siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 15 நவம்பர், 2012

ரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிறப்பு தகவல்கள்?



 
 அமெரிக்கஅதிபர்ஒபாமாவின் லிமோசின்ரககார்ஜெனரல் மோட்டார்ஸ்கீழ்செயல்படும் கேடில்லாக்நிறுவனத்திடமிருந்து கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்டது. ராணுவகவசவாகனம்போன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இந்த லிமோசின்ரக காரின் தொழில்நுட்பம், பாதுகாப்புவசதிகள்ஆகியவை மிகவும்ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. தி பீஸ்ட் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கார் அமெரிக்க அதிபரின் நடமாடும் அலுவலகமாக கூறப்படுகிறது. இந்த காரின் சிறப்பம்சங்களின் தகவல்களை காணலாம்.

போயிங் 757 விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கதவுகளுக்கு இணையான தடிமன் கொண்ட கதவுகள் இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் தகடுகள் ராணுவ கவச வாகனங்களில் பயன்படுத்தப்படும் 8 இஞ்ச் தடிமன் கொண்ட உறுதியான தகடுகளால் மூடப்பட்டிருக்கும்.

காரின் கீழ்ப்பாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் தடிமன் கொண்ட தகடுகள் கண்ணி வெடி தாக்குதல்களில் கூட சேதமடையாது. இதன் பெட்ரோல் டேங்க்கும் ஏவுகணை தாக்குதலில் கூட தீப்பிடிக்காது. குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. டிரைவர் இருக்கையின் கீழே தற்காப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
அதிபர் ஒபாமா உள்பட 7 பேர் இந்த காரில் பயணம் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. முன்பக்க டிரைவர் வரிசை இருக்கையில் 2 பேர் அமரலாம். கண்ணாடி தடுப்புடன் கூடிய பின்புற கேபினில் பின்னோக்கி 3 இருக்கைகளும், முன்னோக்கி 2 இருக்கைகளும் உள்ளது. இதில், முன்னோக்கி பொருத்த்பபட்டிருக்கும் இரண்டு இருக்கைகளில் ஒன்று அதிபருக்கான ரிசர்வ் செய்யப்பட்ட இருக்கை.
இரு இருக்கைகளுக்கு இடையில் மடக்கி விரிக்கும் வசதிகொண்ட டேபிள் உள்ளது. இதில், லேப்டாப், தொலைபேசி ஆகியவை வைக்கப்பட்டிருக்கும். காரின் இருக்கைகள் அனைத்தும் உயர்தர லெதர் மூலம் கைவேலைப்பாடுகளோடு மிக சொகுசாக தயாரிக்கப்பட்டுள்ளது
இது அதிபரின் நடமாடும் அலுவலகம் என்பதால் இன்டர்நெட் இணைப்பு, செயற்கைகோள் தொலைபேசி மற்றும் அவசர காலங்களில் ராணுவ தலைமையகமான பென்டகன் மற்றும் துணை ஜனாதிபதியுடன் உடனடியாக பேசும் வகையில் தொலைபேசியும் இருக்கிறது.அதிபர் ஒபாமாவின் அதிகாரப்பூர்வமான இந்த காரின் டிரைவர் அமெரிக்க புலனாய்வு பிரிவான சிஐஏ., அமைப்பு மூலம் பயிற்சி அளிக்கப்பட்டவர். எத்தகைய ஆபத்தான சூழ்நிலைகளிலும் காரை வேகமாகவும், சாதுர்யமாகவும் ஓட்டுவதற்கு சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
காரின் அனைத்து பக்கங்களிலும் இரவிலும் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் வாய்ந்த நைட் விஷன் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த காரி்ல் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருப்பதால், கார் எந்த பகுதியில் சென்றுகொண்டிருக்கிறது என்பதை செயற்கைகோள் உதவியுடன் கண்காணிக்க முடியும்.
அதிபர் ஒபாமா உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும்போது, அமெரிக்க வான்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தின் மூலம் இந்த கார் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக, அந்த விமானத்தில் சிறப்பு வசதிகளும் இருக்கிறது.
கண்ணீர் புகை குண்டுகள், நவீன ரக துப்பாக்கிகள், தீத்தடுப்பு கருவி உள்ளிட்ட ஏராளமான தற்காப்பு பாதுகாப்பு சாதனங்களும் இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. நச்சுப் புகை மற்றும் ரசாயன தாக்குதல்களை சமாளிக்கும் வகையில், உட்புறத்தில் காற்றை சுத்திகரித்து வெளியில் அனுப்பும் விஷேச கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
ரன் பிளாட் டயர்கள் பொருத்தப்பட்டிருப்பதால், பஞ்சரானால் கூட காரை வேகமாக ஓட்டிச் செல்ல முடியும். இந்த கார் 5 டன் எடை கொண்டது. 100 கிமீ செல்வதற்கு 30 லிட்டர் வரை எரிபொருளை உறிஞ்சித் தள்ளும். மேலும், அமெரிக்க போக்குவரத்து துறையின் சுற்றுச் சூழல் மாசுபாடு விதிகளிலிருந்து இந்த காருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் அதிபர் ஒபாமா இந்த காரில் செல்லும்போது அமெரிக்க கொடியும், வெளிநாட்டு சுற்றுப் பயணம் செய்யும்போது காரில் ஒரு பக்கத்தில் அமெரிக்க கொடியும், மறுபக்கத்தில் சுற்றுப் பயணம் சென்றுள்ள நாட்டு கொடியும் பறக்கவிடப்பட்டிருக்கும்

தமிழக இளைஞர்கள் போராட வேண்டும்!தா.பாண்டியன்

          
15.11.2012.By.Rajah.ஈழத்தமிழர்பிரச்சினையில்மத்திய அரசையும், திமுகவையும் சாடியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன். அதேசமயம், தமிழக இளைஞர்கள் போர்க்குரல் எழுப்பி ஒன்றுபட்டி போராடி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

சென்னையில் இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

இலங்கையில் நடைபெற்ற போரின் கடைசி நாட்களில் நடந்த படுகொலைகள் இதுவரை நடைபெறாத படுகொலையாகும். இலங்கையில் நடைபெற்ற படுகொலை பற்றி ஐக்கிய நாடுகள் சபை மறைத்துவிட்டது. அதன் பிரதிநிதிகள் தங்கள் கடைமைகளில் இருந்து தவறிவிட்டார்கள் என்று அவர்களை குற்றம்சாட்டுவதற்கு முன்பு நாம் நம்நாட்டில் செய்யவேண்டிய கடைமைகளை முறையாக செய்தோமா? என்பதை இப்போது நம்மை நாமே பரிசோதித்து கொள்ளவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

ஐ.நா. சபையின் பிரதிநிதிகள் தங்கள் கடமையில் தவறிவிட்டார்கள் என்ற செய்தி வந்தபிறகு, இன்றைக்கு ஐ.நா. சபையை மட்டும் குற்றம்சாட்டி பயன் இல்லை. நாம் இந்திய அரசின் மூலமாகத்தான் பேசியாகவேண்டும். மத்திய அரசு ஐ.நா. சபையில் ஆற்றவேண்டிய கடமையை ஆற்றியதா? என்பதுதான் நாம் கேட்கவேண்டிய கேள்வி.

மத்திய அரசு தமிழ் மக்களின் குரலுக்கு மதிப்பு கொடுத்ததா? என்பது நாம் கேட்கவேண்டிய முக்கியமான கேள்வி. ஐ.நா. சபையின் குழுவே தன் குற்றத்தை ஒப்பு கொண்டு செய்தி வெளியிட்ட பிறகுகூட, தமிழக மக்களும், தமிழ்நாட்டு கட்சிகளும்தான் கண்டித்து குரல் கொடுத்து வருகின்றன.

டெல்லியில் உள்ள மகான்கள் இதுவரை இது பற்றி பேசவில்லை. 2009 மே மாதம் 17-ந் திகதி இலங்கையில் உலகம் கண்டிராத படுகொலை நடந்த நேரத்தில் டெல்லி மந்திரி சபையில் இருந்த தமிழர்கள் யார்? இவர்களும் இலங்கையில் நடந்த படுகொலையை தெரிந்து கொள்ளாமல் அவர்கள் கேபினட் அமைச்சர்களாக இருந்ததால் அவர்கள்தான் தமிழ் மக்கள் முன்பு முதல் குற்றவாளிகளாக ஒப்புதல் வாக்குமூலம் தரவேண்டும். அதற்குரிய தண்டனையையும் ஏற்க தயாராக வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள சிங்கள அரசு முன்வராவிட்டால் ஐ.நா. சபையில் இருந்து இலங்கையை நீக்கவேண்டும் என்றும் இந்திய அரசு வாதிடவேண்டும்.

