Saturday, 15 September 2012,By.Rajah.காவலன் திரைப்படத்தில் நாயகி அசின் தோழியாக நடித்த மித்ரா குரியன், தற்போது நந்தனம் என்ற படத்தில் நடித்து வருகிறார். |
இப்படத்தில் நாயகனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவ்
நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் 'காதல் நதிக் கரையோரம்' என்ற பாடல், கேரளாவின் ஆலப்புழையில் உள்ள பேக்வாட்டர் பகுதியில் படமாக்கப்பட்டது. டூயட் பாடல் என்பதால் சிவாஜி தேவும், மித்ரா குரியனும் தனியாக ஒரு படகில் சென்றுள்ளனர். இதனை மற்றொரு படகில் இருந்த இயக்குனர் ஷியாமளன் அடங்கிய படக்குழுவினர் படமாக்கியுள்ளனர். அப்போது எதிர் திசையில் வந்த ராட்சத படகு ஒன்று நாயகன், நாயகி இருந்த படகை உரசிச் சென்றது. இதில் நிலை தடுமாறிய நாயகி கடலுக்குள் விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் உதவி கேட்டு கூச்சல் இட்டுள்ளனர். உடனே அங்கிருந்த மீனவர்கள் நீரில் விழுந்த மித்ராவை காப்பாற்றியுள்ளனர் |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
சனி, 15 செப்டம்பர், 2012
கடலில் விழுந்த அசின் தோழி
சனி, செப்டம்பர் 15, 2012
செய்திகள்
புதிய சாதனையை நிகழ்த்திய நான் ஈ
சனி, செப்டம்பர் 15, 2012
செய்திகள்
Saturday, 15 September 2012.By.Rajah தெலுங்கில் தயாராகி, தமிழிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் படங்களில் புதிய சாதனையைச் செய்திருக்கிறது நான் ஈ. |
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் 50 நாட்களில் தமிழில் மட்டும் 24.5
கோடியை ஈட்டியுள்ளது. தமிழகமெங்கும் நான் ஈ படத்தை 221 தியேட்டர்களில் திரையிட்டனர். இதில் 72 தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடியுள்ளது. சென்னையில் ரூ. 4 கோடியும், கோவையில் ரூ. 4.5 கோடியும், செங்கல்பட்டு ஏரியாவில் ரு. 4.5 கோடியும் வசூலித்துள்ளதாம். தமிழில் வெளியாகி, அதன் தெலுங்கு டப்பிங்கில் அதிக தொகையை சம்பாதித்த ஒரே படம் ரஜினியின் எந்திரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது |
விரைவில் என்றென்றும் புன்னகை படப்பிடிப்பு ஆரம்பம்
சனி, செப்டம்பர் 15, 2012
செய்திகள்
Saturday, 15 September 2012, முகமூடி திரைப்படத்தை தொடர்ந்து ஜீவா, அஹ்மது இயக்கத்தில் என்றென்றும் புன்னகை படத்தில் நடிக்க உள்ளார். |
ஜீவாவுக்கு நாயகிகளாக த்ரிஷா, ஆன்டிரியா ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ்
இசையமைக்கிறார். இந்நிலையில் அவருக்குப் பதில் ஆன்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் படத்தில் முக்கிய வேடத்தில் வினயும் நடிக்கிறார். என்றென்றும் புன்னகை கொமெடி மற்றும் ரொமான்டிக் கலந்த கலவையாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 17ம் திகதி சென்னையில் உள்ள பின்னி மில்லில் தொடங்கி தொடந்து நடைபெற இருக்கிறது |
ஜார்ஜியாவில் மது விருந்து கொடுத்த அனுஷ்கா
சனி, செப்டம்பர் 15, 2012
செய்திகள்
Saturday, 15 September 2012By.Rajah.இரண்டாம் உலகம் படக்குழுவினருக்கு நடிகை அனுஷ்கா மது விருந்து கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. |
ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் திரைப்படம் ரஷ்யாவின் ஜார்ஜியாவில்
படம்பிடிக்கப்பட்டது. ஜார்ஜியாவில் ஒயின் வகைகள் அதிகமாம். இதில் எல்லா வகையான ஒயின்களையும் தனது சொந்த செலவில் வாங்கி, படக்குழுவினரை குடிக்க வைத்துள்ளார். இந்த தகவலுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இயக்குனர் செல்வராகவன் சென்னையில் வைத்த விருந்தில் அனுஷ்கா நாயிடம் கடி வாங்கி வந்தது குறிப்பிடத்தக்கது |
யுத்தம் செய் படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டேன்: மாணிக்க விநாயகம்
சனி, செப்டம்பர் 15, 2012
செய்திகள்
Saturday, 15 September 2012, By.Rajah.யுத்தம் செய் படத்தில் நடித்ததற்காக மிகவும் வருத்தப்பட்டதாக கொலிவுட்டின் சிறந்த பாடகர்களில் ஒருவரான மாணிக்க விநாயகம் நம்மிடம் தெரிவித்தார். |
கொலிவுட்டில் 1980ம் ஆண்டில் இசையமைப்பாளராக அறிமுகமான மாணிக்க விநாயகம், 15000
பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் சூர்யா நடித்த சிங்கம் படத்தில் நானே இந்திரன் நானே சந்திரன் போன்ற பல பாடல்களை பாடிய மாணிக்க விநாயகம், யுத்தம் செய் படத்தில் வில்லனாக நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக அதிகமான பாராட்டுக்கள் வந்தாலும் தன்னுடைய கௌரவமான மதிப்பை சீர்குலைக்கும் வகையிலேயே இந்த கதாப்பாத்திரம் அமைந்ததாக நம் ஊடகப்பேட்டியில் தெரிவித்தார். அதனால் தற்போது எந்த விதமான படங்களில் நடிக்க விருப்பமில்லாமல் இருப்பதாகவும் ஒரு வேளை நல்ல கதாப்பாத்திரம் கிடைக்கும் பட்சத்தில் நடிக்க விரும்புவதாகவும் பாடகர் மாணிக்க விநாயகம் பேசினார் |
