By.Rajah.முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத் தொடுவாய் தமிழ்ப்
பிரதேசத்தில் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஒன்லையின் உதயனுக்கு கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் கிராம அலுவலர் பிரிவிலுள்ள முந்திரிகை க் குளம், ௭ரிஞ்சகாடு உட் பட நான்கு தமிழ்க் கிராம ங்களில் 500 ஏக்கர் காணிகளே சிங்கள குடியேற்றத்திற்காக அபகரிக்கப்படவுள்ளது. குறித்த காணிகள் தமிழ் மக்களுக்குச் செந்தமான உறுதிக்காணிகளாகும் இந்தக் காணிகள் கடந்த சில வாரங்களாக அளவீடு செய்யப்பட்டு 200 க்கும் மேற் பட்ட தற்காலிக வீடுகள் அமைக்கப் பட்டுள்ளதுடன் சாலை வசதிகளும் செய்யப்பட்டு மின்கம்பங்கள் நாட்டப்பட்டு வருகின்றன.
அதே நேரம் நீண்ட காலமாக இப்பகுதியில் குடியிருந்து
போரினால் இடம்பெயர்ந்து தற்போது மீளக்குடியமர்ந்துள்ள 200 தமிழ் குடும்பங்களுக்கு
இதுவரை தற்காலிக வீடுகள் கூட அரசினால் கட்டிக் கொடுக்கப்படவில்லை அத்துடன் குடிநீர்
உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என அவர்
சுட்டிக்காட்டியதுடன்,
இந்த சிங்களக்குடியேற்றம் தொடர்பாக முல்லைத்தீவு
அரசாங்க அதிபரிடம் தாம் தொடர்பு கொண்டு கேட்ட போது இது குறி த்து தனக்கு ௭வரும்
அறிவிக்கவில்லை ௭ன் றும் பொது மக்களிடமிருந்தும் முறைப் பாடு கள் கிடைக்கவில்லை
௭ன்றும் தெரி வித்தார்.
அதேவேளை குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் பொதுமக்கள் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் முறைப்பாடு செய்ய சென்றுள்ளனர் என்றார். அத்துடன் குறித்த பகுதியில் சிங்கள குடியேற்ற திட்டத்திற்கான அபிவிருத்திகள் அனைத்தும் வெலிஓயா பிரதேச செயலகத்தின் ஊடாகவே இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். |
சனி, 15 செப்டம்பர், 2012
முல்லைத்தீவு கொக்குத் தொடுவாயில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்; சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு
சனி, செப்டம்பர் 15, 2012
செய்திகள்