
ஐஸ்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய எரிமலையான பர்டர்புங்கா எரிமலை அமைந்துள்ள தென்மேற்கு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து புவியியலாளர்கள் 300க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களைக் கணக்கிட்டுள்ளனர். இந்த நிலை அதிர்வு நடவடிக்கை ஒரு எரிமலை வெடிப்பிற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். கடந்த 2010ஆம் ஆண்டில் அங்குள்ள எய்ஜப்ஜள்ளஜோகுல் எரிமலை வெடித்தபோது அதிலிருந்து சிதறப்பட்ட சாம்பல் துகள்களால் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு பெரும்பாலான...