மீண்டும் கலக்க வருகிறார் மோகன்
சனி, செப்டம்பர் 15, 2012
செய்திகள்
Saturday, 15 September 2012,By.Rajah. எண்பதுகளின் வெள்ளிவிழா கதாநாயகன் மைக் புகழ் மோகன், மீண்டும் கொலிவுட்டில் வலம்வர இருக்கிறார். |
இளையராஜாவின் இசைத் துணையுடன் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிப் படங்கள்
மோகனுக்கு அமைந்தன. பல படங்களில் அவர் மைக்கும் கையுமாக வந்து பாடுவார். அவர் கடைசியாக நடித்தது சுட்டபழம். தொலைக்காட்சித் தொடர் வாய்ப்புகள், குணசித்திர கதாபாத்திரங்கள் என எவ்வளவோ வந்தும் அவற்றை ஏற்கவில்லை. கதாநாயகனாகத் தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் மணிரத்னத்தின் பட வாய்ப்பைக் கூட மறுத்துவிட்டார். இந்நிலையில் தற்போது ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் மோகன். ஆனால் இந்தமுறை வில்லனாக நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இப்படத்தினை இயக்க இருக்கிறார். |
வலி. வடக்கில் மின்சாரம் விநியோகிக்க "வடக்கின் வசந்த' நிதி கிடைக்கவில்லை; சுன்னாகம் பிராந்திய பொறியியலாளர் தெரிவிப்பு
சனி, செப்டம்பர் 15, 2012
இணைய செய்தி

வலி.வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்
கூட்டம் அண்மையில் தெல்லிப்பழை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்
நடைபெற்றது.
இதன் போது பொதுமக்கள் தமக்கு வடக்கின் வசந்தம்
திட்டத்தின் ஊடாக இலவச மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்று
குற்றஞ்சாட்டினர்.
அத்துடன் தெல்லிப்பழை பிரதேச செயலரால் மக்கள்
அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் 143.59 கிலோமீற்றர் பகுதிக்கும்
ஏனைய பகுதிகளில் 14.95 கிலோ மீற்றர் பிரதேசத்துக்கும் இன்னமும் மின்விநியோகம்
வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த மின்சார சபையின் பொறியியலாளர்
எஸ்.ஞானகணேசன், கொல்லன்கலட்டி பகுதிக்கு மின்விநியோகம் மேற்கொள்வதற்கு அனுமதி
கிடைத்துள்ளது. அதற்கான வேலைகள் இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படும்.
தந்தை செல்வாபுரம் பிரதேசத்தில் பிரதான
மார்க்கத்தில் மின்விநியோகம் முடிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகளிலுள்ள மக்கள் தமது வீட்டு மின்
இணைப்பு வேலைகளைப் பூர்த்தி செய்யாததால் எம்மால் இணைப்பை வழங்க முடியாதுள்ளது.
மேலும் நாங்கள் மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளும்போது தந்தை செல்வாபுரத்தில் உள்ள
2 வீதிகள் பற்றைக் காடுகளாக இருந்தன.
இதனால் நாம் மதிப்பீடுகள் மேற்கொள்ளாததுடன் மின்
இணைப்பும் வழங்கவில்லை. இனி அடுத்த கட்டத்தில்தான் அந்தப் பகுதிகளுக்கு மின் வழங்க
முடியும். எமக்குத் தற்போது வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் இலவச
மின்விநியோகம் மேற்கொள்வதற்கு அமைச்சிலிருந்து நிதி ஒதுக்கீடு
கிடைக்கப்பெறவில்லை.
அத்துடன் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின்
வழங்கப்பட்ட மக்களுக்கு ஒரு வருடம் இலவச மின்விநியோகம் என்ற திட்டம் கடந்த
வருடத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பணம் செலுத்த வேண்டும் என்று
கூறினார்.
பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தனல் வீதி விளக்கு
பொருத்துவதற்கு மின்சார சபை கட்டணம் அறவிடாமல் செய்ய முடியுமா என்று கேட்டபோது மனித
வலுவைப் பயன்படுத்தியே மேற்கொள்வதால் அரைவாசிப் பணத்தைச் செலுத்துமாறும் பிரதம
பொறியியலாளர் தெரிவித்தார்
முல்லைத்தீவு கொக்குத் தொடுவாயில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்; சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு
சனி, செப்டம்பர் 15, 2012
செய்திகள்
By.Rajah.முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத் தொடுவாய் தமிழ்ப்
பிரதேசத்தில் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஒன்லையின் உதயனுக்கு கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் கிராம அலுவலர் பிரிவிலுள்ள முந்திரிகை க் குளம், ௭ரிஞ்சகாடு உட் பட நான்கு தமிழ்க் கிராம ங்களில் 500 ஏக்கர் காணிகளே சிங்கள குடியேற்றத்திற்காக அபகரிக்கப்படவுள்ளது. குறித்த காணிகள் தமிழ் மக்களுக்குச் செந்தமான உறுதிக்காணிகளாகும் இந்தக் காணிகள் கடந்த சில வாரங்களாக அளவீடு செய்யப்பட்டு 200 க்கும் மேற் பட்ட தற்காலிக வீடுகள் அமைக்கப் பட்டுள்ளதுடன் சாலை வசதிகளும் செய்யப்பட்டு மின்கம்பங்கள் நாட்டப்பட்டு வருகின்றன.
அதே நேரம் நீண்ட காலமாக இப்பகுதியில் குடியிருந்து
போரினால் இடம்பெயர்ந்து தற்போது மீளக்குடியமர்ந்துள்ள 200 தமிழ் குடும்பங்களுக்கு
இதுவரை தற்காலிக வீடுகள் கூட அரசினால் கட்டிக் கொடுக்கப்படவில்லை அத்துடன் குடிநீர்
உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என அவர்
சுட்டிக்காட்டியதுடன்,
இந்த சிங்களக்குடியேற்றம் தொடர்பாக முல்லைத்தீவு
அரசாங்க அதிபரிடம் தாம் தொடர்பு கொண்டு கேட்ட போது இது குறி த்து தனக்கு ௭வரும்
அறிவிக்கவில்லை ௭ன் றும் பொது மக்களிடமிருந்தும் முறைப் பாடு கள் கிடைக்கவில்லை
௭ன்றும் தெரி வித்தார்.
அதேவேளை குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் பொதுமக்கள் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் முறைப்பாடு செய்ய சென்றுள்ளனர் என்றார். அத்துடன் குறித்த பகுதியில் சிங்கள குடியேற்ற திட்டத்திற்கான அபிவிருத்திகள் அனைத்தும் வெலிஓயா பிரதேச செயலகத்தின் ஊடாகவே இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். |
செம்பாட்டு மண்ணின் பண்பாட்டு வேர் - மகாஜனா
சனி, செப்டம்பர் 15, 2012
இணைய செய்தி

அக்காலங்களில் நாவலர் பெருமானின் வாக்கைத் தெய்வ வாக்காகக் கொண்ட சைவப் பெரியார் பலரும் பாடசாலைகளை ஸ்தாபிக்க தலைப்பட்டனர். பாவலர் அருளம்பலம் துரையப்பாபிள்ளை அவர்கள் இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தெல்லிப்பழைக் கிராமத்தில் பனஞ்சோலைகள் நிறைந்த இடத்தில் வியத்தகு மகாஜனா பாடசாலையை 1910 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்கள் 14 ஆம் திகதி தோற்றுவித்தார். இவர் ஒரு பாவலர்; புலமையாளர்; கல்விமான்; தேசப்பற்றாளர். இம்மாநிலம் பயனுற்று, மண்ணுலகம் மாண்பு பெற வாழும் வாழ்வே உண்மையான வாழ்வு என உலகுக்கு உணர்த்தியவர்தான் பாவலர். அவரது உயர்ந்த சிந்தனைகளாலும், நோக்கங்களாலும் உருவான 'மஹாஜனா' என்னும் விருட்சம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு படிக்கட்டைக் கடந்து, நூற்றாண்டைக் கடந்து, பாவலரின் கனவை நிஜமாக்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.
1910 ஆம் ஆண்டு அமெரிக்க மிஷன் பாடசாலையுடனான தொடர்பை முறித்த பாவலர் துரையப்பாபிள்ளை அவர்கள் தனது வீட்டில் மகாஜனா பள்ளிக்குக் கால்கோள் எடுத்தார். இதேகாலப் பகுதில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளான கொக்குவில் இந்துப் பாடசாலை, மானிப்பாய் இந்துப் பாடசாலை போன்று தெல்லிப்பழை இந்துப் பாடசாலை என பாடசாலைக்குப் பெயர் சூட்டாமல், 'மகாஜனா' எனப் பெயர் சூட்டியமை 'யாவர்க்கும் உரியது' என்ற பாவலரின் தூரநோக்குப் பார்வையைப் புலபடுத்துகிறது. 1911 ஆம் ஆண்டு பாடசாலைக்கான பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுத்த பாவலர், 1912 ஆம் ஆண்டு தற்போதைய கல்லூரி அமைந்துள்ள இடத்தில் பாடசாலைக்கான கட்டடத்தை நிறுவினார். 1918 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை காரணமாக பாடசாலைக் கட்டடம் தரைமட்டமானதுடன், மீண்டும் பாவலரது வீட்டில் பாடசாலை இயங்க ஆரம்பித்தது. 1919 ஆம் ஆண்டு தரைமட்டமான பாடசாலை மீண்டும் உயிர்பெற்று T வடிவில் கட்டடம் கட்டப்பட்டு, பாடசாலை மீண்டும் இயங்க ஆரம்பித்தது. 1926 ஆம் ஆண்டு மகாஜனாவின் ஆரம்ப பாடசாலை தெல்லிப்பழை சரஸ்வதி கனிட்ட தமிழ்க் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதுடன், அது 1928 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
அந்நிய ஆதிக்கத்தால் தமிழர் பண்பாடுகள் அழிவடையக் கூடாது என்ற ஆழமான உணர்வுகளால் உந்தப்பட்டு பாவலர் மகாஜனாவை ஆரம்பித்தார் என்றே வரலாறுகள் கூறுகின்றன. அம்பனைக் கிராம ஏழை விவாசாயிகளின் பிள்ளைகள் நிலையான செல்வமான கல்விச் செல்வத்தைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கதோடு இப்பாடசாலையை ஸ்தாபித்த பாவலர், இப்பாடசாலையில் 25.06.1929 வரை அதிபராகவும் இருந்து சேவையாற்றி மறைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் திரு.கா.சின்னப்பா அதிபராகப் பதவியேற்றார். 1935 ஆம் ஆண்டு அதிபர் கா.சின்னப்பா தலைமையில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டு, முதலாவது 'மகாஜனன்' நூல் வெளியிடப்பட்டது.
மகாஜனாவானது, சைவத் தமிழ்ப் பண்பாட்டைக் கருவூலமாகக் கொண்டு கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆயிரக் கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி கலங்கரை விளக்கமாக விளங்குகிறது. மக்கள் இக்கல்லூரியின் ஸ்தாபகரான பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களைக் கல்வியின் காவலனாகப் போற்றுகிறார்கள். தந்தை வழியில் கர்ம வீரராக மகாஜனாக் கல்லூரியைக் கட்டியெழுப்பியவர் ஆழுமை மிக்க அவரது புதல்வர் 'மகாஜன சிற்பி' அமரர் து.ஜயரத்தினம் அவர்கள். அவர் 1936 ஆம் ஆண்டு பாடசாலையில் சாரணியத்தை ஆரம்பித்து வைத்ததுடன், 1945 ஆம் ஆண்டு பாடசாலையின் அதிபராகப் பொறுப்பேற்றார். தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் நிர்வாக சபைத் தலைவராக அணி சேர்த்த இவர், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு 'துர்க்கா துரந்தரி' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. 1947 ஆம் ஆண்டு பாடசாலை இரண்டாம் தரப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டதுடன், அதே ஆண்டு மே மாதம் இந்தியாவில் இருந்து விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்கள் பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 1949 ஆம் ஆண்டு மகாஜனா முதற்தர கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டதுடன் அதிபர் து.ஜயரத்தினம் வட மாகாண ஆசிரியர் சங்கத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1950 ஆம் ஆண்டு கல்லூரியின் வளர்ச்சிக்காக நிதி சேர்க்கும் முகமாக இந்திய திரைப்பட நட்சத்திரங்களின் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. 1951 ஆம் ஆண்டு வித்துவான் நா.சிவபாதசுந்தரனார் அவர்கள் கல்லூரி கீதம் மற்றும் கொடி கீதம் ஆகிய இரண்டையும் இயற்றினார். மேலும் அதேஆண்டு முதன் முதலாக பொறியியல் துறைக்கு திரு.அ.வேல்சாமி பேராதனைப்பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகி பாடசாலைக்குப் பெருமை சேர்த்தார். தொடர்ந்து 1952 ஆம் ஆண்டு முதன் முதலாக திரு. S.I.சத்தியோசாதம் விஞ்ஞானத்துறைக்கும், திரு. கே.நல்லைநாதன் மற்றும் திரு.இ.குமாரதேவன் ஆகியோர் கலைத்துறைக்கும் தெரிவானார்கள். 1954 ஆம் ஆண்டு கல்லூரிக்கு நிதி சேகரிக்கும் முகமாக மிகப் பிரமாண்டமான களியாட்ட விழாவை து.ஜயரத்தினம் அவர்கள் ஒழுங்கு செய்தார். இக்களியாட்ட விழா ஒரு மாதம் நடைபெற்றதுடன், இதில் இந்தியக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டர். இக்களியாட்ட விழாவில் லொத்தர் சீட்டிழுப்பு மூலம் கல்லூரிக்கு ஒருலட்சம் ரூபா நிதி சேகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
1955 ஆம் ஆண்டு துரையப்பா மண்டபம் (பொன் விழா மண்டபம்), நூல் நிலையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1960 ஆம் ஆண்டு கல்லூரி தனது பொன் விழாவை கொண்டாடியதுடன், இவ்விழா துரையப்பாபிள்ளை ஞாபகார்த்த மண்டப திறப்பு விழாவுடன் ஆரம்பமானது. இதன்போது கல்லூரி பொன் விழா மலர் வெளியிடப்பட்டதுடன், கல்லூரியில் சிவகாமி சமேத ஆனந்த நடராசர் ஆலயம் சமய சடங்கு கிரியைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் கல்லூரியானது அவ்வருடம் தனியார் பாடசாலை என்னும் அந்தஸ்தில் இருந்து அரசாங்க பாடசாலை என்னும் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது. அவ்வருடம் மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1800 ஐ எட்டியது. கல்லூரியின் தொடர்ச்சியான வளர்ச்சி காரணமாக 1961 ஆம் ஆண்டு கல்லூரி அதி உயர் தரத்துக்கு உயர்த்தப்பட்டது. 1969 ஆம் ஆண்டு கல்லூரியின் வைர விழா மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் 1940 -1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மஹாஜனாவின் மும்மணிகளான மகாகவி உருத்திரமூர்த்தி, அ.செ.முருகானந்தம், அ.ந.கந்தசாமி மற்றும் செ.கதிரேசப்பிள்ளை ஆகியோ ஈழத்து இலக்கிய உலகிற்கு வழங்கிய பங்களிப்புக்களால் மகாஹனாவின் பெயர் அழியா இடம் பெற்றது.
பாவலரின் மருமகளும், மகாஜன சிற்பி ஜயரத்தினம் அவர்களின் மனைவியுமான திருமதி. இராணிரத்தினம் ஜயரத்தினம் கடந்த 07.06.2010 அன்று தனது 90 ஆவது வயதில் லண்டனில் காலமானர். அவர் தனது கணவருடன் இணைந்து மகாஜன அன்னையின் வளர்ச்சியில் கிட்டத்தட்ட 50 வருடங்கள் தன்னை அர்ப்பணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1971, 1972 ஆம் ஆண்டுகளில் முறையே திரு.மா.மாகாதேவன், திரு.பொ.ச.குமாரசாமி ஆகியோர் கல்லூரி அதிபராகப் பொறுப்பேற்றனர். 1973 ஆம் ஆண்டு திரு.க.சிவசுப்பிரமணியம் அதிபராகப் பொறுப்பேற்றதுடன், 1976 ஆம் ஆண்டு திரு.பொ.கனகசபாபதி அதிபராகக் கடமையேற்றார். தொடர்ச்சியாகப் பல ஆளுமை மிக்க அதிபர்களையும், தன்னலம் கருதாத பல நூறு ஆசிரியர்களையும் இக்கல்லூரி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1987 ஆம் ஆண்டு OSA (UK) ஆரம்பிக்கப்பட்டதுடன், 1988 ஆம் ஆண்டு கல்லூரி தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. 1990 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் சகல வசதிகள் கொண்ட பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்ட 100 பாடசால்களில் மகாஜனாவும் ஒன்று என்பதுடன், வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 3 பாடசாலைகளில் இதுவும் ஒன்று என்ற பெருமை இக்கல்லூரிக்கு உண்டு. 1991 ஆம் ஆண்டு OSA (France) உருவாக்கப்பட்டதுடன், 1994 ஆம் ஆண்டு கொழும்பு OSA மீளமைக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட போர் அனர்த்தம் காரணமாக கல்லூரி இடம்பெயர்ந்து, மீண்டும் தெல்லிப்பழையில் 1999 ஆம் ஆண்டு இயங்க ஆரம்பித்தது. 2001 ஆம் ஆண்டு ஸ்கந்தவரோதயக் கல்லூரியுடன் 'Battle of the Heros' துடுப்பாட்டப் போட்டி ஆரம்பிக்கப்பட்டதுடன், 2003 ஆம் ஆண்டு OSA (Germany) ஆரம்பிக்கப்பட்டது.
இக்கல்லூரியானது அறுபது, எழுபதுகளில் இலங்கையின் பல பாகங்களில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கி, பெரும்பான்மையான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாவதற்கு ஊன்று கோலாக இருந்துள்ளது. இலங்கையில் கல்விமான்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் பல்துறை சார்ந்த விற்பன்னர்கள் பலரை உருவாக்கும் உன்னத பணியில் மகாஜனாவுக்கு தனிப் பங்கு உண்டு. நாட்டில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலையில் கல்லூரி பல இடங்களில் இடப்பெயர்ந்து, தற்காலிக கொட்டகைகள் பலவற்றில் இயங்கியமையும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கல்லூரி தனது சொந்த இடத்தில் நூற்றாண்டைக் கண்டமை மன மகிழ்வுக்கு உரியது.
இங்கு கல்வி கற்ற ஒவ்வொருவரும் மகாஜனாவை தங்கள் அன்னையாக உணர்கிறார்கள்; பார்க்கிறார்கள்; மதிக்கிறார்கள்; வணங்குகிறார்கள். ''மகாஜனா எங்கள் தாய்; எங்களது அறிவின் ஆதாரம். நாங்கள் வரித்துக் கொண்ட இலட்சியங்கள், எங்களை வழிப்படுத்துகின்ற விழுமியங்கள், எங்கள் வாழ்வுக்கான திறன்கள், மேலான ரசனைகள் அனைத்தும் மகாஜனா அன்னையின் அருட்கொடைகள்'' என பேராசிரியர் நா.சண்முகலிங்கம் அவர்கள் பெருமை கொள்வது இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட கல்வி மறுமலர்ச்சியின் பலனால் பல கல்வி நிறுவனங்கள் உருவாகின. அக்கல்வி நிறுவனங்களுக்கும் மகாஜனாவுக்கும் பாரியதொரு வேறுபாடு உண்டு. ஏனைய பாடசாலைகள் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த வசதி படைத்த பேருள்ளம் கொண்ட நிலச் சுவாந்தர்கள் மற்றும் வள்ளல்கள் முதலியோரால் ஆரம்பிக்கப்பட்டன. அதேவேளை இந்து போர்ட் முதலிய கல்வி நிறுவனங்களால் ஸ்தாபித்துப் பராமரிக்கப் பட்டன. ஆனால் மகாஜனாக் கல்லூரியானது, கல்வி அறிஞர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டு, கிராம மக்களாலும், பழைய மாணவர்களாலும், பெற்றோர்களாலும் வளர்த்தெடுக்கப்பட்டது. இதனாலேயே ஒரு சிறிய பாடசாலை கிராமத்துப் பல்கலைக்கழகமாகப் பரிணமித்தது என்றால் அது மிகையாகாது.
அறுபது - எழுபதுகளில் விளையாட்டுத்துறைகளில் குறிப்பாக உதைப்பந்தாட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் இலங்கை முழுவதும் பல சாதனைகளை இக்கல்லூரி புரிந்துள்ளது. இலங்கைத் தாயகமாகக் கொண்ட தமிழ் மக்கள் உலகம் முழுவதும் புலபெயர்ந்து வாழ்கிறார்கள். அந்தவகையில் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கமானது இலங்கைத் தலைநகர் கொழும்பு உட்பட பல நாடுகளில் கிளைகளைக் கொண்டு இயங்குகிறது.
'உனை நீ அறி' (Know thyself ) என்ற பாடசாலை விருது வாக்குக்கு அமைய பாடசாலையின் தூரநோக்கு 'உயர் விழுமியங்களைப் பேணும் பூரண மனிதத்துவ மாணவ சமூக உருவாக்கம்' (Creation of perfect hemanistic society of great values.)ஆகும். இக்கல்லூரியில் தற்போது இணைப்பாட விதானச் செயற்பாடுகளுக்காக மாணவர் முதல்வர் ஒன்றியம், உயர் தர மாணவர் மன்றம், தமிழ் மன்றம், ஆங்கில மன்றம், இந்து மன்றம், கிறிஸ்தவ மன்றம், விஞ்ஞான மன்றம், சமூகக் கல்வி மன்றம், சாரணியம், சுற்றாடல் பாதுகாப்பு மன்றம், ஒழுக்காற்று சபை, நுண்கலை மன்றம், சதுரங்கக் கழகம், இளம் புத்தூக்குனர் கழகம், நூலகர் மன்றம், பொது அறிவு மன்றம், விவாத மன்றம், மனைப்பொருளியல் மன்றம், தகவல் தொழிநுட்ப மன்றம், புகைப்படக் கலை மன்றம் முதலிய மன்றங்களும், இலங்கைச் செஞ்சிலுவை சங்கம், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவு, மாணவர் நலன்புரி படைப்பிரிவு முதலிய கழகங்களும் இயங்கின்றன
கடந்த எட்டு மாதங்களில் 25,000 வாகன விபத்துகள்
சனி, செப்டம்பர் 15, 2012
இணைய செய்தி
.By.Rajah.இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில்
25,000 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன் அவ்விபத்துகளால் 1500 பேர்
பலியாகியுள்ளதுடன், 11,000 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம்
தெரிவித்துள்ளது.
இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அதற்கு சாரதிகளின் ஒத்துழைப்பும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவையெனவும் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
மதுபோதையில் வாகனங்களைச் செலுத்துதல், கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வாகனங்களை ஓட்டிச்செல்லல், சாரதிகளிடையேயான போடித்தன்மை, நித்திரை கலக்கத்தில் வாகனங்களைச் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இவ்வாறு விபத்துகள் அதிகரிக்கக் காரணமாய் அமைந்துள்ளன.
வாகனவிபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளமை கவலைக்குரிய விடயமே.
வாகனவிபத்துகள் அதிகரிப்பதற்கு சாரதிகள் மாத்திரம் காரணம் எனச் சொல்லிவிட முடியாது. பாதசாரிகளின் கவனயீனமும் ஒரு காரணமாய் அமைந்துள்ளது.
எனவே வாகனவிபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பொதுமக்களும் தமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். அத்தோடு சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். அதேபோன்று பாதசாரிகளும் பாதைகளைக் கடக்கும் போதும் வாகனங்களில் பயணிக்கும் போதும் ஏனைய பல சந்தர்ப்பங்களிலும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதன் மூலம் வாகனவிபத்துகளைக் கட்டுப்படுத்தலாம்

கணவர் சைகையால் உணவு கேட்பது மிக
சனி, செப்டம்பர் 15, 2012
இணைய செய்தி
வேதனையாக உள்ளதால்
பிணையில் விடுவிக்குமாறு கோருகிறார் சதீஸின் மனைவிசரியாகக் கவனித்து முறையாக சிகிச்சையளித்தால் கணவரை காப்பாற்றலாம். ௭னது கணவரை
பிணையில் விடுவியுங்கள். நாங்கள் காப்பாற்றுகின்றோம் ௭ன்று தமிழ் அரசியல் கைதியான
சதீஸின் மனைவியான சதீஸ் கவிதா கண்ணீர் மல்க கோரிக்கை
விடுக்கின்றார்.
கணவரால் பேச முடியவில்லை. சரியாக கண்ணைத் திறந்து பார்க்க முடியவில்லை. ௭ல்லாம் சைகையால் தான் தெரிவிக்கின்றார். அவரை முறையாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்கு மகசீன் சிறைச்சாலையின் வைத்தியசாலை உகந்த இடமில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
நாங்கள் கொண்டு செல்லும் சாப்பாட்டை கொடுப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. பழங்களையும் சூப்பையும் மாத்திரமே கொடுக்குமாறு வலியுறுத்துகின்றனர். ஆனால் கணவர் சைகையால் சாப்பாடு வேண்டுமென கேட்கின்றார். மிகவும் வேதனையாக இருக்கிறது. நான் பராமரித்துக் கொண்டால் அவருக்கு உணவு ஊட்டி விடுவேன்.
கடந்த நான்கு வருடமாக சிறைச்சாலையில் இரு ந்த கணவர் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். கடந்த மாதம் காலிக்கு கொண்டு சென் றதன் பின்னரே இவ்வாறான நிலைமை க்கு உள்ளாகியுள்ளார். காதில் பின்புறமாக தையல்கள் போடப்பட்டுள்ளன. சிறைச்சாலைக்குள் வீழ்ந்து காயமடைந்ததாகவும் பின்னர் காலி வைத்தியசாலையில் இருந்த போது கட்டிலில் இருந்து தவறி வீழ்ந்து இந்த நிலைக்கு உள் ளானதாகவும் சொல்கின்றார்கள்.
ஆனால் ௭ன்னால் அதனை நம்பக்கூடியதாக இல்லை. கட்டிலில் இருந்து வீழ்ந்த ஒரு வருக்கு ௭ப் படி காதின் பின்புறத்தில் காய ங்கள் ஏற்பட்டிருக்கும் ௭ன்ற சந்தேகம் ௭ம க்கு உள்ளது. ௭ப்படியோ அதைப்பற்றி பேசி இப்போது வேலையில்லை. தற்போது அவர் இருக்கின்ற நிலையிலிருந்து அவரை காப்பாற்ற வேண்டும் ௭ன்றார்

சுவிஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒட்டோ ஸ்டிச் மரணம்
சனி, செப்டம்பர் 15, 2012
தகவல்கள்
சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012,By.Rajah.சுவிட்சர்லாந்தில் 1988 மற்றும்
1994ம் ஆண்டில் அந்நாட்டிற்கு.ஜனாதிபதியாக பொறுப்பு வகித்த ஒட்டோ ஸ்டிச் காலமாகி
உள்ளார்.
