இந்தோனேசியாவில் போதைவஸ்த்து கடத்தல். மற்றுமொரு தமிழர் கைது
இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தியமைக்காக ஏற்கனவே அவுஸ்திரேலிய தமிழர் ஒருவர் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது மற்றுமொரு
தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விக்னேஸ்வரன் சுதர்சன் என்ற அவர் மற்றுமொரு சிறிலங்காவைச் சேர்ந்த முஸ்லிம் இனத்தவருடன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களிடம் இருந்து பெருந்தொகையான போதைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது