
பழம்பெரும் பாலிவுட் நடிகர் ஏ.கே.ஹங்காலின் உடல் நேற்று மும்பையில் தகனம் செய்யப்பட்டது.
பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகர், நடிகைகளுக்கு அப்பா, மாமனார் போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்த ஹங்கால் நேற்று மரணமடைந்தார்.
அவரது உடலுக்கு நேற்று இறுதிச்சடங்குகள் மும்பையில் நடந்தது. அவரது மகன் விஜய் தீ மூட்டினார்.
இதற்கிடையில் பல முன்னணி நடிகர்களுடன் ஹங்கால் நடித்திருந்தும் அவர்கள் எவரும் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாதது பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஹங்கால், ஜெயாபச்சன், ஹேமாமாலினி, ரேகா போன்ற முன்னணி நடிகைகளுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிரபலப் பாடகியும், நடிகையுமான இலா அருண் கூறுகையில், அத்தனை சூப்பர் ஸ்டார்களுடனும் ஹங்கால் நடித்துள்ளார்.
ஆனால் அதில் ஒருவர் கூட இறுதிச்சடங்குக்கு வராதது வருத்தம் தருகிறது என்றார்