இடம்பெற்ற விபத்தில் லண்டன் மிச்சம் பகுதியில் தமிழ் பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் இறந்த நடுத்தர வயதுடைய சுகந்தி என்ற பெண்மணி மூன்று பிள்ளைகளின் தாயார் என்
அறியவருகிறது.
ஜேர்மனியில் இருந்து பிள்ளைகளின் கல்விக்காக அண்மையில் இவர் லண்டனுக்கு இடம்பெயர்ந்திருந்தார். உயிரிழந்த சுகந்தி விபத்து இடம்பெற்ற பிரதேசத்தில் உள்ள டட்லியா பல்பொருள் அங்காடியில்
பணியாற்றியுள்ளார்.
பாதசாரிகளின் நடைபாதையில் பஸ் குறுக்கிட்டபோதே இவ்விபத்து நடைபெற்றுள்ளது. மேலும் காலையில் உருவாகியிருந்த பனிப்புகாரே இவ்விபத்துக்கு காரணமாயிருக்கலாம் என விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்து இடம்பெற்ற ஸ்தலத்திலேயே மரணம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் விபத்து நடந்த மிச்சம் – லண்டன் வீதி மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>