siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

புனித கங்கை நதியின் அவலங்கள்

BY.rajah.   ...

கறுப்பு மணல் கடற்கரையைப் காண ஆசையா?

  BYrajah.27.08.2012.ஹவாய் தீவில் காணப்படும் Punalu என்ற கடல் கறுப்பு நிற மணலைக் கொண்டு காட்சியளிக்கிறது. இதற்கு காரணம் கடலினுள் காணப்படும் எரிமலைகள் வெடித்து குளிர்ச்சியாகி கடலின் கரையோரம் ஒதுங்குவதே ஆகும் ...

செம்சுங்குக்கு விழுந்த மரண அடி!

BY.rajah.27.08.2012.அப்பிள் நிறுவனமானது கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவ்வழக்கினைத் தொடுத்தது. இதனூடாக செம்சுங்கிடம் சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாகக் கோரியிருந்தது. இதற்குப் பதிலடியாக வழக்குத் தொடுத்த செம்சுங், அப்பிளிடம் 399 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாகக் கோரியிருந்தது.கடந்த ஒருவருட காலத்துக்கு அதிகமாக நீடித்த இவ்வழக்கின் தீர்ப்பானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது.அப்பிள் கோரிய 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்...

ஜரோப்பாவில் கோலாகலமாக நடந்தேறிய கார்னிவெல் திருவிழா

BY.rajah.27.08.2012. ஜரோப்பாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவான நோட்டிங் ஹில் கார்னிவெல் அண்மையில் இடம்பெற்றது.இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளதுடன் பல்வேறுபட்ட கலைஞர்களும் தமது வித்தியாசமான திறமைகளை அந்த மக்கள்கூட்டத்தின் மத்தியில் வெளிக் கொணர்ந்துள்ளனர். அந்த கார்னிவெல் தொடர்பான சுவாரஸ்ய காட்சிகள் அடங்கிய புகைப்படத்தொகுப்பே இவை .  ...

50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண் (பட இணைப்பு)

BY.rajah.27.08.2012.தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு இளைஞர்களைத் திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பல இலட்சம் மோசடி செய்த கேரள அழகியான சஹானா என்ற பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர். அவர் தமிழகம் மற்றும் கேரளாவில் பல இளைஞர்களை மயக்கி அவர்களைத் திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றைப் பறித்து மோசடி செய்துள்ளார். இவ்விடயம் கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளியுலகுக்குத் தெரியவந்தது. சஹானா இதுவரை 50 இளைஞர்களை மணந்து ஏமாற்றியுள்ளதாகக்...

வேன் விபத்துக்குள்ளானதில் இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற இலங்கையர் உட்பட 18 பேர்

BY.rajah.27.08.2012.இந்தியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த இலங்கையர் உட்பட 18 பேர் விபத்துக்குள்ளாகிக் காயமடைந்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜோன் (வயது 28), மட்டக்களப்புப் பகுதியை சேர்ந்த குமுதா (வயது 45), நேசலட்சுமி (வயது 43) மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ், லண்டன் ஆகிய நாடுகளில் வசிக்கும் இவர்களின் உறவினர்கள் அன்டனி இருதயராஜ் (வயது 32), அஞ்சலின் (வயது 22), அகிலன் (வயது 20), அருள்தாஸ் (வயது 32), அரசன் (வயது 03)...

முள்ளிக்குளம் தேவாலயத்தில் ஐந்து வருடங்களின் பின் திருவிழா

BY.rajah.27.08.2012. முள்ளிக்குளம் தேவாலயத்தில் சுமார் ஐந்து வருடங்களின் பின் திருவிழாத்திருப்பலி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.மன்னாரின் தென்பகுதியான முசலிப்பிரதேசத்தின் மீது கடந்த 2007ஆம் ஆண்டு இராணுவத்தினரின் மனிதாபிமான நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதன் காரணமாக முசலிப்பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறியிருந்தனர்.இவ்வாறு வெளியேறியவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக மன்னார்...

18 வயசு – பதறுது மனசு! -திரை விமர்சனம்!

BY.rajah.27.08.2012.நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பில் ’ரேனிகுண்டா’ இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் ஜானி நடித்து வெளிவந்துள்ள படம் ‘18 வயசு’. ரேனிகுண்டா படம் தெலுங்கிலும், தமிழிலும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்புஇருந்தது. ஒரு மலைக்கிராமத்தில் வசித்து வரும் சாதாரணக் குடும்பத்தில் தந்தையின் மீது மிகுந்த பாசம் கொண்டு வளர்கிறான் கதாநாயகன். மகன் தந்தையிடம் மட்டும் பாசத்துடன் இருப்பது தாய்க்கு...

மூச்சுத் திணறல்: நடிகை மனோரமா ஆஸ்பத்திரியில் அனுமதி

BY.rajah.27.08.2012.மனோரமா மூச்சுத் திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மனோரமா ஏற்கனவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். சில மாதங்களுக்கு முன் ஓட்டல் அறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவர் காலில் முறிவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து காலை குணமாக்கினர். பின்னர் வீடு திரும்பி ஓய்வு எடுத்து வந்தார். சில வாரங்களுக்கு பின் மீண்டும் உடல்நிலை பாதித்தது. ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். செயற்கை சுவாச...

வித்யாபாலன் இடத்தில் நயன்தாரா

BYrajah-Monday, 27 August 2012, பாலிவுட் புயல் வித்யா பாலன் மலையாளத்தில் உருவாகவுள்ள "அறிவால் சுட்டிக்க நட்சத்திரம்" என்ற படத்தில் நாயகியாக நடிக்க தெரிவு செய்யப்பட்டார். இப்படத்தை அமல் நீரத் என்பவர் இயக்க மம்மூட்டி, பிருத்விராஜ் இணைந்து நடிக்கின்றனர். உருமி படத்துக்கு திரைக்கதை எழுதிய சங்கர் ராமகிருஷ்ணன் இப்படத்துக்கும் திரைக்கதை எழுதியிருக்கிறார். இப்படத்தில் வித்யாபாலனுக்கு பதிலாக தற்போது நயன்தாராவை நடிக்க அமல் கேட்டதாகவும் அதற்கு நயன் சம்மதம்...

கணவருடன் மோதலா? ரீமா சென் விளக்கம்

BY.rajah - Monday, 27 August 2012,  , இந்தி படத்தில் ஜாக்கெட் அணியாமல் நடித்த காட்சியால் கணவருடன் மோதல் ஏற்பட்டதா என்பதற்கு ரீமா சென் பதில் அளித்தார். இது பற்றி அவர் கூறுகையில், திருமணத்துக்கு பிறகு தான் எனக்கு சினிமாவில் நல்ல நேரம் வந்திருக்கிறது. நிறைய படங்களில் நடிக்கிறேன். கேங்ஸ் ஆப் வசேப்பூர் படம் வெளியானது. கேன்ஸ் பட விழாவில் பங்கேற்றேன். தோழன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன். கேங்ஸ் ஆப் வசேப்பூர் படத்தில் ஜாக்கெட் அணியாமல் முழுமையாக...

சுந்தரபாண்டியனில் ரஜினி ரசிகராக நடிக்கிறார் சசிகுமார்

BY.rajah -Monday, 27 August 2012, இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என அனைத்து பரிமாணங்களிலும் வெற்றிகளை குவித்தவர் சசிகுமார். போராளி படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் படம் சுந்தரபாண்டியன். இப்படத்தை அவரது உதவியாளர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்க, சசிகுமார் தயாரிக்கிறார். இப்படத்தின் பாடலில் அவரை ரஜினி ரசிகராக சித்தரித்து ஒரு பாடல் வந்துள்ளது. அதற்கு அவர் பதிலளிக்கும் போது, ஆமாம். இப்படத்தில் நான் ரசிகராக நடிக்கிறேன். பாடல் காட்சியிலும் அது தெரியும்....

பழம்பெரும் பாலிவுட் நடிகர் ஹங்காலின் உடல் தகனம்

BYrajah- Monday, 27 August 2012, பழம்பெரும் பாலிவுட் நடிகர் ஏ.கே.ஹங்காலின் உடல் நேற்று மும்பையில் தகனம் செய்யப்பட்டது. பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகர், நடிகைகளுக்கு அப்பா, மாமனார் போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்த ஹங்கால் நேற்று மரணமடைந்தார். அவரது உடலுக்கு நேற்று இறுதிச்சடங்குகள் மும்பையில் நடந்தது. அவரது மகன் விஜய் தீ மூட்டினார். இதற்கிடையில் பல முன்னணி நடிகர்களுடன் ஹங்கால் நடித்திருந்தும் அவர்கள் எவரும் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாதது...

திருமணத்திற்கு விருப்பமில்லாமல் தற்கொலைக்கு முயன்ற நடிகை

BYrajah Monday, 27 August 2012, தமிழ் நடிகை சுஜிபாலா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கொலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கூடம், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடிகை சுஜிபாலா நடித்திருக்கிறார். தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை ரவிக்குமார் இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். சுஜிபாலாவை ரவிக்குமார் திருமணம் செய்ய விரும்பி அவரது பெற்றோரிடம் பெண் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து...

அக்கா, அண்ணி வேடத்தில் நடிக்கமாட்டேன்: ரீமாசென்

BY.rajah.Monday, 27 August 2012, 'மின்னலே', 'தூள்', 'செல்லமே' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை ரீமா சென். 1982ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படம் ரீமேக்காகி வருகிறது. இப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் அவரது உறவுக்காரப் பெண் சினேகா பிரிட்டோ இயக்கி வருகிறார். தமன்குமார், பியா, பிந்து மாதவி நடிக்கிறார்கள். இதில் ரீமா சென் முக்கிய பாத்திரத்தில் பொலிஸ் அதிகாரியாக, கதாநாயகனின் அக்காவாக நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பது குறித்து...

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாக்களும் முன்கூட்டியே வெளியாகியுள்ளன

BYrajah.-திங்கட்கிழமை, 27 ஓகஸ்ட் 2012,  நேற்று நடைபெற்று முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாக்களும் முன்கூட்டியே வெளியாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.பரீட்சை நடைபெறுவதற்கு முன்தினம் இரவும், பரீட்சை நடைபெறும் சந்தர்ப்பத்திலும் இவ்வாறு வினாக்கள் வெளியாகியுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளா மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.பொல்கஹாவெல, ரம்புக்கன போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பெற்றோருக்கு இவ்வாறு...

சிங்களவர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் எண்ணிக்கையில் உயர்வு

.BY,rajah.திங்கட்கிழமை, 27 ஓகஸ்ட் 2012,தமிழர்களுக்கு நிகராக சிங்களவர்களும் அவுஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்து கோரி படகு பயணங்களை ஆரம்பித்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் 1076 இலங்கை அகதிகளை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் 35 சதவீதமானவர்கள் சிங்களர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வெளிநாட்டினரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை இந்த அகதிகளின் குழுவில் கடந்த இரண்டு நாட்களில் நான்கு முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர்...

கண்ணுக்கு மையழகு

By rajah.,27.08.2012.  தமிழர் வாழ்வில் பெண்கள் அன்று தொட்டு இன்று வரை நவரத்தினங்கள் பதித்த ஆபரணங்கள் கொண்டும், தங்க அணிகலன்களைக் கொண்டும், இயற்கைப் பொருட்கள் கொண்டும் தங்களை அழகுபடுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்றால் அது மிகையாகாது. ஒருவருடைய முகமே முதலில் பார்வைக்கு தோன்றுவது. எனவே அழகு என்றாலே முதலில் முகத்தோற்றமே முக்கியமானதாகக் கருதப்படும். பெண்கள் தமது கண்களின் அழகு தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்கள் தங்கள்...

செம்பாட்டு மண்ணின் பன்பாட்டு வேர் மகாஜனா

By rajah 27-08-2012   லங்கையின் வட பகுதியில் நில வளம், நீர் வளம், கலை வளம், தெய்வீக சிந்தனை, கல்வி வளம், தொழில் வளம் முதலான அனைத்து வளங்களும் நிறைந்துள்ள வலிகாமம் பிரதேசத்திற்கு முக்கிய அடித்தளமாக விளங்குவது மகாஜனாக் கல்லூரி ஆகும். இலங்கையின் கல்வி வளர்ச்சியில் முக்கியமான இடம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக்கு உண்டு.  நல்லைநகர் நாவலர் பெருமான் ""சுதேசிகளே! சொந்தப் பண்பாட்டுப் பாரம்பரியங்களையும், சைவப் பண்பாட்டின் கருவூலத்தையும்...

வெனிசுலா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தீ விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு

 By rajah. வெனிசுலாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வட பகுதியான பராகுவானாவில் அமுவே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது . உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான அமுவேயில் கடந்த சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதுடன் வெடிப்புச் சம்பவமும் நிகழ்ந்தது. இதில் 26 பேர் பலியாகினர், மேலும் 80 க்கும் மேற்பட்டோர்...

அம்மா இறந்ததை அறிந்து அவரது தாலிக் கொடியை கழற்றி அடகு வைத்து ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தேன்: பிரசான்

 By rajah.27.08.2012. கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்த ௭னக்கு பெரும் பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. அதற்காக வருமானத்துக்கு அப்பால் கடன் பெற்றேன். கடன்தொல்லையை ௭ன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அம்மா,அப்பாவிடம் பணம் கேட்டேன். அவர்களும் தரவில்லை. இவ்வாறான நிலையிலேயே அவர்களுக்கும் தங்கைக்கும் அளவுக்கு அதிகமான தூக்கமருந்து வில்லைகளைக் கொடுத்தேன். அதில் அம்மா இறந்து விட்டார். அதனை அறிந்து நான் அம்மா அணிந்திருந்த தாலிக் கொடியைக் கழற்றி அடகு வைத்து ஐந்து...

அமெரிக்க டொலர் 100 மி. சீன உதவியில் வடக்கு, கிழக்கு இராணுவ முகாம்கள் விஸ்தரிப்பு

அமெரிக்க டொலர் 100 மி. சீன உதவியில் வடக்கு, கிழக்கு இராணுவ முகாம்கள் விஸ்தரிப்பு    By rajah.27.08.2012. வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ முகாம்களின் உட்கட்டமைப்பை விருத்திசெய்யவும் இராணுவ முகாம்களுக்கு தேவையான விடுதி மற்றும் வசதிகளை மேம்படுத்திக் கொடுக்கவும் சீனா முன்வந்துள்ளது. அத்துடன் இலங்கையுடனான பொருளாதாரம்,வர்த்தம் மற்றும் இராணுவ உறவுகளையும் சீனா மேம்படுத்திக் கொள்ளவிருக்கின்றது. இராணுவ நலன்புரித் திட்டங்களை மேம்படுத்துவதற்கு...