சுவிட்சர்லாந்து நாட்டின் இனியோஸ்(Ineos) நிறுவனமும், பெர்ஜியம் நாட்டின் சோல்வே நிறுவனமும் பாலி வினைல் குளோரைடு எனப்படும் பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரித்து வருகின்றன.
இவை இரண்டும் போட்டியாளர்களாக இருந்த காலம் மாறி தற்பொழுது இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோல்வேயும், இனியோசும் இணைந்து புதிய நிறுவனத்தை உருவாக்கினால் உலகத்தின் முதல் மூன்று பெரிய பிவிசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகப் பிரபலமடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் இதன் கிளைகள் ஒன்பது நாடுகளிலும், இதில் சுமார் 5650 பேர் பணியாற்றுவர என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐரோப்பாவில் கச்சாபொருட்களின் விலையும், மின்சாரக் கட்டணமும் அதிகரித்து வருவதால் தனித்து செயல்படுவதை விட இணைந்து செயல்பட்டால் உற்பத்தியும் அதிகரிக்கும், இலாபமும் உயரும் என்று சோல்வே நிர்வாகக் குழுவின் தலைவர் ஜீன் - பியர் கிளாமடி யூ(Jean-Pierre Clamadieu) தெரிவித்துள்ளார்.
மாறி வரும் ஐரோப்பிய சந்தைகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், உலக உற்பத்தியாளர்களிடையே அதிகரித்து வரும் போட்டியை சமாளிக்கும் வகையிலும் இந்த கூட்டு முயற்சி அமையும் என்று இனியோசின் தலைமை நிர்வாக அலுவலர் ஜிம் ரேட்கிளிஃப்(Jim Ratcliff) கூறியுள்ளார்