siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 26 ஜூலை, 2012

முருகன் நயினைஅம்பாள் பத்திப்பாடல்கள்

26.07.2012.
மனம் உருகிவணங்கி வந்தால் வேண்டும்வரம் அருள்வார் ...


மெகந்தி பிரியர்களே இவை உங்களுக்காக

 26 July 2012, மெகந்தி பிரியர்களே இவை உங்களுக்காக!










!இது கார்பன் ஓவியம் தானா! புகைப்படம் மாதிரியே இருக்கப்பா...

இது கார்பன் ஓவியம் தானா! புகைப்படம் மாதிரியே இருக்கப்பா...

26 July 2012,
மனதைக் கவரும் பென்சில், கார்பன் ஓவியங்கள்












பாசத்தைக் காட்டி இப்படியா வேட்டையாடுவது

 

 26 July 2012,



அபார திறமையில் அசர வைக்கும் 3 வயது சிறுமி

 

 26 July 2012,
மூன்றே வயதான சிறுமி ஒருத்தி வீட்டில் காணப்படும் கதவில் மிகவும் லாவகமாக ஏறி பார்ப்பவர்களை அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளார்.
எழுந்தி நிற்கவே தள்ளாடும் இந்தச் சிறிய வயதில் தனது அபார திறமையாலும், அசைக்க முடியாத தன்னம்பிக்கையாலும் யூ டியூப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பாட்டாளத்தையே உருவாக்கி அசத்தியுள்ளார்.







மகர சிறையில் அடித்து கொல்லபட்ட

 

25.07.2012
 நண்பர்களே ! .
மகர சிறையில் அடித்து கொல்லபட்ட
எங்கள் உறவு நிமலரூபன்
கடந்த இரு வாரங்களாக
பிண அறையிலும்
பத்திரிகையிலும் கிடந்த நிமலரூபன்
இன்று மாப்பிள்ளை கோலத்துடன்
தன் சொந்த மண் முற்றத்தில்

சிறையில் சிங்களவர்களால் கொல்லப்பட்ட
நிமரூபனின் உடலை எங்கோ புதிது விட்டுவதற்கு
கொலையாளிகள் போட்ட திட்டம்
அம்மாவின் அப்பாவின் விடாபிடியால்
தோற்று போனது
நிமலரூபனின் மரணம் சொல்லும்
சேதி மிக சாதாரணமானது
அவர்கள் அவர்கள்தான்
நாங்கள் நாங்கள்தான் ?


நிமரூபனின் அம்மா கதறுவதுபோல
இருபத்தேழு வயதில்
திருமண கோலம் காணவேண்டிய
அந்த வாலிபன் சித்திரவதை
செய்யப்பட்டு கொல்லபட்டான் .

சொன்னால் மனம் கனத்து போவீர்கள்
நிமலரூபன்
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
ஒரே ஒரு பிள்ளை
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு
அம்மாவின் கனவாக
அவன் பிறந்தானாம்
ஒரே ஒரு வாரிசு பிரிந்துபோனது
அம்மாவின் ஏக்கத்தை
குரலை எப்படி வடிப்பது
இனி அவர்களுக்கு அவன்
நினைவாக என்ன உண்டு
ஒரே ஒரு பிள்ளை இந்த
மண்ணுக்காய் போயமுடிந்தானா !
அவன் மீது கொலைவெறி நடத்தியவர்களுக்கு
நிமலரூபன் ஒரே ஒரு பிள்ளை என்பது தெரியுமா
கடவுளே !

அம்மாவின் அழுகையில்
இன்று எல்லோரும்
உடைந்து போனார்கள்
அங்கு சென்ற யாருக்குமே
அஞ்சலிகூட்டம் நடத்த வேண்டிய
அவசியம் இருக்கவில்லை
அம்மா குமுறினாள் அது
மனசாட்சிகளை குத்தியது
அவள் கேட்டால்
என் பிள்ளையை அடிக்க
யார் அனுமதி தந்தது
கட்டிபோட்டு அடிப்பதெல்லாம் வீரமா!
என் கண்முன்னே என் மகனை
கொலை செய்திருந்தால்
அப்போது தெரிந்திருக்கும்
அவனை பெற்ற என் கைகால்கள் பற்றி !
கைகால்களை கட்டாமல் தொட்டிருந்தால்
தெரிந்திருக்கும்
என்மகனை பற்றி !

இந்த நாட்டில் உள்ள அரசியல்
தலைவர்களுக்கு
உண்மையான புரிதல் வேண்டும்
இல்லையெனில்
அங்கேயும் அழுகுரல்கள் கேட்கலாம் .
அப்பாவி தமிழ் சிங்கள இளம் சந்ததி பாவம்.
தாம் பெற்ற ஒரே ஒரு பிள்ளை பற்றி
எத்தனை கனவு இருந்திருக்கும்
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்

:




.

 

கிரில்டு முந்திரி சிக்கன் மற்றும் ஆரஞ்ச் சாஸ்

 

 

சிக்கன் கால் - 2
முந்திரி - 50 கிராம்
வெங்காயம் சிறியது - 3
பூண்டு - 2 பல்
காய்ந்த மிளகாய் - 2
சோயா சாஸ் - 30 மிலி
ஊஸ்டர் சாஸ் - 15 மிலி
எலுமிச்சை சாறு - 5 மிலி
லெமன் கிராஸ் - 5 கிராம்
உப்பு - சுவைக்கு
சர்க்கரை - ஒரு சிட்டிகை
பாசுமதி அரிசி - 200 கிராம்
ஆரஞ்சு பழ தோல் - 20 கிராம்
நறுக்கிய பார்ஸ்லே - 5 கிராம்
சாஸ் செய்ய தேவையானவை
ஆரஞ்சு பழ சாறு - 100 மிலி
ஆரஞ்சு சுளை - 2
வெள்ளை வைன் - 50 மிலி
நறுக்கிய பார்ஸ்லே - 5 கிராம்
உப்பு, மிளகு தூள் - சுவைக்கு ஏற்ப


பசுமதி அரிசியை தனியே வேகவைத்து கொள்ளவும். சிக்கன் கால்களை நன்கு கழுவி ஆங்காங்கே கத்தியால் கீறவும். முந்திரி, வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், லெமன் கிராஸ், உப்பு, சர்க்கரை அனைத்தையும் மிக்சியில் நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள விழுதை சிக்கன் கால்கள் மேல் பரப்பி இரண்டு மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும். அதன் பிறகு தவாவில் சிக்கனை இரண்டு பக்கம் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

கடாயை சூடு செய்து அதில் ஆரஞ்சு பழ சாறு மற்றும் தோல் உறிக்கப்பட்ட ஆரஞ்சு பழம் சேர்த்து கொதிக்க விடவும். பழம் வெந்ததும் அதில் வெள்ளை வைன், பார்ச்லே சேர்க்கவும். தேவைகேற்ப மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஏற்கனவே வறுத்து வைத்துள்ள சிக்கனுடன் சேர்க்கவும்.

ஒரு கடாயில் எண்ணை சேர்ந்து நறுக்கிய பூண்டை வதக்கி அதில் நறுக்கிய ஆரஞ்சு பழ தோல் மற்றும் பார்ஸ்லேவை சேர்த்து பிறகு வேகவைத்த சாதம் அதன் மேல் சிக்கன் சேர்த்து ஒரு நிமிடம் மூடி வைத்து இறக்கி சூடாக பறிமாறவும்

செட்டிநாட்டுச் காபூலி புலாவ்

 

 

வெள்ளை சென்னா - 1 கப்,
பாசுமதி அரிசி - 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
பூண்டு - 2 பல்,
பொடியாக நறுக்கிய தக்காளி - 2,
மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
துருவிய சீஸ் - அலங்கரிக்க.
சென்னாவை முதல் நாள் இரவே நன்றாக ஊற வைக்கவும். மறுநாள் காலை அந்தத் தண்ணீரை வடிகட்டி, புதுத் தண்ணீர் விட்டு, சிறிது உப்புச் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். பாசுமதி அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைத்து, 2 கப் தண்ணீரில், சிறிது உப்புச் சேர்த்து, பொலபொலவென வேக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, பூண்டு, வெங்காயத்தை வதக்கி, தக்காளியும் சேர்த்து வதக்கி, மிளகுத் தூள் சேர்க்கவும். அதில் வேக வைத்த சென்னா சேர்த்து வதக்கவும். பிறகு வேக வைத்த பாசுமதி அரிசியையும் சேர்த்துக் கிளறவும். துருவிய சீஸை மேலே தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

கோஸ் ரொட்டி எப்படிச் செய்வது

 

 

முழு கோதுமை மாவு - 1 கப்,
கடலை மாவு - அரை கப்,
துருவிய முட்டைகோஸ் - 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
சீரகத் தூள் - அரை டீஸ்பூன்,
துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன்,
கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
கோதுமை மாவு, கடலை மாவு, சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்புச் சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். அதைச் சப்பாத்தி
களாக இட்டுக் கொள்ளவும். மற்ற எல்லா பொருள்களையும் கலந்து பூரணம் தயாரிக்கவும்.

ஒரு சப்பாத்தியின் மேல் கொஞ்சம் பூரணத்தை வைத்து, மற்றொரு சப்பாத்தியால் மூடி, திரும்பவும் இடவும். அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து, சப்பாத்திகளை இரு புறமும் பொன்னிறமாக வாட்டி, சாஸ் அல்லது பச்சடியுடன் பரிமாறவும்

அசாமில் கலவரம் முற்றுகிறது : 2 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கும் பரிதாபம்

 

 26-7-2012 10:25
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் கடந்த ஏழு நாட்களாக நடைபெற்று வரும் கலவரம் தீவிரமடைந்துள்ளது. நேற்று இரவு வரை நடைபெற்ற கலவரத்தில், இதுவரை 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், வீடுகளை இழந்து அகதிகளாக தவிக்குஅசாமில் கலவரம் முற்றுகிறது ; 2 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கும் பரிதாபம் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது

அரசுப் பேருந்து மீது பள்ளிப் பேருந்து

 
 26-7-2012 10:14
எடப்பாடி: சேலம் மாவட்டம் எடப்பாடியில் அரசுப் பேருந்து மீது, பள்ளிப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், 15 குழந்தைகள் காயமடைந்தனர். காயமடைந்த 15 குழந்தைகளும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெண்ணை கற்பழிக்க முயற்சி : இந்திய வனத்துறை அதிகாரி அமெரிக்காவில் கைது

 

 


பென்சில்வேனியா: பென்சில்வேனியாவில் உள்ள ஹோட்டலில் இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக வந்த புகாரின் பேரில், இந்திய வனத்துறை அதிகாரி சுரேந்தர் மகாபத்ரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய வனத்துறை அதிகாரி சுரேந்தர் மகாபத்ரா உட்பட 34 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் பயிற்சிக்காக அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள பல்கலைகழகம் ஒன்றிற்கு சென்று இருந்தனர்.

இந்நிலையில், அதிகாரிகள் அனைவரும் பென்சில்வேனியாவில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர். மகாபத்ராவின் லேட் டாப் வேலை செய்யாததால், உதவிக்கு வந்த பெண்ணிடம் அவர் தகாத முறையில் நடந்துக்கொண்டதாக அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், அமெரிக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மகாபத்ராவின் பாஸ்போர்ட்டை கைப்பற்றி, அவரையும் கைது செய்துள்ளனர். மற்ற அதிகாரிகள் தங்கள் பயிற்சியைத் தொடர வாஷிங்டனில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

விஸ்வரூபமாய் எழுந்த கோபுரம்

 

 

