அமெரிக்காவில் நோயுடன் பிறக்க போகும் குழந்தையை தத்தெடுக்க நூற்றுக்கணக்கானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பமாக உள்ளார்.
அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த போது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு டவுன் சின்ட்ரோம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குழந்தையை கலைக்க அவர் விரும்பினார். ஆனால் கருவை கலைக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் அமெரிக்காவின் சட்டப்படி, கர்ப்பமான 5 மாதத்திற்கு பிறகு கருவை கலைக்கக் கூடாது. அப்பெண்ணுக்கு 5 மாதம் முடிய இன்னும் ஒரு வார காலம் கூட இல்லை.
இந்நிலையில் இது குறித்து அறிந்த கெய்ன்ஸ்வில் ட்ரினிட்டி கத்தோலிக்க தேவாலய பாதிரியார் தாமஸ் வான்டர் வூட் தேவாலயத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.
அதாவது நோயுடன் பிறக்கும் இந்த குழந்தையை தத்தெடுக்க விரும்புவோர் தன்னை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்து உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் குழந்தையை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளன.
அதில் 3 குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன, அதில் ஏதாவது ஒரு குடும்பத்திடம் குழந்தை ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.