ஒட்டோ ஸ்டிச் சுவிஸ் அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினராகவும் நிதி அமைச்சராக
1983- 1995ம் ஆண்டு வரை இவர் பணியாற்றியுள்ளார். சுவிஸின் மத்திய இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான இவரது சாதனைகளில் முக்கியமாக சர்வதேச நாணய நிதியத்திலும், உலக வங்கியிலும் சுவிட்சர்லாந்து உறுப்பினராக 1992 இல் பதிவு செய்யப்பட்டு VAT எனப்படும் வரிச்சலுகையைப் பெற முடிந்ததைக் கூறலாம். இன்னொரு சாதனையாக எரிபொருள் மீதான வரி அதிகரிப்பில் சுவிட்சர்லாந்து வலிந்து ஈடுகட்ட முடிந்தமையையும் கூறலாம். நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியராகவும் அரசியல் ஞானியாகவும் விளங்கிய இவர், தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தது 1963 இல் டொனார்ச் நகர ஆளுநராகத் தெரிவு செய்யப் பட்டதிலிருந்து ஆகும். சுவிஸ் அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் இவரைப் பற்றிக் கூறுகையில் ஒட்டோ ஸ்டிச் சற்று பிடிவாத குணம் மிக்க முரட்டுத்தனமானவர் என்ற போதும் மெல்லிய இதயம் உடையவர் என்று கூறியுள்ளார் |
எண்ணெய் தாங்கி வாகனத்துடன் பேருந்து மோதி பயங்கர விபத்து: 56 பேர் பலி
சனி, செப்டம்பர் 15, 2012
இணைய செய்தி
சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012, By.Rajah.ஆப்கானிஸ்தானில் பயணிகள்
பேருந்து, எண்ணெய் தாங்கி வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 51 பேர்
பலியானதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கான்ஸி மாகாணத்திலிலுள்ள அப்பான்ட் மாவட்டத்தில் காபூல்- கந்தஹாருக்கான
நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நடந்த சிறிது நேரத்தில் பேருந்தும் எண்ணெய் தாங்கி வாகனமும் தீப்பற்றி எரிந்துள்ளன. இதில் பேருந்தில் 56 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் வாகனங்களிலிருந்து எரிந்து கருகிய சடலங்களை மீட்கும் பணியில் ஆப்கான் பொலிஸாரும் படைவீரர்களும் ஈடுபட்டுள்ளனர். பலரது சடலங்கள் அடையாளங்காண முடியாத வகையில் எரிந்து கருகியுள்ளதாக மாகாண பொலிஸ் தலைமை அதிகாரி ஜெனரல் ஸரவார் ஸாஹித் தெரிவித்தார் |
நல்லூர் பிரதேசசபைக்கு சொந்தமான காணியை அபகரித்து முகாம் அமைக்க இராணுவம் முயற்சி!
சனி, செப்டம்பர் 15, 2012
இணைய செய்தி
இது தொடர்பாக நல்லூர் பிரதேச சபையில் நேற்று நடைபெற்ற நிர்வாக சபையின் கூட்டத்தின்போதும் ஆராயப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கலாசாலை வீதியில் பாற்பண்ணைக்கு முன்பக்கத்திலுள்ள நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான 5.5 பரப்புக் காணியினையே இராணுவத்தினர் இவ்வாறு உரிமை கோரியுள்ளனர்.
குறித்த காணியானது நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான போதிலும் அதனை தம்மிடம் வழங்குமாறு ஊரெழு படைமுகாம் இராணுவத்தினர் கேட்டுள்ளனர்.
எனினும் இராணுவத்தினர் கேட்கும் குறித்த காணியினை எக்காரணம் கொண்டும் வழங்க முடியாதென்று நேற்று நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியினை 2012-ம் ஆண்டு ஆரம்பம் முதலே ஊரெழு படைமுகாம் இராணுவ அதிகாரிகள் உரிமை கோரியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் இராணுவத்தினர்க்கு குறித்த காணியினை தாரை வார்த்துக் கொடுக்க முடியாது எனவும் ஆனி மாதம் நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு கடந்த யூன் மாதம் 7-ம் திகதி அன்று யாழ்.அரச அதிபருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதன் பின்னர் தற்போது 3 மாதங்கள் கழிந்துள்ள நிலையில் மீண்டும் குறித்த காணியினை இராணுவத்தினர் உரிமை கோரியுள்ளனர்.
இராணுவத்தினரின் உச்சக்கட்ட செயற்பாடுகளாக சென்ற வாரம் 6 இராணுவத்தினர் குறித்த காணிக்குச் சென்று அயல் பகுதி வீட்டுக்காரர்களிடம் விசாரித்தும் உள்ளனர்.
இதன்பின்னர் நல்லூர் பிரதேச சபை அவசரமாக நிர்வாக சபைக் கூட்டமொன்றினை நேற்றுக்கூட்டி அதில் குறித்த காணி தொடர்பான பிரேரணை ஒன்றும் முன்வைக்கப்பட்டது.
