This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
ஞாயிறு, 14 அக்டோபர், 2012
உடல் இளைக்க 9 முறை சாப்பிடுங்க!இடைவெளி விட்டு
ஞாயிறு, அக்டோபர் 14, 2012
உடல் நலம்
சாப்பிடவேண்டும்! லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் உடல்பருமனை குறைப்பதற்கான வழிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இங்கிலாந்து, ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு ஒரே கலோரி அளவுள்ள உணவு 6 முதல் 9 முறை கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
3 வேளையை 2 வேளையாக குறைப்பதாக கூறி அதிகமாக சாப்பிடுவது ஆபத்து. கொஞ்சம் கொஞ்சமாக 9 முறை சாப்பிடுவதால் ரத்தக்கொதிப்பு, கொழுப்பு கட்டுப்படும். உடல் எடையும் சீராகும்.
உண்ணும் உணவு ஊட்டச்சத்துள்ளதாக இருக்க வேண்டும், குறைவாக, போதிய இடைவெளி விட்டு சாப்பிடவேண்டும். இயற்கை உணவுகளை அதிகரித்து கொழுப்பு உணவை தவிர்ப்பது நல்லது. உடற்பயிற்சியும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சில்லுன்னு ஒரு சந்திப்பு இசை வெளியீடு
ஞாயிறு, அக்டோபர் 14, 2012
செய்திகள்
Sunday, 14 October 2012, By.Rajah. |
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் S.நந்தகோபால் தயாரிக்கும் சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. |
இவ்விழாவில் நடிகர் S.J. சூர்யா வெளியிட இயக்குனர் பிரபு சாலமன்
பெற்றுக்கொண்டார்.![]() படத்தின் அனைத்து பாடல்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டதுள்ளதாக S.J. சூர்யா, பிரபு சாலமன் ஆகியோர் இயக்குனர், ரவிலல்லின், FS பைசல் இருவரையும் பாராட்டினார்கள். களவாணி பட வெற்றிக்கு பின்பு விமல்- ஓவியா ஜோடி இணையாமல் இருந்தது. இடையில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான மசாலா கபே படத்தில் விமலுக்கு தங்கையாகவே ஓவியா நடித்திருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவேளிக்கு பின்பு சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தின் மூலம் விமல்- ஓவியா ஜோடி மீண்டும் இணைகின்றது. |
முன்செல்ல |
வில்வித்தை போட்டியில் நடிகை அனன்யா தங்கம் வென்றார்
ஞாயிறு, அக்டோபர் 14, 2012
செய்திகள்
Sunday, 14 October 2012, By.Rajah. |
கேரளாவில் மாநில அளவிலான சீனியர் மகளிர் வில்வித்தை போட்டி நடைபெற்றது. |
இந்தப் போட்டியில் பிரபல நடிகையும், வில்வித்தை வீராங்கனையுமான அனன்யா கலந்து
கொண்டார். இந்தப் போட்டியில் 466 புள்ளிகள் பெற்று நடிகை அனன்யா சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் தேசிய அளவிலான போட்டிக்கு அவர் தெரிவு பெற்றார். நடிகை அனன்யா சினிமாவுக்கு வருவதற்கு முன்பு வில்வித்தை போட்டியில் திறமையை வெளிப்படுத்தி வந்தார். கடந்த 2006, 2007ம் ஆண்டுகளில் நடந்த வில்வித்தை போட்டிகளில் அனன்யா கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளார். தற்போது 5 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு மீண்டும் மாநில அளவிலான வில் வித்தை போட்டியில் பங்கேற்று அனன்யா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அனன்யாவுக்கு, ஏற்கனவே திருமணமான தொழிலதிபர் ஆஞ்சநேயன் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து தற்போது படங்களில் நடிக்காமல் ஒதுங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது |
நாட்டில் செயற்கை மழையினை உருவாக்க சீனாவின்
ஞாயிறு, அக்டோபர் 14, 2012
செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை, 14 ஒக்ரோபர் 2012,By.Rajah.
உதவியை நாடும் இலங்கை செயற்கை மழையினை இலங்கையில் உருவாக்குவது தொடர்பாக சீனாவின் உதவியை கோரியுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
செயற்கை மழையினை இலங்கையில் ஏற்படுத்துவது தொடர்பிலான தொழிநுட்பத்தை பெறுவது தொடர்பில் சீனாவுடன் பேச்சு நடத்தப்படுவதாகவும் எந்தவிதமான சவால்களையும் முறியடிப்பதற்கான தைரியம் அரசாங்கத்திடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வரட்சி என்பது எமது நாட்டு புதிய கலாசாரமல்ல. இந்த வரட்சியை கட்டுப்படுத்துவதற்கு பல தற்காலி நடவடிக்கைளை முன்னர் மேற்கொண்டிருந்தோம்.
எனினும் தற்போது வரட்சிக்கு முகங்கொடுக்க தயாரகுதல் மாத்திரமின்றி இதன் மூலம் நன்மையடையவும் உள்ளோம் என அமைச்சர் குறிப்பிட்டார். அம்பலாங்கொட, கொகல்ல கிராமிய சுகாதார நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

காதலித்து போதவில்லை. மீண்டும் சசிகுமாருடன்
ஞாயிறு, அக்டோபர் 14, 2012
செய்திகள்
Sunday 14 October 2012,By.Rajah. இணையும் லட்சுமிமேனன் சசிகுமாருக்கு அதிர்ஷ்டம் எல்லா ரேகையிலும் ஓடுகிறது போல, படம் இயக்க வந்தவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் வருகிறது. இயக்கியது இரு படங்கள், நடித்ததன் எண்ணிக்கை ஒன்பதைத் தொடப் போகிறது.சுந்தரபாண்டியன் சூப்பராக ஓடுகிறது. இதனால் மீண்டும் நடிக்கப் போகிறார்.
இந்தமுறையும் சொந்த தயாரிப்பு. முத்தையா என்கிற அறிமுக இயக்குனர். லட்சுமி மேனனுடன் காதலித்து போதவில்லை போலிருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு அவரையே ஹீரோயின் ஆக்கியிருக்கிறாராம்
இந்தமுறையும் சொந்த தயாரிப்பு. முத்தையா என்கிற அறிமுக இயக்குனர். லட்சுமி மேனனுடன் காதலித்து போதவில்லை போலிருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு அவரையே ஹீரோயின் ஆக்கியிருக்கிறாராம்
ஸ்ரீராமராஜ்ஜியம்' சிறந்த படம்:
ஞாயிறு, அக்டோபர் 14, 2012
செய்திகள்

ஆந்திர மாநில அரசு சார்பில் தெலுங்கு படங்களில் சிறந்த நடிகர்-நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ‘நந்தி விருது’ வழங்குகிறது. தெலுங்கு பட உலகில் ‘நந்தி விருது’ மிக உயரியதாக கருதப்படுகிறது.
கடந்த ஆண்டுக்கான ‘நந்தி விருது‘ பெறுவோர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் ‘ஸ்ரீராமராஜ்ஜியம்’ படத்தில் நடித்த நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான ‘நந்தி விருது’ கிடைத்துள்ளது.
ராமாயணத்தில் லவன்-குகன் கதையை அடிப்படையாக கொண்டு நவீன தொழில்நுட்பத்துடன் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் ராமனாக என்.டி.ஆர்.பாலகிருஷ்ணாவும், சீதையாக நயன்தாராவும் நடித்தனர். சீதையாக சிறப்பாக நடித்தமைக்காக அவருக்கு ‘நந்தி விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெலுங்கில் சிறந்த படமாகவும் ‘ஸ்ரீராமராஜ்ஜியம்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிறப்பாக இசை அமைத்ததற்காக இளையராஜாவுக்கும் நந்தி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி நயன்தாரா கூறியதாவது:-
எனக்கு ஆந்திர அரசின் மிக உயர்ந்த ‘நந்தி விருது’ கிடைத்து இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ‘ராமராஜ்ஜியம்’ படத்தில் கஷ்டப்பட்டு அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து நடித்தேன். கடவுள் அருளால் எனக்கு விருது கிடைத்து இருக்கிறது.
இந்தப் படத்தில் சீதையாக நடிக்க என்னை தேர்வு செய்த நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மட்டும் எனக்கு இந்த சந்தர்ப்பம் கொடுக்காவிட்டால் சீதையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்காது. இது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். நான் நடித்த படங்களில் ‘ஸ்ரீராமராஜ்ஜியம்’ எப்போதும் என் நினைவில் இருக்கும்.
இவ்வாறு நயன்தாரா கூறினார்.
சிறந்த நடிகருக்கான நந்தி விருது நடிகர் மகேஷ் பாபுவுக்கு (படம்: தூக்குடு) வழங்கப்படுகிறது. நாகார்ஜுனாவுக்கு சிறப்பு நடுவர் விருது கிடைத்துள்ளது. ஐதராபாத்தில் விரைவில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது
விஸ்வரூபம் பாடல் வெளியீட்டிற்காக ஒரே நாளீல்
ஞாயிறு, அக்டோபர் 14, 2012
செய்திகள்

Sunday 14 October 2012 .By.Rajah.சென்னை,மதுரை, கோவை செல்லும் கமல்ஹாசன்.
உலக நாயகன் கமலஹாசன் கதாநாயகனாக நடித்ததுடன், கதை, இணை தயாரிப்பு மற்றும் இயக்குனராக பணியாற்றிய ‘விஸ்வரூபம்’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது.
இந்த படத்தின் காட்சிகள் பெரும்பாலும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. சில காட்சிகள் சென்னை, மும்பையில் எடுக்கப்பட்டன.
இந்திய திரையுலகின் முதல் முயற்சியாக ‘அவ்ரோ 3டி’ என்ற நவீன ஒலி தொழில்நுட்பத்தில் விஸ்வரூபம் திரையிடப்பட உள்ளது. சங்கர் எசான்லாய் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை தமிழில் கவிஞர் வைரமுத்துவும் இந்தியில் ஜாவீத் அக்தரும் எழுதியுள்ளனர்.
‘விஸ்வரூபம்’ பாடல் வெளியீட்டு விழா, கமலஹாசனின் 58-வது பிறந்த நாளான வருகிற நவம்பர் மாதம் 7-ந்தேதி நடைபெற உள்ளது. சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 நகரங்களில் ஒரே நாளில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது. 3 நகரங்களிலும் ஒரேநாளில் கமலஹாசன் சென்று விழாவில் பங்கேற்று சி.டி.க்களை வெளியிடுகிறார்.
கமலஹாசனின் பிறந்த நாளும் ‘விஸ்வரூபம்’ பாடல் வெளியீட்டு விழாவும் தமிழ்நாட்டின் 3 நகரங்களில் ஒரே நாளில் நடைபெறுவதால், விழாக்களை கோலாகலமாக நடத்த அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்
எனது காதல் தோல்விகளை மறக்க செய்வது சினிமாதான். நயன்தாரா
ஞாயிறு, அக்டோபர் 14, 2012
செய்திகள்

இந்நிலையில் ஆந்திர அரசின் நந்தி விருதுக்காக அவர் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை அவர் பெற உள்ளார். இது குறித்து நயன்தாரா கூறியதாவது: ஸ்ரீராம ராஜ்யம் படம் நான் எதிர்பார்க்காமல் எனக்கு கிடைத்தது. கவர்ச்சி வேடங்களில் இருந்து ஒதுங்கி, குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வந்தபோது இப்படம் கிடைத்தது. அப்போது எழுந்த விமர்சனங்களுக்கு எல்லாம் நான் அமைதி காத்தேன்.
இந்த படம் மூலம் விமர்சகர்களுக்கு பதில் அளித்தேன். அது எல்லாம் சீதை வேடத் தில் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டதால் நடந்தது. தொடர்ந்து ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண கதை படங்களில் நடிக்க விரும்புகிறேன். நான் வித்தியாசமான பெண், எந்த நிலையிலும் வெற்றி பெறுபவள் என சிலர் கூறலாம். ஆனால் நான் மற்றவர்களை போல் சாதாரணமானவள்தான்.
குளிர், மழை, வெயில் என எந்த சீசனிலும் உழைத்துக் கொண்டே இருப்பது எனக்கு பிடித¢தது. சினிமாதான் எனக்கு எல்லாமே. எனக்கு ஏற்பட்ட பிரச்னைகள், இதயம் உடைந்த சம்பவங்கள் (காதல் தோல்விகள்) ஆகியவற்றிலிருந்து என்னை மீட்டது சினிமாதான். எனது சோகத்தை மறக்கச் செய்த மருந்து, எனது பணிதான். அதே போல் எனது குடும்பமும் எனக்கு உறுதுணையாக இருநதது. இவ்வாறு நயன்தாரா கூறினார்.
மாற்றான். விமர்சனம் {காணொளி,}
ஞாயிறு, அக்டோபர் 14, 2012
செய்திகள் காணொளி
14.10.2012.By.Rajah.நடிப்பு : சூர்யா, காஜல் அகர்வால், சச்சின் கடேகர், தாரா
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு : சௌந்தர்
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பு : ஏஜிஎஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் : கேவி ஆனந்த்
ஆபரேஷன் சக்ஸஸ்... பேஷன்ட் அவுட் என்பார்களே... அந்த வழக்குச் சொல்லுக்கு சரியான உதாரணம் மாற்றான்
ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்ற கஷ்டமான சமாச்சாரத்தை அநாயாசமாக செய்து காட்டிய சூர்யாவுக்கு, முழுப் பலனும் கிடைக்காமல் செய்வது படத்தின் சொதப்பலான கதையும், அதைவிட படு சொதப்பலான திரைக்கதையும்!
இந்தப் படத்தின் கதையை எங்கு தொடங்கி, எங்கு முடிப்படி என்பதில் ஏக சிக்கல் இருப்பதால், அந்த கஷ்டத்தை நீங்கள் தியேட்டருக்குப் போய் அனுபவித்துக் கொள்ளுங்கள். இருந்தாலும் விமர்சன சடங்குக்காக ஒரு அவுட்லைன்!

ஒட்டிப் பிறந்த பணக்கார பையன்கள் சூர்யா... அவர்களின் விஞ்ஞானத் தந்தை சச்சின் கடேகர். மகா கொடிய விஞ்ஞானி. தன் கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காத கோபத்தில், ஏதோ அரைகுறை பால்பவுடர் கண்டுபிடிக்கிறாராம். அது ஏக வெற்றி பெறுகிறது. ஆனால் அதில் தலைமுறைகளை அழிக்கும் கொடிய ஸ்டீராய்டு கலக்கப்படுவது மகன்களுக்குத் தெரிய, அப்பாவுக்கு எதிராக, இரட்டையரில் ஒருவர் களமிறங்கி உயிரைவிட, அடுத்து இரட்டையர்கள் பிரிக்கப்டுகிறார்கள். அடுத்து ஒற்றை சூர்யா அவரது அப்பாவை எதிர்த்து எப்படி அந்த பால்பவுடர் உற்பத்தியை தடுக்கிறார் என்பது க்ளைமாக்ஸ்
இல்லாத கதைக்கு ஏன் இத்தனை பில்டப் கொடுக்கிறார்கள், கேவி ஆனந்த் - சுபா போன்றவர்கள்? என்ற கேள்விதான் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் மனதுக்குள் வந்துபோனது.
முதல் பாதியில் அந்தப் பாடலுடன், ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பார்ப்பதில் ஆர்வம் குறைந்து, கொஞ்சம் சங்கடம் வர ஆரம்பிக்கிறது. போகப்போக அது ஒருவித ஒவ்வாமை மாதிரியான உணர்வை தோற்றுவித்துவிடுகிறது.
அதிலும் அந்த தீம் பார்க் சண்டை... கிட்டத்தட்ட 20 நிமிடங்கள். முடிந்தபிறகு, யாராவது ஒரு சாரிடான் வாங்கிக் கொடுத்து உதவுங்களேன் என்று கத்த வைத்துவிடுகிறது.
