siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 30 நவம்பர், 2012

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி நான்கு யானைகள் பலி

  மட்டக்களப்பு, வாகனேரி பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி நான்கு யானைகள் இறந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். 119- 120 ஆவது மைல் கல்லுக்கு இடைப்பட்ட பகுதியில், நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 33 ஆயிரம் வோல்ட் மின்சாரம் தாக்கியதிலேயே இந்த யானைகள் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மின்சாரக் கம்பமொன்று உடைந்திருந்த பகுதியொன்றிலுள்ள மலையொன்றைக் கடந்து தொப்பிகல பிரதேசத்துக்கு செல்ல முற்பட்ட போதே மேற்படி யானைகள் மின்சாரம்...

நீர்மூழ்கி மற்றும் போர்க்கப்பலை அறிமுகப்படுத்தியது?

ஈரான் தனது சொந்த தயாரிப்பான நீர்மூழ்கிகள் மற்றும் போர்க்கப்பல்களை வெளி உலகிற்கு காட்டியுள்ளது. இவற்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஹேர்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள பந்தர் அபாஸில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வின் போது, 2 காதிர் ரக நீர்மூழ்கிகள் மற்றும் சினா-7 போர்க்கப்பல் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. காதிர் ரக நீர்மூழ்கி கப்பல்கள் ஒரே நேரத்தில் ஏவுகணைகளையும், டொபிடோக்களையும் பயன்படுத்தி தாக்கமுடியும் என ஈரான் தெரிவித்துள்ளது. மேலும்...

போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்கில் அதிகாரிகள் விடுவிப்பு

போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் பிரதமர் மற்றும் அவரது சகாக்கள் இருவரை சர்வதேச நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. கொசாவா முன்னாள் பிரதமரும், கொசாவா விடுதலைப்படை முன்னாள் தளபதியுமான ரமூஸ் ஹரடினாஜ் மற்றும் இவரது சகாக்களான இத்ரிஸ் பலாஜ், லாஹி பிராஹிமாஜ் ஆகியோர் மீது போர்க்குற்றங்கள் புரிந்ததாக தி ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 1990ஆம் ஆண்டுகளில் தனிநாடு கோரி போராடிய அல்பேனிய...

தூதரகத்தில் தஞ்சமடைந்த அசாஞ்ச் நுரையீரல் நோயால் கடும் அவதி

அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் இணையத்தள நிறுவனர் அசாஞ்ச். இவர் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயார் நிலையில் இருந்த போது, சுவீடன் நீதிமன்றத்தில் அசாஞ்ச் மீது கற்பழிப்பு மற்றும் பாலியல் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே இங்கிலாந்தில் தங்கியிருந்த அசாஞ்சை நாடு கடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து லண்டனிலுள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார் அசாஞ்ச். பல மாதமாக தூதரக...

ஆசிட் ஊற்றி முகத்தை சிதைத்த கணவன்: வங்கதேச பெண்ணின் சோக கதை

வங்கதேசத்தில் முகத்தில் ஆசிட் ஊற்றி சிதைத்த கணவனுடன் மறுபடியும் குடும்பம் நடத்தும் வேதனைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் பெண் ஒருவர். வங்கதேசத்தின் ஷக்திரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் நூர்பானு. இவர் கடந்த 18 வருடங்களாக தனது கணவரிடம் பல்வேறு விதமான கொடுமைகளை அனுபவித்து வந்தார். இதனால் மனம் வெறுத்துப் போன இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து கோரி விண்ணப்பித்தார். இதை அறிந்து கோபமடைந்த இவரது கணவர் மனைவி முகத்தில் ஆசிட் வீசினார். இதில்...