siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 8 ஜனவரி, 2014

துருக்கிய 350 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்

துருக்கிய அரசாங்கத்துடன் நெருக்கமானவர்களின் ஊழல்  விசாரணைகளை தொடர்ந்து,  தலைநகர் அங்காராவிலுள்ள 350 பொலிஸ் உத்தியோகத்தர்களை துருக்கி பணிநீக்கம் செய்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதிலிருந்து நூற்றுக்கணக்கான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பதவிநீக்கப்பட்டுள்ளனர் அல்லது இராஜினாமாச் செய்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்படி சோதனையின்போது தங்களது மகன்கள் தடுத்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து 03 அமைச்சரவை அமைச்சர்கள் இராஜினாமாச் செய்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரினதும் நீதித்துறையினரதும் கறைபடிந்த சதியென பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், கடந்த டிசெம்பர் மாதம் 17ஆம் திகதி தடுத்துவைக்கப்பட்டோரில் பிரதமருக்கு நெருக்கமான

 அரசாங்க அதிகாரிகளும் தொழில் அதிபர்களும் அடங்கியிருந்ததாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன

மைக்கேல் ஷுமாக்கர் மனைவியின் அன்பான வேண்டுகோள்

பார்முலா1 கார்பந்தயத்தில் 7 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தவர் மைக்கேல் ஷுமாக்கர். இவர் கடந்த டிசம்பர் மாதம் 29ம் திகதி பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது விபத்தில் சிக்கினார். தற்போது பிரான்சில் உள்ள கிரனோபில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலை குறித்த தகவல்களை சேகரிக்க தினமும் ஏராளமான செய்தியாளர்கள் அங்கு குவிகிறார்கள். அவர்களுக்கு ஷுமாக்கரின் மனைவி கோரினா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ஷுமாக்கரை காப்பாற்ற போராடும் எங்களுடன் உங்களின் ஆதரவை தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

அதே நேரத்தில் மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நெருக்கடி இன்றி இருந்தால் தான் அவர்கள் தங்களது பணியை இயல்பாக செய்ய முடியும். எனவே நீங்கள் (ஊடகத்தினர்) இந்த அறிக்கை மீது நம்பிக்கை வைத்து, மருத்துவமனை பகுதியில் கூடுவதை கைவிட்டு வெளியேற வேண்டும். அது மட்டுமின்றி எங்களது குடும்பத்தினர் அமைதியுடன் இருக்க தனிமையில் விட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.