
பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென் கொரியா விடுத்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது.சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த பிப்ரவரி மாதம் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. இதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.
எனினும், மீண்டும் ஏவுகணைச் சோதனைகளை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவையும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும்.
அமெரிக்காவையும் தாக்குவோம் என்று வடகொரியா அறிவித்துள்ளது....