ஹீரோயினை அழகாகக் காட்டிய வரை ஓகே. ஆனால் அம்மணிக்கு ஒரு துபாஷி வேலைதான் படத்தில். தமிழ் - ஆங்கிலம் - ரஷ்யன் என பேசிக் கொண்டே இருக்கிறார். சூர்யாவுடனான அவரது காதலும் ரொம்பவே மெக்கானிக்கலாகத் தெரிகிறது.

கதையில் லாஜிக் ஓட்டைகள் ஒன்றிரண்டல்ல... அத்தனை கொடிய பால்பவுடரை தயாரிப்பதன் நோக்கம் என்ன... தீவணத்தின் மூலம் கலந்து கொடுக்கப்படும் ஸ்டீராய்ட் அதிக பாலை பசுக்களிடமிருந்து கறக்க வேண்டுமானால் உதவலாம். ஆனால் மார்க்கெட்டில் பால்பவுடர் பிரபலமடைய... அத்தனைபேர் வாங்கி நுகர வேறு ஏதாவது காரணம் வேண்டும் அல்லவா?
யுக்ரைனை நேரடியாக குறிப்பிட முடியாமல், உக்வேனியா உக்வேனியா என படம் முழுக்க படுத்துகிறார்கள். படம் முடிந்து வெளியில் வந்ததும், உக்வேனியா எங்கிருக்கிறது என ஜனங்கள் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டே போகிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவுதான். ஒருவேளை ஏகப்ட்ட மைனஸ்களுக்கு மத்தியில் இந்த ப்ளஸ் இருந்ததால் பெரிதாகத் தெரிகிறது போலிருக்கிறது. குறிப்பாக அந்த நார்வே லொகேஷன்களை காமிராவுக்குள் சிறைப்டுத்திய விதம்.. வாவ்!
ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் ஒரு முறை ட்ரினிட்டியில் இசை படிக்கப் போகலாம். அல்லது ரஹ்மான் மாதிரி ஓரிரு ஆண்டுகள் இசை விடுமுறை அறிவித்துவிடலாம். சரக்கு மகா மட்டம்... அதைவிட பின்னணி இசை... ஆக்ஷன் காட்சியில், நான்கைந்து ட்ரம்ஸ் செட்டுகளை உருட்டிவிடுவது மாதிரி ஒரு சவுண்ட்... கொடுமை!
ஒன்று முழுமையாக காப்பியடித்து, அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு படத்தை வெளியிடலாம். அல்லது முழுசாக சொந்த சரக்கை கடைவிரிக்கலாம். இப்படி அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என எடுத்தாண்டால் இப்படித்தான் இருக்கும் கேவி ஆனந்த்.
அதிலும் அந்த க்ளாமாக்ஸில் சூர்யாவைப் பார்த்து, கடேகர் பேசும் வசனங்கள், மகா மட்டம். சூர்யா எதற்காக அல்லது எப்படி இந்த மாதிரி கேவலமான காட்சியமைப்புக்கு ஒப்புக் கொண்டார் என்பது ஆச்சர்யம்தான்!
ஆங்... இந்தப் படத்தில் குறை சொல்ல முடியாத ஒருவர்... ஹீரோ சூர்யா. ஆள் பார்க்க செம ஸ்மார்ட். அசல் இரட்டையர்களாக தோன்ற ஒவ்வொரு காட்சியிலும் அவர் காட்டியிருக்கும் மெனக்கெடல் அசாத்தியமானது. இந்த உழைப்பும் மெனக்கெடலும் வீணாய்ப் போனதில் வருத்தம்தான்!
ஒரு படத்தின் வெற்றிக்கு நான்தான் காரணம் என எந்த ஹீரோவாவது சொன்னால் தலையில் தட்ட வேண்டும் என்று சொன்ன கேவி ஆனந்துக்குதான் நியாயமாக குட்டு வைக்க வேண்டும். இந்தப் படத்தைப் பொறுத்தவரை, தாங்கிப் பிடிக்கும் ஒற்றை விஷயம் சூர்யா...
சூர்யாவுக்காக மட்டும் பார்க்கலாம்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)