மறுநாள் காலை, வழக்கம்போல காவிரியிலிருந்து நீர் எடுத்துவரப் போன லோகசாரங்கரும் மற்றவர்களும் பாணன் தன் வழக்கம்போல ரங்க பக்தியில் பாடி, ஆடி திளைத்துக் கொண்டிருந்ததைக் கண்டார்கள். நெற்றிக் காயத்தில் ரத்தம் உறைந்திருந்தது. அதைப் பார்த்த முனிவருக்கு அரங்கனே அப்படி காயத்துடன் ஆடுவது போலத் தெரிந்தது. உடனே பாணனிடம் போய் தன் செயலுக்குத் தான் வருந்துவதாகவும் தன்னை மன்னிக்கும்படியும் பெருமாள் உத்தரவுப்படி தான் அவரை சுமந்து அரங்கன் கருவறைக்கு அழைத்துச் செல்வதாகவும் தழுதழுத்த குரலில் சொன்னார். ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றிருந்த பாணனை அப்படியே தூக்கித் தன் தோளில் வைத்துக்கொண்டு, கோயிலுக்குத் திரும்பினார், முனிவர்.

எந்த தெய்வத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் ஏங்கித் தவித்தாரோ, அந்த தெய்வத்துக்கு நேர் எதிரிலேயே தான் இருப்பதைக் கண்டு உள்ளம் உவகையால் பொங்க, கண்கள் அந்த உணர்வினை ஆறாகப் பெருக்கிக் காட்டின. ரங்கனுடைய கண், வாய், செவி, திருமுகம், திருவுந்திக் கமலம், இடுப்பு, கால், பாதம் என்று அங்கம் அங்கமாக தரிசித்து பேரானந்தம் அடைந்தார், பாணாழ்வார். அந்தப் பேரழகு, அவரை, அந்த அங்கங்களை வர்ணித்து அங்கேயே 10 பாசுரங்களைப் பாட வைத்தது. ‘அமலனாதிப்பிரான்...’ என்று தொடங்கும் அந்தத் தொகுப்பு, இன்றும் பக்தர்களால் பாடி மகிழப்படுகிறது. அரங்கனைப் பார்த்த நிறைவில், அப்போதே அவனுடைய கழலடியில் சரணடைந்து மோட்சம் எய்தினார் பாணாழ்வார்.

திருப்பாணாழ்வார் உள்ளிட்ட பதினோரு ஆழ்வார்கள் இந்த அரங்கனுக்கு மங்களாசாசனம் அணிவித்திருக்கிறார்கள். ஆழ்வார் பட்டியலில் ஒருவரான மதுரகவியாழ்வார் தன் குருநாதரான நம்மாழ்வாரையே திருமாலாக பாவித்ததாலும் அவரைத் தவிர வேறு யாரையும் பாடாததாலும் அரங்கன் மீது இவர் பாசுரம் எதுவும் இயற்றவில்லை. மீதி 11 பேர், மொத்தம் 247 பாடல்களால் அரங்கன் புகழை அவனியெங்கும் பரப்பியிருக்கின்றனர். பிரமாண்டம் என்பதற்கு சரியான உதாரணமாக ஸ்ரீரங்கம் கோயிலைச் சொல்லலாம். மொத்தம் எட்டு திருச்சுற்றுகள், எட்டு திருமதில்களால் சூழப்பட்ட எட்டு பிராகாரங்கள். முதலில் ஏழு திருச்சுற்றுகள்தான் இருந்தன. ஆனால் அந்த ஏழையும் வளைத்தாற்போல, அந்த ஏழு பிராகாரங்களையும் பாதுகாப்பதுபோல இந்த எட்டாவது சுற்று அமைந்துள்ளது. என்ன பொருத்தம்!

நாராயணனின் அஷ்டாக்ஷர மந்திரத்தின் எட்டு அட்சரங்களே இப்படி எட்டு மதில் சுவர்களுடன் கூடிய பிராகாரங்களாக உருவாகியிருக்கின்றனவோ! இந்த எட்டாவது திருச்சுற்றை அடையவளைந்தான் திருச்சுற்று என்கிறார்கள். தன் பாதுகாப்பு வளையம் என்ற அடைப்புக்குள், அணைப்புக்குள், மீதி ஏழு பிராகாரங்களை காக்கிறது இந்த எட்டாம் திருச்சுற்று. தெற்குப் புற கோபுரத்தின் வழியாக கோயிலினுள் நுழையலாம். மிக உயர்ந்த கோபுரம் இது. இந்த வகை கோபுரங்களில் ஆசியாவிலேயே மிக உயரமானது. இதனை ராயர் கோபுரம் என்றழைக்கிறார்கள். கிருஷ்ண தேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதன் நன்றியை இப்படி, இன்றளவும் நினைவுகூர்கிறார்கள். ஆனால் அவர் காலத்திலும் அதற்குப் பலநூறு வருடங்களுக்குப் பின்னாலும் இந்த கோபுரத்தை முடிக்க முடியாத வேதனையை ‘மொட்டை கோபுரம்’ என்றழைத்து அமைதிப்படுத்திக்கொள்ள முயன்றார்கள்.

தன் ஆட்சி காலத்தில் ஒரே சமயத்தில் 96 கோயில் கோபுரங்களை நிர்மாணிக்க முயற்சி எடுத்துக்கொண்ட கிருஷ்ண தேவராயர், தலைக்கோட்டைப் போரில் தோல்வியைத் தழுவியதும் பெரும்பாலான கோபுரங்கள், மொட்டை கோபுரங்களாகவே நின்று, துக்கத்தை அனுஷ்டித்தன. ஆனால் அரங்கனின் திருவுளம் வேறாக இருந்தது. அவர், ஆந்திர மாநிலத்தில் உள்ள, அஹோபில மடத்தின் 41வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் சுவாமிகளுக்கு உற்சாகமூட்டினார். புதுத் தெம்பு பெற்ற ஜீயர் சுவாமிகள், ஸ்ரீரங்கத்துக்கே வந்து பல்லாண்டுகள் தங்கினார். எத்தனையோ இடர்களையும் எதிர்ப்புகளையும் மீறி, இந்த மெகாப் பெரிய கோபுரத்தைக் கட்டி முடித்து, தன் பக்தி சேவையின் உச்சத்தை நிரூபித்தார்.

இந்த கோபுரத்தினுள் நுழையும் நம்மை ஆஞ்சநேயர் தனி சந்நதியில் அமர்ந்தபடி வரவேற்பது சிலிர்க்கச் செய்கிறது. இந்த ஆஞ்சநேயர் தவிர, கண்ணனுக்கும் இங்கே தனி சந்நதி உள்ளது. வலது பக்கத்தில் தொண்டரடிப் பொடியாழ்வார் அவருக்கான சந்நதியில் ஆசி வழங்குகிறார். இவரைப் ‘பத்தினி ஆழ்வார்’ என்று அழைத்துச் சிறப்பிக்கிறார்கள். ஏன்? இவர் அரங்கனைத் தவிர வேறு எந்தப் பெருமாளையும் பாடியதில்லை, அதனால்தான்! இந்தக் கோயில் வளாகத்தில் நந்தவனம் அமைத்து, அரங்கனுக்கு மலர்க் கைங்கரியம் செய்து வந்தார் தொண்டரடிப் பொடியாழ்வார். அந்த சமயம் திருமங்கையாழ்வார் அந்தக் கோயிலுக்கு மதில் சுவர் கட்டி வந்தார். சுவர் தொடர்ந்த வழியில் நந்தவனம் குறுக்கிட்டது.

உடனே அந்த நந்தவனத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சுவரை வளைத்துச் சென்று நிர்மாணித்தார் திருமங்கையாழ்வார். இந்தப் பெருந்தன்மைக்கு நன்றி செலுத்தும் விதமாக, தான் மலர்க் கொய்யப் பயன்படுத்திய கருவிக்கு ‘அருள்மாரி’ என்று பெயரிட்டார், தொண்டரடிப் பொடியாழ்வார். இது, திருமங்கையாழ்வாரின் பட்டப் பெயர்களில் ஒன்று. ஆண்டாள் சந்நதியில் வாசலில் இருபுறமும் துளசி மாடங்கள். ஆண்டாள் துளசி மாடத்துக்கு கீழேதான் பெரியாழ்வாருக்குக் கிடைத்தாள் என்ற தகவலை எடுத்துக்காட்டுவதற்காக! பிராகார வழிநடையில் மிகப் பெரிய பலகை ஒன்றை வைத்திருக்கிறார்கள். இந்தப் பலகையில் இந்த ஸ்ரீரங்கம் ஆலயத்தின் முழு வரைபடமும் அந்தந்த பிராகாரங்களில் இருக்கும் 49 தெய்வ சந்நதிகளின் பட்டியலும் எழுதப்பட்டிருக்கின்றன.

ஆனால் இந்தப் பலகையில் மீது பறவைகளின் எச்சம் விழுந்து விவரத்தை முழுமையாக அறிய விடாமல் செய்திருக்கின்றன. இதனால் கொஞ்சம் வருத்தப் பெருமூச்சு விட்டுக்கொண்டே தொடர்ந்து நடந்தால், ‘பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாளை தரிசிக்கப் போகிறீர்களா, இந்தாருங்கள் அமிர்தம்’ என்று சொல்வதுபோல அமிர்த கலச கருடாழ்வார் நம்மை அழைக்கிறார். இவர் சந்நதிக்குள் நுழைந்ததும் வலது கையில் அமிர்த கலசத்தை ஏந்தி ஓவியமாகக் காட்சி தரும் கருடாழ்வார், வலது பக்கத்தில் அர்ச்சாவதாரமாகவும் திகழ்கிறார். சாளக்கிராமத்தில் உருவான இவரது மேனி மீது எட்டு சர்ப்பங்கள் தவழ்ந்தபடி இருக்கின்றன. தன் சிற்றன்னையிடமிருந்து தன் தாயைக் காப்பதற்காக அமிர்தத்தை சுமந்து வரும் கோலம் அழகாக மிளிர்கிறது. என்னென்ன கிழமையில் இவரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்பதைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்

அலர்ஜியா! கவலையை விடுங்க மிளகு இருக்கு

 

 

ஒவ்வொருவர் உடலுக்கும் ஒத்துக்கொள்ளாதது பொருட்கள் உண்டு. அதைச் பயன்படுத்தும் போதோ அல்லது உணவுக்காக சேர்த்துக் கொண்டாலும் அலர்ஜி ஏற்படும். இதைக் காணாக்கடி என்பர். இதனால் உடலில் அரீப்பும், தடிப்பும் ஏற்படும்.. இதைப்போக்க, சிறிது வேப்பிலையுடன் 7 அல்லது 8 மிளகை சேர்த்து வாயில் போட்டு நன்றாக கசகச என்று மென்று விழுங்க வேண்டும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு 3 வேளை சாப்பிட்டால், அரீப்பும் தடிப்பும் மறையும்.

எக்காரணத்தினால் தடிப்பு மற்றும் அலர்ஜி ஏற்பட்ழருந்தாலும், செய்ய வேண்டிய முதலுதவி. மருதாணி இலையின் சாற்றைப் பிழிந்து, தேங்காய் எண்ணெயில் கலக்கி நன்கு சுண்டவைத்து அதை உடலெங்கும் பூச கட்டுப்படும்..

அலர்ஜி என்றதும் மஞ்சளும், கருவேப்பிலையும் ஞாபகத்துக்கு வர வேண்டும். இரண்டையும் நன்றாக அரைத்து, ஒரு மாதம் சாப்பிட்டு வர, நோ அலர்ஜி, நோ நமைச்சல்.

தூசி அலர்ஜி & சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து இதில் சுக்கு தவிர மற்ற இரண்டையும் ஒரே பக்குவத்தில் வறுத்து, மூன்றையும் பொடி செய்து சலித்துக் கொண்டு, குப்பை மேனி என்னும் மூலிகைச் சாறை இந்தப் பொடியில் விட்டு அரைத்து, வெண்ணெய் போல் ஆனதும், ஒரு சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாய் உருட்டி, நிழலில் உலர்த்திக் கொண்டு, காலை- மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால், தூசி அலர்ஜி குணமாகும்

இது என்னோட நேரம்... உசேன் போல்ட் உற்சாகம்

 

 


லண்டன் : ‘ஒலிம்பிக் போட்டிக்கும் எனக்குமான உறவு ஈடு இணையில்லாதது. விமர்சனங்களை தவிடுபொடியாக்கி லண்டனிலும் சாதிப்பேன்’ என்று ஓட்ட நாயகன் உசேன் போல்ட் உற்சாகமாகக் கூறியுள்ளார். ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் (25). தடகளத்தில் தன்னிகரில்லாத போட்டியாகக் கருதப்படும் 100 மீ. ஓட்டம், 200 மீ. மற்றும் 4 ஙீ 100 மீ. தொடர் ஓட்ட உலக சாம்பியன்ஷில் 5 தங்கம், ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்ற மகத்தான சாதனையாளர். பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 21 வயது இளம் வீரராகக் களமிறங்கிய இவர் (உயரம்: 6 அடி 5 அங்குலம்) அடுத்தடுத்து தங்கங்களை அள்ளியபோது உலகமே அதிசயித்தது.

லண்டன் ஒலிம்பிக்கிலும் தங்கப்பதக்கங்களை தக்கவைத்து புதிய சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கடந்த ஆண்டு ஆகஸ்டில் தென் கொரியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் தவறான தொடக்கத்துக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டதும், சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் தேர்வு ஓட்டத்தில் சக ஜமைக்கா வீரரான ஜோகன் பிளேக்கிடம் தோற்று 2வது இடம் பிடித்ததாலும், லண்டனில் அவருக்கு வாய்ப்பு குறைவு என முன்னாள் பிரபலங்களும் விமர்சகர்களும் கணித்துள்ளனர்.

இந்த நிலையில், லண்டன் ஒலிம்பிக் குறித்து போல்ட் நேற்று கூறியதாவது: எனக்கு முன்பாக பல மகத்தான வீரர்கள் இருந்துள்ளனர். எனக்கு இணையான வீரர்களும் இருக்கின்றனர். ஆனால், ஒலிம்பிக் என்று வந்துவிட்டால் என்னை யாராலும் ஒதுக்கிவிட முடியாது. விமர்சனங்களை நான் ஒருபோதும் பொருட்படுத்துவது இல்லை.
எனக்கு தெரிந்தது எல்லாம் ஓட்டம், கடுமையான பயிற்சி மட்டுமே. ஒரு சாம்பியனாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தீவிரமாகப் பயிற்சி செய்து வருகிறேன். லண்டன் ஒலிம்பிக்கிலும் நிச்சயம் சாதிப்பேன்.

இது என்னுடைய நேரம், என்னுடைய தருணம், எனக்கான ஆண்டு... மற்றவர்களை விட எல்லா வகையிலும் சிறந்தவன் என்பதை நிச்சயம் நிரூபிப்பேன். அதற்கான தன்னம்பிக்கையும் முயற்சியும் என்னிடம் உள்ளது. நாளுக்கு நாள் என்னுடைய உடல்தகுதி நன்கு மேம்பட்டு ஆற்றல் அதிகரித்து வருகிறது. சக வீரர் பிளேக் மட்டுமல்ல, அமெரிக்க வீரர்களும் எனக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்பதை உணர்ந்துள்ளேன்.

இவ்வாறு போல்ட் கூறியுள்ளார். ஆண்கள் தடகளம் 100 மீட்டர் ஓட்டத்தில் நட்சத்திர வீரர்கள் உசேன் போல்ட், ஜோகன் பிளேக், அசபா பாவெல், டைசன் கே, ஜஸ்டின் காட்லின் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுவதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது