ஜேர்மனி நாட்டில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்து அங்குள்ளவர்களை பணையக்கைதிகளாக வைத்துள்ளதால் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியில் உள்ள Saarbruecken நகர் உணவகம் ஒன்றில் சற்று முன்னர் ஆயுதம் ஏந்திய மர்ம நபர் ஒருவர் நுழைந்து அங்குள்ளவர்களை சிறை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும், உணவகத்தில் இருந்து சில ஊழியர்கள் தப்பி வெளியேறியுள்ளனர்.
மேலும், எந்த நேரத்திலும் உணவகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இச்செய்தி உறுதி செய்யப்பட்டதும் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் பொலிஸார் உணவகத்தை சுற்றி குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், பொலிஸார் உணவகத்திற்குள் நுழைந்தபோது, அங்கு கீழ்த்தளத்தில் ஆயுதம் ஏந்தியதாக கூறப்பட்ட நபர் தூங்கிக்கொண்டு இருந்ததை பொலிஸார் கண்டு அவரை கைது செய்தனர்.
மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், உணவக உரிமையாளரின் உறுவினர் என்றும் தெரியவந்துள்ளது. ஜேர்மன் நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இவ்விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>