இவை எல்லாம் வாதிடவைக்கவேண்டும் என்றால் ஐ.நா. சபையில் ஒரு கிளார்க்கிடம் மனு கொடுத்துவிட்டு வருவதின் மூலம் நடக்காது. தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் போர்க்கால உணர்வுகளுடன் போராளிகளாக மாறவேண்டும்.

நாம் இங்கிருந்து போர்க்கோலம் பூண்டு போர்க்குரல் எழுப்பாவிட்டால், மத்திய அரசை அந்த கடமையை செய்யவைக்கமுடியாது. முல்லைத்தீவில் இன்றும் படுகொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த செய்திகளை எல்லாம் தமிழ்நாட்டு இளைஞர்கள் அரசியல் கட்சி தலைவர்களிடமிருந்து தாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு முழு உரிமை பெற்றுத்தரும் வரையில் இனி எதிலும் கவனம் செலுத்தமாட்டோம் என்ற போர்க்குரலை தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எழுப்பினால் மத்திய அரசு பணியும். பணிய தவறினால் மத்திய அரசின் தன்மை மாற்றப்படும். பிறகு நியாயம் பிறக்கும். இலங்கையில் இறந்தவர்களின் உயிரைத்தான் மீட்க முடியாது. உரிமைகளை மீட்கமுடியும்.

இலங்கை தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு உயிரை கொடுப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்றார் அவர்

ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்தே செயற்பட்டோம்!?


        15.11.2012..By.Rajah..யுத்தத்தின்போதுஇலங்கையில்செயற்பட்டஐக்கியநாடுகள்சபையின்  முகவர்நிறுவனங்களுக்கோஐ.நா.வின்பணியாளர்களுக்கோ அரசாங்கம்ஒருபோதும்எவ்விதமானஅழுத்தங்களையோபிரயோகிக்கவில்லைஎன்கிறது இலங்கை அரசு.
அச்சுறுத்தல்களைபிரயோகிக்கவில்லை.ஐ.நா.பணியாளர்கள் எவராலும்அழுத்தங்களுக்கு உட்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபைக்குஒருநாடு அழுத்தமோ கட்டாயப்படுத்தலையோ பிரயோகிக்க முடியுமா? மஹிந்த சமரசிங்க கேள்வியெழுப்பினார்.
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது ஐக்கிய நாடுகள் செயற்பட்டவிதம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஐ.நா. உள்ளக விசாரணைக்குழுவின்அறிக்கைஉத்தியோகபூர்வமாக வெளியிடப்பட முன்னர் அதுதொடர்பில் எதுவும் கூறமுடியாது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்படி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கையில் செயற்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்களுக்கோ ஐ.நா. பணியாளர்களுக்கோ அரசாங்கம் ஒருபோதும் எவ்விதமான அழுத்தங்களையும் வெளியிடவில்லை. அவர்கள் எவராலும் அச்சுறுத்தலுக்கு உட்படவில்லை.
ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு நாடு இவ்வாறு அழுத்தமோ, கட்டாயப்படுத்தலையோ பிரயோகிக்க முடியுமா? அவ்வாறு எவ்விதமான அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை. யுத்தகாலத்தில் நாம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்தே செயற்பட்டோம்.
ஐ.நா எம்முடன் இணைந்தே செயற்பட்டது. அதனை எடுத்து அழுத்தங்கள் எதுவும் இருக்கவில்லை. அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக கூறப்படுவதை மறுக்கின்றேன்.
எதிர்வரும் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு நாங்கள் போருக்குப் பின்னரான நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்றங்களை வெளிப்படுத்துவோம்.
அதில் சிறந்த முன்னேற்றங்களைக் காட்டமுடியும் என்பது எமது நம்பிக்கையாகும் என தெரிவித்தா.
இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இலங்கையில் ஐ.நா செயற்பட்டவிதம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு,
அந்த அறிக்கை இன்னும் வெளிவரவில்லை. அறிக்கையின் உள்ளடக்கங்கள் சில கசிந்துள்ளனவே தவிர எதுவும் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனவே அதுதொடர்பில் நான் தற்போது கருத்து வெளிவிடுவது சரியல்ல எனப் பதிலளித்தார்

ஊடகங்களுக்குள்ளும் புலிகள் - சிறீலங்கா அரசாங்கம் !


15.11.2012.By.Rajah.புலிகளின் தளபதி கேணல் பரிதி அவர்களைக் கொலைசெய்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் பிரான்சில் இரண்டு இலங்கையர்கள் கைதாகியுள்ளனர் என்பது யாவரும் அறிந்தவிடையம். ஆனால் இவர்களில் ஒருவர் தாம் இலங்கை அரசிடம் 50,000 யூரோக்களைப் பெற்று, இக் கொலையை செய்ததாக ஒப்புதல் வாகுமூலம் அளித்துள்ளார் என பிரான்சில் இருந்து வெளியாகும் ஊடகம் தெரிவித்துள்ளது.
இச் செய்திகள் வெளியானதை அடுத்து இலங்கை அரசு ஆடிப்போயுள்ளது. இலங்கை அரசுக்கும் இக் கொலைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று பிரான்ஸ் பொலிசார் கடுமையாக வீசாரிக்க ஆரம்பித்துள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது.

இந் நிலையில், பிரான்ஸ் ஊடகங்களுக்குள்ளும் புலிகள் ஊடுருவிட்டதாக இலங்கை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளால் தான் இதுபோன்ற செய்திகளை பிரெஞ்சு ஊடகங்கள் மூலம் வெளியிடுவதாக அது மேலும் குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள இனவாத ஊடகமான த ஐலண்ட் நாளேட்டிற்கு கருத்துரைத்திருக்கும் சிறீலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரமுகர் ஒருவர், பிரெஞ்சு ஊடகங்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவி அழுத்தங்களை பிரயோகித்து வருவதன் காரணமாகவே தமது முகவர்கள் மீது பரிதியின் படுகொலைக்கான பழி சுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பரிதியின் கொலையுடன் தமது முகவர்களை தொடர்புபடுத்தி பிரெஞ்சு ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் குறித்து பிரெஞ்சு அரசாங்கத்துடன் பாரிசிலுள்ள தமது தூதரகத்தினர் பேச்சுக்களை நிகழ்த்தியிருப்பதாகவும் த ஐலண்ட் நாளேட்டிற்கு சம்பந்தப்பட்ட சிறீலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரமுகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

சரியான நேரத்தில் இந்தியா குரல் கொடுத்துள்ளது!

          
 
15.11.2012.ByRajah. இலங்கை போரின் போது மக்களை பாதுகாக்க ஐ.நா. தவறியமை தொடர்பான உள்ளக அறிக்கை முழுமையாகக் கிடைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் இ. அகமது தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ. அகமது இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்னையில் சரியான நேரத்தில் இந்தியா குரல் கொடுத்துள்ளது. ஐ.நாவி.ன் அறிக்கை முழுமையாகக் கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்

ஐ.நாவின் தவறுகள்-நிபுணர் குழுவை நியமிக்கிறார்

15.11.2012.B.Rajah.      சிறிலங்காவில் ஐ.நா பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக சாள்ஸ் பெற்றி குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை ஆராய்ந்து, தமக்கு ஆலோசனை கூறுவதற்கான மூத்த அதிகாரிகள் குழுவை உடனடியாக நியமிக்கவுள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாகஅவர்வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது,
“ஐ.நா நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில், சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சாள்ஸ் பெற்றி குழு, எட்டு மாதகாலமாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 
இந்த அறிக்கையில் ஐ.நா தலைமையகம், முகவர் அமைப்புகள், பாதுகாப்புச்சபை, மனிதஉரிமைகள் பேரவை என்பன தமது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கண்டறிவு உலகம் முழுவதிலும் எமது பணிகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொருத்தமான பாடங்களை வரைவதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
உலக மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு, குறிப்பாக உதவியை ஐ.நாவின் எதிர்பார்த்துள்ள மோதலில் சிக்கியுள்ளோருக்கு அது அவசியம்.
சிறிலங்காவில் நிலைமைகளைத் தடுக்க நாம் மேற்கொண்ட முயற்சிகளை குழுவின் அறிக்கை அங்கீகரித்துள்ளது.
எவ்வாறாயினும், நாம் இன்னும் அதிகம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டிய முழுமையான பொறுப்பு உள்ளது.
அதன் உடனடியான முதல் நடவடிக்கையாக, இந்தப் பரிந்துரைகளை கவனமாக ஆராய்ந்து எனக்கு ஆலோசனை கூறுவதற்கு நான் ஒரு மூத்த அதிகாரிகள் குழுவை நியமிக்கவுள்ளேன்.
னைய நடவடிக்கைகள் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படும்.
ஐ.நாவின் சட்டபூர்வத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு வெளிப்படைத்தன்மையும், பொறுப்புக்கூறலும் மிகவும் முக்கியமானவை.
இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்துவதற்கு நான் பல நாட்கள் முன்னதாகவே தீர்மானித்து விட்டேன்.
ஐ.நா பொதுச்செயலர் பதவியை ஏற்றுக் கொண்ட காலத்தில் இருந்து தீங்கில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் ஐ.நாவின் அடிப்படை நோக்கத்தை வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளேன்.
பின்னடைவுகளில் இருந்து மீள்வதற்கு, தவறுகளில் இருந்து பாடம் கற்று, எமது பொறுப்புகளை வலுப்படுத்திக் கொண்டு அர்த்தமுள்ள வகையில் செயற்பட்டு, எதிர்காலத்தில் திறம்படச் செயற்படுவதே மனிதனின் கடமை.
இந்தக் கோட்பாடுகள் நோக்கங்களை அடைய, உருவாக்கப்பட்ட குழு திறம்பட செயற்பட எம்மை வழிகாட்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

ஐ.நா நிறைவேற்றத் தவறியது - 128 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ??

    
15.11.2012.By.Rajah.சிறிலங்காவில் போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஐ.நா நிறைவேற்றத் தவறியது குறித்த விபரங்கள் அடங்கிய உள்ளக விசாரணை அறிக்கையை, ஐ.நா பொதுச் செயலர் நேற்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் மீதான ஐ.நா பொதுச்செயலரின் உள்ளக மீளாய்வு குழுவின் அறிக்கை என்ற பெயரில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையில், பொதுமக்களின் இழப்புகள் பற்றி விபரங்களை ஐ.நா வெளியிடத் தவறியது, மற்றும் பொதுமக்கள் கொலைகளுக்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு இருந்த பொறுப்பு ஆகியவற்றையும் விபரிக்கிறது.
சிறிலங்கா அரசின் அச்சுறுத்தலினால் பரந்தளவிலான படுகொலைகள் குறித்து தகவல்களை வெளியிட ஐ.நா அதிகாரிகள் பயந்தார்கள் என்றும், பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரிகள் தலையிடவில்லை என்றும், பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா பாதுகாப்புச்சபை தெளிவான உத்தரவை வழங்கவில்லை என்றும் இந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
128பக்கங்களைக்கொண்டஇந்தஅறிக்கையில்,பலபகுதிகள்கறுப்புமையினால் அழிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையை முழுமையாக http://www.scribd.com/doc/113262240/The-Internal-Review-Panel-Report-on-Sri-Lanka என்ற முகவரியில் பார்வையிடலாம்

செயற்பாடுகள் மறைக்கப்பட்ட பான் கீ மூனின் பேச்சாளர்!

          
15.11.2012.By.Rajah.ஐ.நாவின் மூத்த அதிகாரி சாள்ஸ் பெற்றி சமர்ப்பித்துள்ள சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்த உள்ளக மீளாய்வு அறிக்கையில், பான் கீ மூனின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார் குறித்த எந்தத் தகவலும் இடம்பெறவில்லை.
போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்தபோது ஐ.நா பொதுச்செயலரின் பிரதிநிதியாக, சிறிலங்கா விவகாரங்களைக் கையாண்டவர் விஜய் நம்பியார்.

போரின் முடிவில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளுக்கு, பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரிமாறுவதில் அவர் முக்கிய பங்கு வகித்திருந்தார்.
ஆனால், அவரது உத்தரவாதத்தின் பேரில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் பலர் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களுக்குத் துணைபோனதாக விஜய் நம்பியார் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும், உள்ளக மீளாய்வு அறிக்கையில் அவர் பற்றிய குறிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
வெள்ளைக்கொடியுடன் சரணடைய முன்வந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்த விஜய் நம்பியார் குறித்து இந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படாதது தொடர்பாகவும், அறிக்கையின் பல பகுதிகள் கறுப்பு மையினால் நீக்கப்பட்டுள்ளது குறித்தும் இன்னர்சிற்றி பிரஸ் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
அதற்கு அவர், நாளை இந்த விடயங்கள் குறித்து இன்னொரு சந்திப்பில் பதிலளிப்பதாக கூறியுள்ளார்.
அதேவேளை, நேற்று மதியம் இந்த அறிக்கை இணையத்தில் வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், பின்னர் அந்த இணைய இணைப்பை பெறமுடியாமல் தடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று உள்ளக அறிக்கை கையளிக்கப்பட்ட நிகழ்விலும் ஐ.நா பொதுச்செயலரின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.