siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

இஸ்ரேலின் வீடு கட்டும் திட்டத்திற்கு ஜேர்மனி எதிர்ப்பு

பாலஸ்தீனியர் ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேலின் நிலப்பகுதியில் 3000 புதிய வீடுகளைக் கட்ட இஸ்ரேலிய அரசு, அறிவிப்பு வெளியிட்டிருப்பதை ஜேர்மனி எதிர்த்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்தி பாலஸ்தீனியரிடமிருந்து அந்த நிலப்பகுதியைக் கையகப்படுத்திய பின்பே அங்கு கட்டுமானத் திட்டங்களை வகுக்க வேண்டும். பாலஸ்தீனியரின் கைவசம் இருக்கும்போதே அங்கு வீடு கட்ட "டெண்டர்" விடுவது அடாத செயல் என்றும் இத்திட்டத்தை உடனே அரசு திரும்பப் பெறவேண்டும் என்றும் ஜேர்மனி அரசின்...

மெக்சிகோவில் புதிய ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்

மெக்சிகோவில் ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி போராட்டம் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை மெக்சிகோவின் புதிய ஜனாதிபதியாக என்ரிக் பெனா நெய்டோ பதவியேற்று கொண்டார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் “யோ சோய் 132” எனப்படும் மாணவர்கள் இயக்கம் போராட்டம் நடத்தியது. அப்போது பொலிசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள்...

ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தாதீர்: அசாத்திற்கு ஒபாமா?

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தினால் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அசாத்திற்கு ஒபாமா எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே, ஐநா தன்னுடைய முக்கியமல்லாத சர்வதேசப் பணியாளர்களிடம் சிரியாவை விட்டு வெளியேறுமாறு சொல்லிவிட்டது. இதனால் ஐநாவின் நூறு பணியாளர்களுள் 25 பேர் இந்த வாரத்திற்குள் வெளியேறிவிடுவர். ஐநாவின் செய்தி நிறுவனமான ஐரின், சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸில் நடைபெறும் மனித நேயப்பணிகளும்...

புகலிடம் தேடி வந்த டுனீஷிய இளைஞர் சுட்டுக்கொலை ?

சுவிட்சர்லாந்தில் சூரிச் மாநிலத்தில் உள்ள எம்பிராச் நகராட்சியில் உள்ள புகலிட மையத்தில் தங்கியிருந்த டுனீஷியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைச் சுட்ட சில நிமிடங்களில் காவல்துறைக்கு தொலைபேசித் தகவல் வந்தது. சூரிச் காவலர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது துப்பாக்கியால் சுட்ட காயங்களுடன் ஒருவர் தரையில் விழுந்துகிடந்தார். அவரைப் பிழைக்க வைக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. கொலை செய்ததாகக் கருதப்படும் இளைஞரைக்...

வடகொரியாவுக்கு ரஷ்யா திடீர் எதிர்ப்பு

வடகொரியா கடந்த ஏப்ரல் மாதம் ஏவிய ராக்கெட் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து தனது இரண்டாவது ராக்கெட்டை வருகிற 10ஆம் திகதிக்கும், 22ஆம் திகதிக்கும் இடையில் ஏவ திட்டமிட்டுள்ளது. இப்பணியில் வடகொரியா அதிகாரிகளுக்கு ஈரான் அதிகாரிகள் உதவி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் வடகொரியாவின் ராக்கெட் ஏவும் திட்டம் ஐ.நா விதிமுறைகளை மீறும் செயல் என அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையே...