siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 30 நவம்பர், 2012

போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்கில் அதிகாரிகள் விடுவிப்பு

போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் பிரதமர் மற்றும் அவரது சகாக்கள் இருவரை சர்வதேச நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. கொசாவா முன்னாள் பிரதமரும், கொசாவா விடுதலைப்படை முன்னாள் தளபதியுமான ரமூஸ் ஹரடினாஜ் மற்றும் இவரது சகாக்களான இத்ரிஸ் பலாஜ், லாஹி பிராஹிமாஜ் ஆகியோர் மீது போர்க்குற்றங்கள் புரிந்ததாக தி ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 1990ஆம் ஆண்டுகளில் தனிநாடு கோரி போராடிய அல்பேனிய கொரில்லா படையினருக்கும், செர்பிய படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
அப்போது செர்பியர்களையும், அல்பேனியர்கள் அல்லாதவர்களையும் கொன்றதாகவும், சித்ரவதை செய்ததாகவும் ஹரடினாஜ், இத்ரிஸ் பலாஜ் ஆகியோருக்கு எதிராக 6 போர்க் குற்ற வழக்குகளும், லாஹி பிராஹிமாஜ் மீது 4 போர்க்குற்ற வழக்குகளும் பதிவாகின.
இந்த வழக்கின் மறுவிசாரணையில் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி மூவரையும் விடுதலை செய்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.

0 comments:

கருத்துரையிடுக