siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 4 டிசம்பர், 2012

ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தாதீர்: அசாத்திற்கு ஒபாமா?

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தினால் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அசாத்திற்கு ஒபாமா எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே, ஐநா தன்னுடைய முக்கியமல்லாத சர்வதேசப் பணியாளர்களிடம் சிரியாவை விட்டு வெளியேறுமாறு சொல்லிவிட்டது.
இதனால் ஐநாவின் நூறு பணியாளர்களுள் 25 பேர் இந்த வாரத்திற்குள் வெளியேறிவிடுவர்.
ஐநாவின் செய்தி நிறுவனமான ஐரின், சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸில் நடைபெறும் மனித நேயப்பணிகளும் சிறிதுகாலம் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளது.
ஃபோர்ட் மெக் நேரில் உள்ள தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பேசிய ஒபாமா, லிபியாவில் இருக்கும் அணு ஆயுதங்களும் சிரியாவிலிருக்கும் ரசாயண ஆயுதங்களும் மற்ற இடங்களுக்குப் பரவமால் இருக்க நாங்கள் முயல்கிறோம்.
இருபதாம் நூற்றாண்டின் மோசமான ஆயுதங்களைக் கொண்டு 21ம் நூற்றாண்டை இருட்டாக்க நாங்கள் அனுமதிக்க முடியாது.
இன்று நான் ஆசாத்துக்கு ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தும் பெருங்குற்றத்தில் நீங்கள் ஈடுபட்டால் அதற்கான பின்விளைவுகளை நீங்களே பொறுப்பாக வேண்டும் என்றார்.
ஆனால் சிரியா அரசு ஒபாமாவின் ஊகத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.
எந்த நிலையிலும் நாங்கள் ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தமாட்டோம். மேலும் எங்களிடம் அதுபோன்ற ஆயுதங்களையே கிடையாது என்று சிரியா தெரிவித்துவிட்டது.
சிரியாவில் பன்னிரெண்டு இடங்களில் அதிக விஷத்தன்மை உடையதும் நரம்புகளைச் செயலிழக்கச் செய்வதுமான ரசாயண ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
சிரியா ரசாயண ஆயுதங்களை, போர் விமானம் மற்றும் ஏவுகணை மூலமாகத் தனது இலக்கு நோக்கி தாக்க முடியும் என்று CIA அமெரிக்காவின் உளவு நிறுவனம் தெரிவித்தது.
பெயர் சொல்ல விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் நியுயார்க் டைம்ஸ் செய்தியாளரிடம் பேசியபோது சிரியாவில் ஆற்றல் மிகுந்த ரசாயண ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்க அரசு சில எதிர்பாராத திட்டங்களை வகுத்து வருவதாகவும் கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக