siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 15 நவம்பர், 2012

ஐ.நாவின் தவறுகள்-நிபுணர் குழுவை நியமிக்கிறார்

15.11.2012.B.Rajah.      சிறிலங்காவில் ஐ.நா பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக சாள்ஸ் பெற்றி குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை ஆராய்ந்து, தமக்கு ஆலோசனை கூறுவதற்கான மூத்த அதிகாரிகள் குழுவை உடனடியாக நியமிக்கவுள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாகஅவர்வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது,
“ஐ.நா நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில், சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சாள்ஸ் பெற்றி குழு, எட்டு மாதகாலமாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 
இந்த அறிக்கையில் ஐ.நா தலைமையகம், முகவர் அமைப்புகள், பாதுகாப்புச்சபை, மனிதஉரிமைகள் பேரவை என்பன தமது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கண்டறிவு உலகம் முழுவதிலும் எமது பணிகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொருத்தமான பாடங்களை வரைவதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
உலக மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு, குறிப்பாக உதவியை ஐ.நாவின் எதிர்பார்த்துள்ள மோதலில் சிக்கியுள்ளோருக்கு அது அவசியம்.
சிறிலங்காவில் நிலைமைகளைத் தடுக்க நாம் மேற்கொண்ட முயற்சிகளை குழுவின் அறிக்கை அங்கீகரித்துள்ளது.
எவ்வாறாயினும், நாம் இன்னும் அதிகம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டிய முழுமையான பொறுப்பு உள்ளது.
அதன் உடனடியான முதல் நடவடிக்கையாக, இந்தப் பரிந்துரைகளை கவனமாக ஆராய்ந்து எனக்கு ஆலோசனை கூறுவதற்கு நான் ஒரு மூத்த அதிகாரிகள் குழுவை நியமிக்கவுள்ளேன்.
னைய நடவடிக்கைகள் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படும்.
ஐ.நாவின் சட்டபூர்வத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு வெளிப்படைத்தன்மையும், பொறுப்புக்கூறலும் மிகவும் முக்கியமானவை.
இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்துவதற்கு நான் பல நாட்கள் முன்னதாகவே தீர்மானித்து விட்டேன்.
ஐ.நா பொதுச்செயலர் பதவியை ஏற்றுக் கொண்ட காலத்தில் இருந்து தீங்கில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் ஐ.நாவின் அடிப்படை நோக்கத்தை வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளேன்.
பின்னடைவுகளில் இருந்து மீள்வதற்கு, தவறுகளில் இருந்து பாடம் கற்று, எமது பொறுப்புகளை வலுப்படுத்திக் கொண்டு அர்த்தமுள்ள வகையில் செயற்பட்டு, எதிர்காலத்தில் திறம்படச் செயற்படுவதே மனிதனின் கடமை.
இந்தக் கோட்பாடுகள் நோக்கங்களை அடைய, உருவாக்கப்பட்ட குழு திறம்பட செயற்பட எம்மை வழிகாட்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

0 comments:

கருத்துரையிடுக