இதில் தற்போது விளையாட்டு மைதானமாக பாவிக்கப்பட்டு வரும் குறித்த காணியை இராணுவத்தினருக்கு வழங்க முடியாது என்றும் அவ்வாறு வழங்க வேண்டும் என ஒரு கட்டம் ஏற்பட்டால் மக்களினை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பில் யாழ்.அரச அதிபரிடமும் பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் அறிக்கை சமர்ப்பிப்பது என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் குறித்த காணியில் சிறுவர் பூங்கா ஒன்றினை அமைப்பது என்றும் இதன் முதற் கட்ட வேலையாக குறித்த காணியில் குழாய்க் கிணறு ஒன்றினை அமைத்து பூங்கன்று நாட்டுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இராணுவம் கோருவதற்காக மக்களுடைய சொத்தை எக்காரணம் கொண்டும் யாருக்கும் எதனையும் வழங்க மாட்டோம் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்மையில்கூட கோப்பாயில் 550 பரப்புக் காணியினை இராணுவம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது

யாழ்.மாவிட்டபுரத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவரை காணவில்லை
சனி, செப்டம்பர் 15, 2012
இணைய செய்தி
கடந்த மாதம் 28ம் திகதி பத்மநாதன் சிவகரன் (வயது 15) என்ற மாணவன் வீட்டிலிருந்து புறப்பட்டு, இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இவ்விடயம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
மல்லாவி வைத்தியசாலையில் சிங்கள வைத்தியர்:
சனி, செப்டம்பர் 15, 2012
இணைய செய்தி
சிங்கள மொழி பேசும் வைத்தியரே இங்கு சேவையில் உள்ளதால், இதனால் தமது நோய்களைச் சரியாகச் சொல்லி உரிய சிகிக்சையைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் ஆபத்தான நோய்களுக்கு இங்கு சிகிச்சையளிக்கக்கூடிய வசதியின்மையால் தூர இடங்களுக்கு நோயாளர்கள் செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
தற்போது, வன்னிப் பகுதியில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக தடிமல், காய்ச்சல், சளி மற்றும் தோல்நோய்கள் போன்றவற்றால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அவதிப்படும் நோயுடன் சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் வேறு மருத்துவமனைகளுக்கே மாற்றப்படுக்கின்றனர்.
அண்மையில் வவுனிக்குளம், 4ஆம் கட்டை, அம்பாள்புரத்தை சேர்ந்த 7 வயதான தர்சிகா என்ற சிறுமி விஷ கடிக்கு இலக்காகி மல்லாவி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, அஙகிருந்து வவுனியாவுக்கு மாற்றப்பட்டு அங்கு சிறுமி சிகிச்சை பயனின்றி கடந்த மாதம் உயிரிழந்துள்ளார்.
விஷ கடிக்கு இந்த வைத்திய சாலையில் சிகிச்சை அளிக்கக்கூடிய போதிய வசதியின்மையாலையே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாண்டியன்குளம் பிரதேசத்தில் 15 கிராம சேவகர் பிரிவுகளையும், துணுக்காய் பிரதேசத்தில் 20 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்டு 8 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் இந்த பெரும் பிரதேசத்துக்கு முக்கியமான வைத்தியசாலையாக மல்லாவி ஆதார வைத்தியசாலையே காணப்படுகின்றது.
எனவே தமது நிலையை கருத்தில் கொண்டு குறித்த வைத்தியசாலையை விரிவுபடுத்துவதுடன் தமிழ் வைத்தியர் ஒருவரையும் நியமித்துத் தருமாறும் அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

அமெரிக்கா நாடாளுமன்ற பிரேரணையை தோற்கடிக்க இலங்கை முயற்சி
சனி, செப்டம்பர் 15, 2012
இணைய செய்தி
இலங்கைக்கு ஆதரவான காங்கிரஸ் உறுப்பினர்களை கொண்டு இந்த பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கையில் போர் இடம்பெற்ற வேளையில் போர்க்குற்றங்கள் புரியப்பட்டதாக கூறி, அதனை விசாரணை செய்ய சர்வதேச விசாரணையை கோரி, காங்கிரஸின் பிரதிநிதிகள் சிலர் கடந்த 7 ஆம் திகதி அமெரிக்கா நாடாளுமன்றத்தில் பிரேரணையை முன்வைத்தனர்.
அத்துடன் இந்தப் பிரேரணையில் இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வுடன் கூடிய தீர்வு, சர்வதேச தலையீடு, மனிதாபிமான அமைப்புக்களை போர் நிறைவடைந்த இடங்களுக்கு அனுப்புதல், ஊடக சுதந்திரம் உட்பட்ட வலியுறுத்தல்களும் அடங்கியுள்ளன.

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 300 பேரை திருப்பி அனுப்புகிறது பிரித்தானியா!
சனி, செப்டம்பர் 15, 2012
இணைய செய்தி
சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012, By.Rajah.
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் "த இன்டி பென்ரன்' நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவர் என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும் இவர்களை பிரித்தானிய குடிவரவு முகவர் நிலையம் திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்துக்குப் பின்னர் இரண்டாவது தடவையாக பெருந்தொகையினர் இவ்வாறு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் 50 தமிழர்களை திருப்பி அனுப்ப பிரித்தானிய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருந்த போதும் அந்த நாட்டு நீதிமன்றம் தலையிட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் இலங்கையில் ஆபத்து இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
கடந்த வருடத்தில் இவ்வாறு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட பலர் மீளவும் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஏனெனில் திருப்பி அனுப்பப்பட்ட போது தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டோம் என்பதற்கு போதிய ஆதாரங்களை அவர்கள் சமர்ப்பித்திருந்தனர் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.
எனினும், தற்போது திருப்பி அனுப்பப்படவுள்ள 300 பேரில் பெருமளவானோர் மாணவர்கள் எனவும் விசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை மனித உரிமைகள் அமைப்புக்கள் கண்டித்துள்ளன. திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் இலங்கையில் மிக மோசமாக சித்திரவதைக்கு உட்டுத்தும் சாத்தியம் உள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)