siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

எமது இலட்சியத்தை அடைய அனைத்து தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும்: கோவிந்தன் கருணாகரம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012,
இன்றைய நிலையில் எமது இலட்சியம் என்பது வடக்கு கிழக்கு இணைந்த, எங்களை நாங்களே ஆளக்கூடிய, காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட வடக்கு கிழக்கில் ஒரு சுயாட்சியே ஆகும். அந்தச் சுயாட்சியை நாம் அடைய வேண்டுமானால் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என த. தே. கூட்டமைப்பு வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட மண்டூர், 14ஆம் கொலணியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
எமது இன விடுதலைப் போராட்டம் இன்று எம்மால் மட்டுமல்ல புலம் பெயர் தமிழர்களினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்கா போன்ற வல்லரசுகளினால், ஐரோப்பிய நாடுகளினால், ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களினால் பிரயோகிக்கப்படும் அழுத்தத்தின் மத்தியில் கிழக்கு மாகாணசபை காலம் கனியுமுன் ஒரு வருடத்திற்கு முன்பாகவே அவசர அவசரமாக கலைக்கப்பட்டுள்ளது.
உலக போராட்ட வரலாறுகளையும் அதற்கான தீர்வுகளையும் தெரிந்தும் புரிந்தும் வைத்திருந்தால் மகிந்த இப்படி செயற்படமாட்டார். ஐரிஸ் போராட்டம் சிம்பெயினுடனான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட்டது.
கிழக்குத் தீமோர், ஹாச்சே போன்ற விடுதலைப் போராட்டங்கள் சர்வதேச மத்தியஸ்தத்தினுடன் இரு தரப்பும் பேசித் தீர்க்ப்பட்டது. எமது ஆயுதப்போராட்டம் நிறைவடைந்த பின்பு பிரச்சினைக்குரிய தமிழ்த் தரப்பு, தீர்வு தரவேண்டிய அரச தரப்பு ஆகிய இருதரப்புகளும் பேசி தீர்வு காணாமல் எமக்கு எதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு?
வாய் திறந்தாலே துவேஷம் கக்கும் பேரினவாத அமைச்சர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு எமது பிரச்சனைக்கு, எமது உரிமைப் போராட்டத்திற்கு ஜனாதிபதி மகிந்த ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைப்பாரென்றால் அது நாங்கள் காணும் பகல் கனவாகத்தான் அமையும்.
எமது உடன் பிறப்புக்களாக இருந்து இன்று செஞ்சோற்றுக்கடன் தீர்ப்பதற்காக சேராத இடம் சேர்ந்த தமிழ்ச் சகோதரர்களைப் பற்றி இம்மேடையில் பேசி எம்மைச் சிறுமைப்படுத்த விரும்பவில்லை.
இன்றைய நிலையில் எமது இலட்சியம் வடக்கு கிழக்கு இணைந்த, எங்களை நாங்களே ஆளக்கூடிய, காணி பொலிஸ் அதிகாரங்கள் உட்பட வடக்கு கிழக்கில் ஒரு சுயாட்சியே ஆகும்.
அந்தச் சுயாட்சியை நாம் அடைய வேண்டுமானால் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு கூட்டமைப்பிற்கு வாக்களித்து சர்வதேசம் தற்போது இலங்கை அரசு மீது பிரயோகித்துக் கொண்டிருக்கும் அழுத்தத்தை மேலும் பலப்படுத்த வேண்டும்.
எமது மக்கள் இவ்வளவு காலமும் இழந்த சொத்துகளுக்கும் உயிர்களுக்கும் ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் தமிழத் தேசியத்திற்கே வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
 

எரிபொருள் நிரப்ப பயணிகளிடம் பணம் வசூலித்த ஏர் பிரான்ஸ் நிறுவனம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012,விமானத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸ் நாட்டு விமான நிறுவனம் பயணிகளிடம் பணம் வசூலித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரத்தை நோக்கி, ஏர் பிரான்ஸ் விமானம் கடந்த 15ஆம் திகதி இரவு புறப்பட்டது.
விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால், இந்த விமானம் அவசரமாக சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் தரையிறங்கியது.
சிரியா மீது பிரான்ஸ் நாடு பொருளாதார தடை விதித்துள்ளதால் ஏர் பிரான்ஸ் நிறுவன கிரெடிட் கார்டு சிரியாவில் செல்லாது. மீண்டும் விமானம் புறப்பட வேண்டும் என்றால் எரிபொருள் நிரப்பியே ஆகவேண்டும்.
வேறு வழியில்லாததால் பயணிகளிடம் பணம் வசூலிக்க முடிவு செய்தனர் விமான ஊழியர்கள்.
உங்களிடம் உள்ள பணத்தை கொடுத்தால் தான் விமானம் புறப்படும் என்றதால், பயணிகளும் தங்களிடம் இருந்த பணத்தை கொடுத்தனர்.
இந்த பணத்தை கொண்டு எரிபொருள் நிரப்பப்பட்டதும் விமானம் பெய்ரூட் நகருக்கு புறப்பட்டது. பயணிகளிடம் அவசரத்துக்கு பணம் வசூல் செய்ததற்காக, ஏர் பிரான்ஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்து உள்ளது

சீன மாணவி உலக அழகியாக தெரிவு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012,சீனாவைச் சேர்ந்த மாணவி வெண் சியா யு(வயது 23 ) உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சீனா தலைநகர் பெய்ஜிங்கில் தோங்க்செங் என்னுமிடத்திலுள்ள உடற்பயிற்சி மைதான அரங்கில் உலக அழகி போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து அழகிகள் கலந்து கொண்டனர். பல்வேறு சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் இறுதியாக சீன அழகி வெண் சியா யு தெரிவு பெற்றார்.
பலவண்ண விளக்குகள் மின்னிய அரங்கில் கடந்தாண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசுவேலா அழகி இவியன் சார்கோஸ், தனது தங்க கிரீடத்தை சீனா அழகி வெண் சியா யுவுக்கு சூட்டி மகிழ்ந்தார்.
இசை பயிலும் மாணவியான 23 வயது உலக அழகி வெண் சியா யு தான் ஒரு இசை ஆசிரியையாக வர விரும்புவதாக கூறினார்.
வேல்ஸ் அழகியான சோபி மோல்ஸ் இரண்டாவதாகவும், அவுஸ்திரேலியா நாட்டின் அழகி ஜெசிக்கா கஹவாட்டி மூன்றாவது அழகியாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை சிங்கள கடற்படை அரிவாள் வெட்டு! வலைகள் நாசம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012தமிழ்நாடு, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் அரிவாளால் வெட்டி விரட்டியடித்துள்ளனர். இராமேஸ்வரம் மீனவர்களின் வலைகளை அறுத்தெறிந்துள்ளனர்.
இது குறித்து தெரியவருவதாவது:
வெள்ளப்பள்ளத்தில் இருந்து சுமார் 60 பைபர் கிளாஸ் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கச்சதீவு அருகே அவர்களை வழிமறித்த சிங்கள கடற்படையினர் அரிவாளால் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.
மேலும் மீனவர்களின் படகுகளை சேதப்படுத்திய கடற்படையினர், அவர்களின் மீன்களையும் பறித்துச் சென்றனர்.
இதையடுத்து 10 படகுகளில் இருந்த மீனவர்கள் கரைக்குத் திரும்பினர். மற்றவர்களும் கரைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அந்த மீனவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் இராமேஸ்வரம் மீனவர்களது வலைகளையும் சிங்கள கடற்படையினர் அறுத்தெறிந்ததாக புகார் தெரிவித்துள்ளனர்

மட்டக்களப்பில் நீரில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் மரணம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012,
மட்டக்களப்பு, ஆயித்தியமலைப் பகுதியில் உள்ள மகிழவெட்டுவான் ஆற்றில் நேற்று சனிக்கிழமை நீராடிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மகிழவெட்டுவான், கல்குடாப் பகுதியைச் சேர்ந்த (வயது 36) தம்பாப்பிள்ளை கிருபைராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
மேசன் தொழில் செய்யும் இவர் நேற்று சனிக்கிழமை மகிழவெட்டுவான் பொதுமயானத்தில் கல்லறை ஒன்றைக் கட்டிவிட்டு அருகிலிருந்த ஆற்றில் நீராடியபோதே இவ்வாறு உயிரிழந்தார்.
இவர் 7.30 மணியாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடிச்சென்ற போது, ஆற்றங்கரையில் அவரது சைக்கிளும் மற்றும் ஏனைய உடைமைகளும் காணப்பட்டன. இதனை அடுத்து இவர் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
நீரில் மூழ்கியதால் சுவாசம் தடைப்பட்டு மூச்சுத்திணறி மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனை மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட வைத்திய அதிகாரி கே.சுகுமார் முன்னிலையில் பிரதேச திடீர் மரண விசாரண அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் மரண விசாரணையை நடத்தினார்.
இது தொடர்பான விசாரணை ஆயித்தியமலைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

தமன்னா மீது வழக்கு தொடர இந்தி தயாரிப்பாளர் முடிவு

19.08.2012.நடிகை தமன்னா தன்னிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டார் என்று இந்தி தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
நடிகை தமன்னா 9 ஆண்டுகளுக்கு முன்பு செய்து கொண்ட ஒப்பந்தம் அவருக்கு இப்போது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
சலிம் அக்தர் என்ற இந்தி தயாரிப்பாளர் தன் படமான “சாந்து ஷா ரோஷன் செஹ்ரா” என்ற படத்தில் நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்தார்.
இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்காக 2005- 2010 வரை தமன்னா நடிக்கும் படங்களில் அவர் வாங்கும் ஊதியத்திலிருந்து 25 சதவீதத்தை தனக்கு தரவேண்டுமென சலிம் அக்தர் கேட்டிருக்கிறார்.
இதற்கு தமன்னாவும் சம்மதம் தெரிவித்ததுடன் ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை தமன்னாவுக்கு தென்னிந்திய பட வாய்ப்புகள் வந்தது. இதன் காரணமாக தன்னுடைய அழைப்புகளை அவர் ஏற்கவில்லை என்றும் ஒப்பந்தப்படி பணத்தை தரவில்லை என்றும் சலிம் அக்தர் கூறியிருக்கிறார்.
இந்த ஒப்பந்த மீறலுக்காக தமன்னா மீது வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 

தமிழீழம் என்ற சொல்லடங்கிய அரசியல்கட்சிகளுக்கு இலங்கையில் விரைவில் தடை

19.08.2012.
பிரிவினையைத் தூண்டும் வகையில் “தமிழீழம்” என்ற சொல்லைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளை தடை செய்வது குறித்து இலங்கை தேர்தல் ஆணையாளர் விரைவில் முடிவு எடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழில் ஈழம் என்பது இலங்கையை குறிக்கும் அதேவேளை, தமிழீழம் என்பது பிரிவினையை அர்த்தப்படுத்துவதாகவும், இதனால் தமிழீழம் என்ற சொல்லைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளை தடை செய்வது குறித்து ஆராயப்படுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) மட்டும் தான் தமிழீழம் என்ற சொல்லைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வேலூர் சிறையிலிருந்த விடுதலைப் புலிகளை நான் தான் தப்பிக்க விட்டேன்: வைகோவின் அதிர்ச்சித் தகவல்

19.08.2012.
வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
கடந்த, 1995ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தன்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விடுதலைப்புலிகள், 43 பேர், அகழி வெட்டி, அதன் மூலமாக சிறையில் இருந்து தப்பிய சம்பவம் நடந்தது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், தப்பியோடிய புலிகளில், 21 பேர் மட்டுமே, அடுத்த சில நாட்களில் இந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஏனையவர்கள் பொலிஸில் பிடிபடவில்லை.
இந்நிலையில், நேற்று புதுக்கோட்டையில் வைகோ உரையாற்றுகையில்,
வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன் என தெரிவித்தார்.
சிறையில் இருந்து தப்பிய புலிகளை, இலங்கைக்கு தான் அனுப்பி வைத்ததாக வைகோ ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் இருந்து தப்பிய கைதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதே குற்றம் எனும் நிலையில், அவர்களை வேறு நாட்டுக்கு தப்பிச் செல்ல உதவியதும், அதை வெளிப்படையாக, வைகோ பெருமிதமாகத் தெரிவித்திருப்பதும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது