siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 4 டிசம்பர், 2012

இஸ்ரேலின் வீடு கட்டும் திட்டத்திற்கு ஜேர்மனி எதிர்ப்பு

பாலஸ்தீனியர் ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேலின் நிலப்பகுதியில் 3000 புதிய வீடுகளைக் கட்ட இஸ்ரேலிய அரசு, அறிவிப்பு வெளியிட்டிருப்பதை ஜேர்மனி எதிர்த்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்தி பாலஸ்தீனியரிடமிருந்து அந்த நிலப்பகுதியைக் கையகப்படுத்திய பின்பே அங்கு கட்டுமானத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
பாலஸ்தீனியரின் கைவசம் இருக்கும்போதே அங்கு வீடு கட்ட "டெண்டர்" விடுவது அடாத செயல் என்றும் இத்திட்டத்தை உடனே அரசு திரும்பப் பெறவேண்டும் என்றும் ஜேர்மனி அரசின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபன் ஸீபெர்ட் கூறினார்.
இந்த வாரத்தில் ஜேர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கெலும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகுவும் ஆக்கிரமிப்புப் பகுதி குறித்துப் பேச இருக்கின்றனர்.
இந்நிலையில் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரைப்பகுதியில் அரசு யூதர்களுக்கான 3000 வீடுகளைக் கட்ட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இரு தரப்பினரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால் மட்டுமே அமைதிப் பேச்சுவார்த்தை எதிர்பார்த்த பலனைத் தரும் என்றார் ஸீபெர்ட்.
இஸ்ரேல் தூதருக்கு அழைப்பு விடுத்த பிரான்ஸ் மற்றும் பிரிட்டனைப் போல ஜேர்மனியும் செய்யுமா என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளியும் கேள்வி எழுப்பிய போது ஜேர்மனிக்கு இஸ்ரேலியத் தூதரை அழைத்துப் பேசும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.
இந்த வாரம் பெர்லினில் நடக்கும் கூட்டத்தில் மெர்கெல் மற்றும் நெதான்யாகுவுடன் அவர்களின் அமைச்சரவை சகாக்களும் கலந்து கொள்கின்றனர்.
இஸ்ரேலின் இந்த அறிவிப்பு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடைஞ்சல் விளைவிப்பதாகும் என்று ஸீபெர்ட் கூறினார்.
கடந்த வாரமே இஸ்ரேல், ஜேர்மனியிடம் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஐநா சபையில் வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது.
ஆனால் இஸ்ரேலின் விருப்பத்திற்கு மாறாகப் பாலஸ்தீனம் ஐநாவில் இடம்பெற்றுவிட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் இந்த வாரம் பெர்லினில் நடக்கும் பேச்சுவார்த்தையைக் கூட ரத்துச் செய்து விடலாம் என்று சில அதிகாரிகள் கூறுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

கருத்துரையிடுக