|
|
வடகொரியா கடந்த ஏப்ரல் மாதம்
ஏவிய ராக்கெட் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து தனது இரண்டாவது ராக்கெட்டை வருகிற 10ஆம் திகதிக்கும், 22ஆம்
திகதிக்கும் இடையில் ஏவ திட்டமிட்டுள்ளது. இப்பணியில் வடகொரியா அதிகாரிகளுக்கு
ஈரான் அதிகாரிகள் உதவி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் வடகொரியாவின் ராக்கெட் ஏவும் திட்டம் ஐ.நா விதிமுறைகளை மீறும் செயல்
என அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளன.
இதற்கிடையே தற்போது ரஷ்யாவும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரஷ்ய வெளிவிவகாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகொரியா
ராக்கெட் ஏவும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதை கைவிடுவது ஏற்புடையது
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது |
|
0 comments:
கருத்துரையிடுக