siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 17 டிசம்பர், 2012

இளவரசருக்கு 485 மில்லியன் டொலர் செலவில் பறக்கும் அரண்மனை

 
எண்ணை வளம் கொழிக்கும் சவுதி அரேபியாவின் இளவரசர் அல்வாலீத் பின் தலால் மிகப்பெரிய கோடீசுவரர் ஆவார். இவர் அதிநவீன ஏ380 சூப்பர் ஜம்போ விமானத்தை விலைக்கு வாங்கியுள்ளார். அதை அரண்மனை போன்று சகல வசதிகளுடன் மிகப் பிரமாண்டமாக மாற்றியமைத்து வருகிறார்.
485 மில்லியன் டொலர் (ரூ.2770 கோடி) செலவில் உருவாகும் இந்த விமானத்தை பறக்கும் அரண்மனை என்று அழைக்கின்றனர்.

இந்த விமானம் கடந்த 2009ம் ஆண்டு விலைக்கு வாங்கப்பட்டு அரண்மனை போன்று மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு (2013) டெலிவரி எடுக்கப்படுகிறது.
பறக்கும் அரண்மனை வடிவிலான இந்த விமானத்தில் 4 படுக்கைகள், மிகப் பெரிய அளவிலான படுக்கைகள் கொண்ட 5 அதி நவீன அறைகள், பிரார்த்தனை அறை, கம்ப்யூட்டர் வசதிகளுடன் கூடிய மீட்டிங் ஹால், ரோல்ஸ் ராயல்ஸ் கார் நிறுத்தும் சொகுசு அறை உள்ளிட்டவை உள்ளன.
இந்த தகவலை துபாயில் நடந்த விமானத்துறை மாநாட்டில் இளவரசரின் உதவியாளர் ஹபிப்பெகி தெரிவித்தார்.




கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 1000 கைதிகள் விடுதலை

கிறிஸ்துமஸ் பண்டிகை வரவிருப்பதை முன்னிட்டு 1000 கைதிகளை விடுதலை செய்ய ஜேர்மனி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து Rhineland-Palatinate நீதித்துறையின் தகவல் தொடர்பாளி கூறுகையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 1000 சிறைக்கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட உள்ளனர்.
கொடூரமான வன்முறை, தீவிரவாதம், திருட்டு மற்றும் போதை பொருள் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்த பொது மன்னிப்பு கிடையாது என்று தெரிவித்தார்.
மேலும் இந்த ஆண்டு அதிகபட்சமாக நார்த் ரைன் – வெஸ்ட்ஃபேலியா மாநிலத்தில் 710 பேரை விடுதலை செய்யப்படுகின்றனர்.
அடுத்ததாக ஹெசி மாநிலத்தில் 150 – 200 பேர் வரை விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேக்ஸனி, பவேரியா ஆகியன இந்த விடுதலைக்கு மறுப்பு தெரிவித்துவிட்டன.

விமானநிலையம் கட்டுவதை எதிர்த்து நில ஆக்கிரமிப்பாளர்கள்?

மேற்கு பிரான்சில் நாண்ட்டேஸ் அருகில் நாட்டர் டேம் டெஸ் லாண்டெஸில் புதிய விமானநிலையம் கட்டுவதை எதிர்த்து நில ஆக்கிரமிப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொலிசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்த போது பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் உண்டாகி இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விமானநிலையக் கட்டுமானத்திட்டம் ஆளுங்கட்சிக் கூட்டணியில் பிளவை ஏற்படுத்திவிட்டது.
பிரதமர் ஜீன் மார்க் அய்ரால்ட் இந்த நாண்டேஸின் முன்னாள் மேயரும் ஆவார்.
அவர் இந்த விமானநிலையத்தைக் கொண்டுவருவதில் உறுதியாக இருக்கிறார்.
ஆனால் ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருக்கும் பசுமைக்கட்சியினர் இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் விமானநிலையம் கட்டுமிடத்தில் உள்ள சாலை ஒன்றின் நடுவில் கூடிக் கேளிக்கைகளில் ஈடுபட்டனர்.
மேலும் நில ஆக்கிரமிப்பாளரும், விவசாயிகளும் இத்திட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்

அமெரிக்க பள்ளி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான கனடிய சிறுமி.

கனடாவில் இருந்து சமீபத்தில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த குடும்பத்தில் உள்ள 6 வயது சிறுமி Ana Marquez-Greene என்பவர் அமெரிக்க பள்ளி துப்பாக்கி சூடு சம்பத்தில் மரணம் அடைந்தது தெரிய வந்துள்ளது. கனடாவில் உள்ள University of Manitoba என்ற இடத்தில் பணிபுரிந்த Jimmy Greene என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவிற்கு பணிமாற்றம் காரணமாக குடிபெயர்ந்தார். அவர் தன் இரண்டு குழந்தைகளை சமீபத்தில் துப்பாக்கி சூடு நடந்த Sandy Hook Elementary பள்ளியில் சேர்த்தார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பயங்கரமான துப்பாக்கி சூடு சம்பத்தில், இவருடை 6 வயது மகள் Ana Marquez-Greene பலியானார் என்ற சோகச்செய்தி கனடிய ஊடகங்களுக்கு தற்போது தெரியவந்துள்ளது. பலியான Ana Marquez-Greene சகோதரரும் இதே பள்ளியில்தான் படித்து வருகிறார். ஆனால் அவருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை.

லண்டன் நர்ஸ் உடல் இந்தியாவில் அடக்கம்

 
 
கண்ணீருடன் விடைகொடுத்த கணவர் மற்றும் குழந்தைகள். (படங்களுடன்) ஆஸ்திரேலிய வானொலி நிலைய அறிவிப்பாளர்களின் விளையாட்டுத்தனமான காரியத்தால், தற்கொலை செய்த நர்ஸ், உடல் இன்று இந்தியாவில் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. கணவர், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். 

 
 


கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிர்வா என்ற இடத்தில் உள்ள Our Lady of Health Church அருகிலுள்ள கல்லறையில் நர்ஸ் ஜெசிந்தாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான உறவினர்கள் இந்த இறுதிச்சடங்கில் கண்ணீருடன் கலந்து கொண்டனர். முன்னதாக உறவினர்கள் மற்றும் கத்தோலிக்க சர்ச் பாதிரியார் ஆகியோர் சேர்ந்து, ஜெசிந்தாவிற்காக, அவரது வீட்டில் வழிபாடு நடத்தினர். இதில் ஜெசிந்தாவின் கணவர் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்

கர்ப்பத்திற்கு பிறகு முதன் முறையாக விருது வழங்கும் விழாவில் ?


பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் இரு வாரத்திற்கு பின் முதன் முறையாக விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளார். 30 வயதான கேத் மிடில்டன், கர்ப்பமாக உள்ளார். இதற்காக இருவாரங்களுக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது முழுவதுமாக குணமடைந்த கேத், நேற்று நடந்த விளையாட்டு வீரர்களுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.இவ்விருது வழங்கும் விழா செயிண்ட் ஜேம்ஸ் மாளிகையில் நடந்தது{புகைப்படங்கள்}.






சிரியா அகதிகளுக்கு உதவுவதே எங்கள் நோக்கம்: கனடா

சிரியாவுக்கான அடுத்த தலைவரை தெரிவு செய்வதை விட, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே எங்களுடைய முதற்கடமை என கனடா அறிவித்துள்ளது. சிரியாவுக்கான புதிய தலைவரை தேசிய கூட்டணியிலிருந்து தெரிவு செய்ய அமெரிக்கா விரும்புகின்றது.
மேலும் இனிவரும் தலைவர் அந்நாட்டின் அனைத்து இனத்தவரையும், மத தலைவரையும் ஆதரிக்கும் நல்லதொரு தலைவராக இருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றது.
கடந்த வாரம் மொரோக்கா நகரில் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, தேசியக் கூட்டணியைச் சேர்ந்த ஒருவரை சிரியாவின் அடுத்த ஜனாதிபதியாக்க முடிவு செய்தனர்.
இதுகுறித்து கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் பெயர்டு கூறுகையில், சிரியாவின் தலைவரை தீர்மானிப்பதில் பங்கேற்பதை விட அந்நாட்டில் அவதிப்படும் மக்களின் நலன்களை பாதுகாப்பதில் கனடா அதிக ஆர்வம் காட்டுகிறது என்றார்.
மேலும் சிரியாவின் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளுக்கு, தங்களால் முடிந்தளவு உதவிகளை செய்யவும் தயாராக இருப்பதாக கூறினார்.
குறிப்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 6.5 மில்லியன் டொலர் பணத்தை ஜோர்டானுக்கு கனடா அளித்துள்ளது.
இதுதவிர சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு 10 மில்லியன் டொலர் தருவதாக அறிவித்துள்ளது.

துப்பாக்கி சூட்டில் பலியாகும் முன் 6 வயது சிறுவனின் உருக்கமான கடிதம்

 
அமெரிக்காவில் தொடக்கபள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியாகும் முன்பு 6 வயது சிறுவன் தனது தாய்க்கு கடிதம் எழுதி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கனெக்டிகட் நகரில் உள்ள சாண்டிஹுக் பள்ளியில், ஆடம் லான்சா என்பவர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 20 குழந்தைகள் பலியாயினர்.
இந்த துப்பாக்கிசூட்டில் பலியான 6 வயது சிறுவன் பிரையன் சாகும் முன்பு, தனது தாய்க்கு கடிதமொன்றை எழுதி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், ஐ லவ் யூ அம்மா. நான் சந்தோஷமாகவும், நலமாகவும் உள்ளேன். நல்ல மகனாக இல்லாததற்காக மன்னிக்கவும். நான் சொர்க்கத்தில் இருந்து உங்களை நேசிப்பேன் என்று கூறப்பட்டுள்ளது.


எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்பு தகவல்.




ஜப்பானில், நேற்று, பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. எதிர்கட்சியான, ஜனநாயக விடுதலை கட்சி, பெரும்பான்மை ஓட்டுக்களை பெற்றுள்ளதாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.ஜப்பானில், 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த, ஜனநாயக விடுதலை கட்சி, 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தது.
இதையடுத்து ஜப்பானிய ஜனநாயக கட்சி, ஆட்சியை பிடித்தது.அணு சக்தி நிலையங்களை மூடுதல், சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் அளிக்காதது உள்ளிட்ட பிரச்னைகளால், எதிர்க்கட்சியினர், தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இதனால், ஆளும் கூட்டணியிலும் பிரச்னை ஏற்பட்டது.

இதே ஆட்சியில், இதுவரை, ஆறு பிரதமர்கள் மாற்றப்பட்டு விட்டனர்.நாளுக்கு நாள் பிரச்னை வலுத்து வந்ததால், ஜப்பான் பிரதமர் யோஷி ஹிகோ நோடா, பார்லிமென்ட்டை, கடந்த மாதம், கலைத்தார்.இதையடுத்து, 480 இடங்களுக்கான, பார்லிமென்ட் தேர்தல் நேற்று நடந்தது. நேற்று மதியம் வரை, 27 சதவீதத்துக்கு அதிகமான, ஓட்டுகள் பதிவாயின.
எதிர்கட்சியான ஜனநாயக விடுதலை கட்சிக்கு, அமோக வெற்றி வாய்ப்பு இருப்பதாக,கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, இக்கட்சியின் தலைவர் ஷின்சோ அபே, புதிய ஆட்சியை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்

ஹெலிகாப்டர் விபத்தில் நைஜீரிய ஆளுநர் பலி




ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சனிக்கிழமை மாலை நிகழ்ந்த விமான விபத்தில், கடுனா மாகாண ஆளுநர் பாட்ரிக் யகோவா உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டு அதிபரின் உதவியாளர் ஒருவரின் தந்தை மரணமடைந்து விட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, ஆளுநர் பாட்ரிக் யகோவா, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆண்ட்ரூ அஜாஸி மற்றும் அவர்களின் உதவியாளர்கள் 4 பேர் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் சனிக்கிழமை பயேல்சா மாகாணத்தில் உள்ள ஒகோரோபா கிராமத்துக்குச் சென்றனர்.
அங்கு இறுதிச்சடங்குகள் முடிந்ததும், மாலையில் அதே ஹெலிகாப்டரில் ஊருக்குப் புறப்பட்டனர். ஹெலிகாப்டர் கிளம்பிய சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.

முச்சக்கர வண்டியில் கைக் குண்டு ஒன்றுடன் நபர் கைது!

 

மிட்டியாகொட, அளுத்வெல சந்தியில் கைக் குண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அளுத்வெ சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்றை சேதனையிட்ட பொலிஸ் அதிகாரிகள் அதிலிருந்து இக் கைக்குண்டை மீட்டுள்ளனர்.

சந்தேகநபர் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மிட்டியாகொட பொலிஸார் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்

ஜெஸிந்தா உடல் இந்தியா வந்தது. உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி



 பிரிட்டனில் தற்கொலை செய்து கொண்ட அரண்மணையைச் சேர்ந்த இந்திய நர்சின் உடல் இன்று இந்தியா வந்தது. பிரிட்டன் இளவரசர் வில்லியம்- கேட் மிடில்ட தம்பதியினர். கேட்மிடில்டன் கர்ப்பிணியாக உள்ளார். இவர்களது குடும்பத்தைச்சேர்ந்த இந்திய நர்ஸ் ‌ஜெஸிந்தா சல்தானா (46). 7-ம் எட்வர்டு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கடந்த 7-ம தேதியன்று இளவரசி கேட் மிடில்டன் உடல்நிலை குறித்து தொலை பேசி வாயிலாக ஆஸ்திரேலிய எப்.எம். ரேடியோ வர்ண‌னையாளர்கள் இருவர் விஷமத்தனமாக பேசியதால், ‌அதிர்ச்சியடைந்த ஜெஸிந்தா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பிரிட்டன் அரண்மணையை அதிர்ச்சியடைய வைத்தது{.புகைப்படங்கள்}.

 


இந்நிலையில் பிரதே பரிசோதனை செய்யப்பட்ட ஜெஸிந்தா உடல் லண்டனில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்தது .பின்னர் மும்பையில் இருந்து இன்று மாலை கர்நாடகா மாநிலம் மங்களூரு வந்தது. உடுப்பி மாவட்டம் ஷிர்வா சர்ச்சில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஜெஸிந்தா உடல் வைக்கப்பட்டுள்ளது. அப்போது ஜெஸிந்தாவின் உடலை பார்த்து கணவர்,குழந்தைகள், உறவினர்கள கண்ணீர் விட்டுஅழுதனர்.
உடுப்பியில் அவரது உடல் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது