிலில் தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தும் என்று கருதி அந்த வீடியோக்களை யூடியூப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூகுளுக்கு ஏற்கனவே பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதை கூகுள் செய்யவில்லை. அதனால் அல்சிடஸை கைது செய்ய மட்டோ க்ராசோ டு சோல் மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதி பால்வியோ பெரன் உத்தரவிட்டிருக்கிறார். மேலும் 24 மணி நேரத்திற்குள் அந்த மாநிலத்தில் யூடியூப் வீடியோக்கள் தடை செய்யப்படவும் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் கூகுளின் தலைவரை கைது செய்ய எந்தவித அதிகாரப்பூர்வ கட்டளையும் வரவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர் |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
புதன், 26 செப்டம்பர், 2012
கூகுளின் பிரேசில் தலைவரை கைது செய்ய உத்தரவு
புதன், செப்டம்பர் 26, 2012
இணைய செய்தி
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின்
புதன், செப்டம்பர் 26, 2012
தகவல்கள் புகைப்படங்கள்
26.09.2012.By.Rajah.இடைவிடாத முயற்சியே வெற்றிக்குக் காரணம்; யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர் | |||||
நடத்து முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளமை எனது ஆசிரியர்களின் மாணவர்களின் விட முயற்சியினால் கிடந்த வெற்றி என யாழ் .இந்து ஆரம்பப் பாடசாலையின் அதிபர் சு.தியாகலிங்கம் தெரிவித்தார்.
வட மாகாணத்திலே யாழ். இந்து ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சை பெறுபேற்றில் முதல் நிலை பெற்றுக் கொண்டமை தொடர்பாக ஒன்லைன் உதயனுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். யாழ் இந்து ஆரம்ப பாடசாலையில் இருந்து இம்முறை பரீட்சைக்கு 309 மாணவர்கள் தோற்றியுள்ளனர். இதில் 143பேர் சித்தியடைந்துள்ளனர் இது எமது பாடசாலைக்கு கிடந்த மிகப் பெரும் வெற்றியாகும் அத்துடன் கலைச்செல்வன் கீர்த்திகன் 191 புள்ளிகளையும், ஸ்ரீகந்தராசா ஆரணி 190 புள்ளிகளையும் பெற்று மாவட்ட நிலையில் முன்னனியில் உள்ளனர் என அவர் தெரிவித்தார்.[புகைப்படங்கள்¨] | |||||
உங்களது கணனி திரை Automatic Screen Refresh ஆகும்படி செய்வதற்கு
புதன், செப்டம்பர் 26, 2012
செய்திகள்
26.09.2012.By.Rajah.உங்களது கணனியில் ஏதாவதொரு மாற்றத்தை
செய்த பின்னர், கணனி திரை தானாகவே Refresh(Automatic Screen Refresh) ஆகும் படி
செய்து கொள்ளலாம்.
இதற்கு முதலில் Start Menu-வில் சென்று RUN என்பதில் regedit என்று கொடுக்க
வேண்டும். தற்போது உங்களுக்கு Registry Editor என்ற விண்டோ ஓபன் ஆகியிருக்கும். இதில் கீழே உள்ளது போன்று Update வரை செல்லவும். HKEY_LOCAL_MACHINESystemCurrentControlSetControlUpdateMode சென்ற பின் வலது பக்கத்தில் உள்ள DWORD என்பதை கிளிக் செய்து, அதில் உள்ள Data Value என்பதில் 1 இற்கும் 5 இற்கும் இடையில் விரும்பிய இலக்கத்தை கொடுத்து கணனியை ஒருமுறை Restart செய்யவும். இனிமேல் கணனியில் ஏதேனும் மாற்றம் செய்தால் தன்னிச்சையாகவே கணனி திரையானது Refresh ஆகும் |
டுபாயில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த தம்பதியர் மீது தாக்குதல்!
புதன், செப்டம்பர் 26, 2012
செய்திகள்

குறித்த தம்பதியர் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டு எழுந்து சென்ற தமது கணவரை பிறிதொருவர் தாக்குவதை தாம் கண்டதாக இலங்கை பெண் தெரிவித்துள்ளார்.
பின்னர் குடும்ப நண்பராக கருதப்படும் சந்தேகத்திற்குரியவர் தம்மையும் தாக்குவதற்கு துரத்தியதாகவும், ஆடையில் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் தமது கழுத்தில் கீறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரால் தமது கணவர் தலையிலும், கைகளில் கடுமையாக தாக்கப்பட்டு கிடந்ததாகவும் அந்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து பெண் அலறிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வீதியில் ஓடிய போதும் சந்தேகத்திற்குரியவர் அவரை பின்தொடர்ந்து துரத்தி சென்றுள்ளார்.
அந்த வீதியில் வந்த பொது மகன் தாக்க வந்தவரை தடுத்து நிறுத்திய போது பொலிஸார் சம்பவ இடத்தை அடைந்து சந்தேககத்துக்குரிய குடும்ப நண்பரை கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான இலங்கை தம்பதியர் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த தம்பதியர் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் டுபாய்க்கு சென்று தங்கியுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் மற்றைய பகுதியில் தங்குவதற்கு பிறிதொரு தரப்பினர் கோரியிருந்தனர்.
எனினும், குறித்த தம்பதியர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, நேற்று மதுபோதையில் வந்த இருவர் தமது கணவரை அச்சுறுத்திவிட்டு சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்திருந்தார்.
அதனையடுத்தே தாம் உறங்க சென்ற பின்னர் சந்தேகத்திற்குரிய ஒருவர் வீட்டு கதவை உடைத்து தம்மை தாக்கியதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வர்த்தகத் தொகுதியொன்றுக்கு அருகில் நேற்று பெண்ணொருவருக்கு வன்முறையாக இடையூறு விளைவித்த இலங்கை பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டு குவைத்தின் பஹாஹுல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்..
குறித்த வர்த்தகத் தொகுதியின் காவலாளி குவைட் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டு பொலிஸாருக்கு இலங்கை பிரஜையின் செயற்பாடு குறித்து அறிவித்துள்ளார்..

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகள் வெளியீடு
புதன், செப்டம்பர் 26, 2012
செய்திகள்

26.09.2012.By.Rajah.2012ம் ஆண்டிற்குரிய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் அதன் அடிப்படையில் சகல மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகள் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் மாதம் 26 ம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் நாடு பூராகவும் அமைக்கப்பட்ட 2500 பரீட்சை நிலையங்களில் தோற்றியிருந்தனர். பரீட்சைப் பெறுபேறுகளுடன் வெட்டுப் புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளின் பிரகாரம் தமிழ் மொழி மூல மாவட்ட ரீதியிலான குறைந்த வெட்டுப் புள்ளிகள் வருமாறு,
கொழும்பு 149
முல்லைத்தீவு 145
கம்பஹா 149
மட்டக்களப்பு 147
களுத்துறை 149
அம்பாறை 147
கண்டி 149
திருகோணமலை 147
மாத்தளை 149
குருணாகல் 149
நுவரெலியா 145
புத்தளம் 143
காலி 149
அநுராதபுரம் 145
மாத்தறை 149
பொலன்னறுவை 145
அம்பாந்தோட்டை 140
பதுளை 146
யாழ்ப்பாணம் 148
மொனறாகலை 142
கிளிநொச்சி 146
இரத்தினபுரி 146
மன்னார் 146
கேகாலை 149
வவுனியா 146 –
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி அகில இலங்கை மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று காலி ரிஜ்மன்ட் கல்லூரி மாணவனான கே.௭ஸ். கொடித்துவக்கு மற்றும் தலாத்துஓயா கனிஷ்ட பாடசாலை மாணவி ஆர்.௭ம்.ஏ.யு. மதுவந்தி ஆகியோர் முதலிடங்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் 196 புள்ளிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய மடட்டத்தில் தமிழ் மொழி மூல மற்றும் சிங்கள மொழி மூலமான அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களின தரவுகள் தற்போது தரப்படுத்தப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இப்பரீட்சை முடிவுகள் கொழும்பு மாவட்டப் பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் தூரப் பிரதேச பாடசாலைகளுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை ௭டுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இப்பரீட்சை பெறுபேறு வெளியிடுவதற்கு முன் பல தடவைகள் நுணுக்கமாகப் பரிசீலனைகள் பல செய்யப்பட்டு பெறுபேறுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகையால் இப்பரீட்சையின் விடைத்தாள்கள் மீள்பரிசீலனை செய்யப்படமாட்டாது ௭ன்றும் தங்களது பாடசாலையில் யாராயினும் பரீட்சார்த்தியின் பெறுபேறு நம்ப முடியாத வகையில் இருக்குமாயின் பரீட்சைகள் திணைக்களத்துக்கு அதிபரினாலேயே மனு செய்யப்பட வேண்டுமெனவும் இம்மனுக்கள் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் ஜயந்த புஹ்பகுமார சகல பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்
இலங்கை தொடர்பில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள், இராஜாங்கச் செயலாளர் ஹிலரிக்கு கடிதம்
புதன், செப்டம்பர் 26, 2012
செய்திகள்
26.09.2012.By.Rajah.இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் 31 செனட் உறுப்பினர்கள், அந்த நாட்டு இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டனுக்கு கடிதம் ஒன்றை நேற்றைய தினம் அனுப்பி வைத்துள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பில், இலங்கையுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னரும், இலங்கை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும அதில சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுவரையில் மேற்கொண்டதைப் போலவே, இலங்கை மீண்டும் சர்வதேச நாடுகளை ஏமாற்ற முனைவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்

சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை இலங்கை சமநிலையில் பேண வேண்டும்: இராஜதந்திரிகள் கோரிக்கை
புதன், செப்டம்பர் 26, 2012
செய்திகள்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான மற்றும் பொது சேவைகள் பீடத்தின் பேராசிரியர் ஜயதேவ உயங்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்னரே சீனாவிடம், பங்களாதேஸ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளை இந்தியா இழந்து விட்டது.
இந்த நிலையில் இலங்கையையும் இழப்பதை இந்தியா விரும்பவில்லை.
இதற்கான முழு நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசியல் இலாப நோக்கம் இன்றி, இரண்டு நாடுகளுடனும் சுமூக உறவினை முன்னெடுப்பதே இராஜதந்திரமாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவோ, சீனாவோ இலங்கையை கைவிடுவது என்பது, இலங்கைக்கே ஆபத்தானதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை தடுக்க இரகசிய மகஜர்
புதன், செப்டம்பர் 26, 2012
செய்திகள்
26.09.2012.By.Rajah. எதிர்வரும் 2013ம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை தடுக்க இரகசிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளருக்கு , ஏழு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களினால் இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், புலி உறுப்பினர்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை நடத்தல் உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அமர்வை நடத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தாருஸ்மன் அறிக்கை பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்துமாறு வலிறுத்த வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு இரகசிய மகஜர் அனுப்பி பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நிறுத்த முயற்சிப்போர் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)