
ஆய்வுகளை மேற்கொள்ள ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த உரிமை வழங்கியது அமெரிக்க அரசுஉலகெங்கும் செயல்பட்டுவரும் தீவிரவாதக் குழுக்களை அழிக்க அமெரிக்க அரசு ஆளில்லா விமானங்களை இதுநாள் வரை செயல்படுத்திவந்துள்ளது. இப்போது முதன்முறையாக இந்த வகை விமானங்களின் வர்த்தகப் பயன்பாட்டிற்கும் அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. பன்னாட்டு ஆற்றல் சக்தி நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கும், அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏரோவிரோன்மென்ட்டுக்கும் அலாஸ்கா மாகாணத்தில்...