ஜேர்மனியில் தவறான போக்குவரத்து விளக்கால் கார் நேருக்கு நேர் மோதியதில் மூன்று நபர்கள் காயம் அடைந்துள்ளனர்.
ஜேர்மனியின் கொப்லென்ஸ் நகரில் சாலை ஒன்றில் போக்குவரத்து விளக்கு தவறாக காட்டியுள்ளது. இரு சாலையில் மத்தியில் இருந்த இந்த விளக்கு, இரு சாலையினருக்கும் பச்சை விளக்கு காட்டியதால் 72 வயது மூதாட்டி ஓட்டிய கார் மற்றொரு காரின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
ஏதிரே வந்த காரில் இருந்த 46 வயது நபர் தனது காரை திருப்ப முயன்ற போது இந்த விபத்து நடந்துள்ளது. வேகமாக மோதியதால் மூதாட்டியின் கார் பறந்து சென்று பள்ளத்தில் விழுந்துள்ளது.
இதனால் இவர் பலத்த காயமடைந்துள்ளார்.
தற்போது இந்த சாலை தற்காலிகமாக மூடப்பட்டு தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்