22.09.2012.By.Rajah.பிரான்சில்
முகத்திரையை அகற்றச் சொன்ன பெண் பொலிசைக் கடித்த முஸ்லிம் பெண்ணுக்கு, இரண்டு மாத
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பிரான்சில் மெர்செல் நகரைச் சேர்ந்தவர் லூயி மேரி சூசி(வயது 18). முஸ்லிம்
மதத்தைச் சேர்ந்த இவர், ஜூலை மாதம் கறுப்பு அங்கியால் உடல் முழுவதையும் மறைத்தபடி
மசூதிக்கு செல்ல முயன்றார். பிரான்ஸ் சட்டப்படி உடல் மற்றும் முகத்தை மூடியபடி பொது
இடத்தில் செல்வது குற்றம். எனவே இரண்டு பெண் பொலிசார் லூயியை வழிமறித்து அவரது அடையாள அட்டை மற்றும் ஆவணங்களைக் காட்டும்படி கூறினர், முகத்திரையையும் அகற்றும்படி உத்தரவிட்டனர். அவர்கள் சொன்னதை கேட்காமல் லூயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், கோபத்தின் உச்சிக்குச் சென்ற லூயி, பெண் பொலிஸ் ஒருவரை திடீரென கடித்து விட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பொலிசை கடித்ததை ஒப்புக் கொண்டார் லூயி. இதையடுத்து அவருக்கு இரண்டு மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார் |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
சனி, 22 செப்டம்பர், 2012
முகத்திரையை அகற்ற சொன்னதால் ஆத்திரம்: பொலிசை கடித்த பெண்
சனி, செப்டம்பர் 22, 2012
செய்திகள்
சர்ச்சைக்குரிய திரைப்படத்தை யூடியூபிலிருந்து நீக்க முடியாது: அமெரிக்க நீதிமன்றம்
சனி, செப்டம்பர் 22, 2012
செய்திகள்
22.09.2012.By.Rajah..பிந்திய செய்திகள்..முகமது நபியை தவறாக
சித்திரித்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் திரைப்படத்தை சமூக இணையதளமான யூடியூபில்
இருந்து நீக்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்த திரைப்படத்தில் நடித்த சின்டி லீ கார்சியா, தனக்கு கொலை மிரட்டல்
வருவதாகவும், தன்னுடைய சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும், பல்வேறு நிலைகளில்
பிரச்னைகளை சந்தித்து வருவதால் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை யூடியூபில் இருந்து
நீக்க வேண்டும் என்று கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி வழக்கு
தாக்கல் செய்தார். வழக்கின் பிரதிவாதியாக கூகுள் மற்றும் யூடியூப் இணையத்தளங்களை சேர்த்துள்ளார். அந்த வழக்கில், வீரத்தை வெளிப்படுத்தும் காட்சியில் தன்னை நடிக்க வைப்பதாக தயாரிப்பாளர் கூறியதால் நடித்தேன். திரைப்படத் தயாரிப்பின் போது நபிகள் நாயகம் தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி லூயிஸ் லாவின், இந்தத் திரைப்படத்தை யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளதற்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தார் |
முஸ்லிம்களை இழிவுபடுத்தும் திரைப்படம்: சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா
சனி, செப்டம்பர் 22, 2012
காணொளி
22.09.2012.By.Rajah.முகமது நபியை இழிவுபடுத்தும்
வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த போராட்டத்தின் போது அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களை
போராட்டக்காரர்கள் தாக்கினார்கள். இதில் லிபியாவில் உள்ள தூதரக அதிகாரி கிறிஸ்டோபர்
ஸ்டீவன்ஸ் உள்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒபாமா தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. பிரச்சினைக்குரிய திரைப்படத்தை வெளியிட்ட யூடியூப் நிறுவனத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக பரவியுள்ள பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் ஒபாமா அரசு தொலைக்காட்சி, எப்.எம்.ரேடியோ மற்றும் சமூக வலைத்தளங்களில் தங்களுக்கும், இந்த திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. சுமார் 30 வினாடிகள் தொலைக்காட்சியில் வரும் இந்த பிரசார விளம்பர படம் 7 சேனல்களில் ஒளிபரப்பாகிறது. இதற்காக பாகிஸ்தானில் உள்ள டெலிவிஷன் சானல் நிறுவனத்துக்கு 70 ஆயிரம் டொலர் பணம் வழங்கப்பட்டதாக செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலாந்து கூறியுள்ளார். பிரசார விளம்பர படத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், அமெரிக்கா எல்லா மதத்தையும் மதிக்கிறது. மதத்துக்கு எதிரான எந்த இழிவு செயல்களையும் அமெரிக்கா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று குறிப்பிட்டு உள்ளார். ஹிலாரி கிளிண்டன் கூறுகையில், நாங்கள் மிகத்தெளிவாக இருக்கிறோம். இந்த வீடியோ காட்சிக்கும், அமெரிக்க அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அதை உறுதியாக எதிர்க்கிறோம். நாங்கள் மதசகிப்பு தன்மைகொண்டவர்கள் என்றார். அமெரிக்காவின் இந்த பிரசார விளம்பரம் உருது மொழியில் வெளியானது. மேலும் பல எப்.எம்.ரேடியோவிலும் இந்த விளம்பரம் ஒலிபரப்பப்பட்டது |
எங்களை தாக்கினால் தக்க பதிலடி கொடுப்போம்: ஈரான் ஜனாதிபதி
சனி, செப்டம்பர் 22, 2012
செய்திகள் காணொளி
22.09.2012.ByRajah.எங்களது விடயத்தில்
இஸ்ரேல், அமெரிக்கா அத்துமீறி நடந்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான்
ஜனாதிபதி முகமது அகமது நிஜாத் கூறியுள்ளார்.
ஈரான் - ஈராக் இடையே கடந்த 1980-1988ஆம் ஆண்டுகளில் நடந்த போர் நினைவு நாள்
நேற்று ஈரானில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஈரான் தலைநகர் டெஹ்ரானில், ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் கலந்து கொண்டு அணிவகுப்பை நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இராணுவ பீரங்கிகளும், ஏவுகணைகளும் இடம்பெற்றன. அப்போது தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி முகமது அகமது நிஜாத் கூறுகையில், ஈரான்- ஈராக் இடையே போர் நடந்த போது நமது வீரர்கள் காட்டிய அதே வீர உணர்வுடன், நம்பிக்கையுடன் உலக சக்திகளிடம் இருந்து தற்போது எழுந்துள்ள அச்சுறுத்தல்களையும் நாம் எதிர்கொண்டு வருகிறோம். ஈரான் விடயத்தில் அத்து மீறி நடந்தால் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்தார். இதற்கிடையில் ஈரான் இராணுவ தளபதி அதோல்லா செலேகி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில், ஈரானிடம் வாலாட்டினால் இஸ்ரேலை இல்லாமல் செய்து விடுவோம். எங்களது பலத்தை காட்டும் வகையில் அணி வகுப்பு நடந்தது. யாரையும் மிரட்டும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்றார். |
முகப்பு |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)