siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 18 ஆகஸ்ட், 2012

9 வயது சிறுவன் மீது பொலிசார் வழக்கு பதிவு


சனிக்கிழமை, 18 ஓகஸ்ட் 2012,
சாலையில் கற்களை வைத்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த சிறுவன் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் மாவட்டத்தை சேர்ந்தவன் முகமது ஆசாத்(வயது 9).
லாகூர் செல்லும் நெடுஞ்சாலையில், கற்களை அடுக்கி வைத்ததால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் ஆசாத் மீதும், இவனது உறவினர் காசிப் ஹூசைன் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிறுவனை தடுக்காத காரணத்துக்காக காசிப் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசாத் சிறுவன் என்பதால், அவன் கைது செய்யப்படுவதை தவிர்க்க சியால்கோட் மாவட்ட நீதிமன்றம், அவனுக்கு ஜாமின் வழங்கியுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் 28ஆம் திகதி நடைபெற உள்ளது
 

இந்தியாவில் இருந்து இலங்கையர்கள் திருப்பியனுப்பபடவுள்ளனர்

18.08.2012.கேரளாவின் கொல்லம் ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 12 இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்.
இதற்கான நடவடிக்கைகளை கேரள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூன் 3 ஆம் திகதி 151 பேர் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்படுகையில் கேரள பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 19 பெண்களும் 22 சிறுவர்களும் இருந்தனர்.
அதிலும் அதில் 12 பேர் இலங்கையில் இருந்து ஜூன் 2 ஆம் திகதி சுற்றுலா வீசாவில் கேரளா வந்து, இந்த அவுஸ்திரேலியா செல்லும் குழுவுடன் இணைந்துக்கொண்டவர்களாவர் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.
ஏனையோர் தமிழகத்தின் இலங்கை அகதி முகாம்களில் உள்ளவர்களாவர். இந்தநிலையில் தமிழகத்தின் அகதிமுகாம்களில் இருந்தவர்கள், மீண்டும் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டனர்.
இலங்கையில் இருந்து வந்த 12 பேர் மாத்திரம் கேரளாவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் இவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுவார்களானால் நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்தியாவினால் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படும் தமிழர்களாக இவர்கள் இருப்பார்கள் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன
18.08.2012.யாழ்., வடமராட்சி பிரதேசத்தின் நெல்லியடி நகரப்பகுதியிலுள்ள நகைக்கடையொன்றிலிருந்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் நேற்று பட்டப்பகலில் களவாடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
மேற்படி நகைக்கடைக்கு வந்த இருவர் ஒரு பவுண் சங்கிலியும் அரைப்பவுண் மோதிரமும் தேவையென கேட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து நகைக்கடை ஊழியர் ஒருவர் அதனை கொடுத்துள்ளார். உடனே அதனை சம்பந்தப்பட்ட நபர் வாங்கி காற்சட்டை பொக்கட்டினுள் வைத்துள்ளார்.
அதன் பின்னர் கதிரையிலிருந்து ௭ழுந்த அவர் பணத்தை ௭டுப்பதாக பாசாங்கு செய்துவிட்டு கடையை விட்டு தப்பியோடியுள்ளார்.
அவருடன் வந்தவரும் அவரை பின்தொடர்ந்து தப்பியோடியுள்ளார்.
இருவரில் ஒருவரை உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்து நெல்லியடிப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் விசாரணையை மேற்கொண்ட போது இவர் கரவெட்டியைச் சேர்ந்தவர், நகையைக் களவாடி தப்பியோடியவர் அருகிலுள்ள மதுபானக் கடையிலேயே தன்னுடன் கதைத்ததாகவும், நகை வாங்கப் போவதற்கு தன்னையும் உதவிக்கு வருமாறும் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணையை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

பாகிஸ்தானில் விமானப்படைத் தளம் மீது தீவிரவாதிகள் திடீர்த் தாக்குதல்

18.08.2012பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளங்களில் ஒன்றான காம்ரா படைத் தளம் மீது தீவிரவாதிகள் இன்று அதிகாலை திடீரெனத் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து விமானப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 6 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். படைத்தரப்பில் 2 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் எப்-17 ஜெட்விமானங்கள் உட்பட போர்விமானங்கள் பல சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் நாட்டின் முக்கிய விமானப் படைத் தளங்களில் ஒன்று காம்ரா தளம். இது தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 80 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே  தீவிரவாதிகள் இத்தளத்தைக் கைப்பற்ற அடிக்கடி தாக்குதல் நடத்தும் முக்கிய இலக்காக இத்தளம் இருந்து வருகிறது. காம்ரா தளத்தில் அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதுதான் தீவிரவாதிகளின் இலக்குக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் இராணுவத்தினரைப் போல் சீருடையணிந்திருந்த தீவிரவாதிகள் 10 பேர் காம்ரா தளத்துக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதலை நடத்தினர் .இதையடுத்து படைத்தரப்பினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பினரிடையேயான மோதல் 3 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது.
மோதலின் முடிவில் 6 தீவிரவாதிகளும் 2 படையினரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இதர தீவிரவாதிகள் தப்பியோடியது பற்றி அதிகார பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.
சில நாட்களுக்கு முன்புதான் பாகிஸ்தான் இராணுவத் தளபதி கயானி, பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்திருந்தார். கயானியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மரத்தில் வரையப்பட்ட பாரதத் தலைவர்களின் முகத்தோற்றங்கள்

18.08.2012.இப்படத்தை உற்றுப்பார்த்தால் இந்தியாவின் மறைந்த தலைவர்கள் 10 பேரின் முகத்தோற்றங்கள் ஒரு மரத்தின் கிளைகளில் வரையப்பட்டிருப்பதைக் காணலாம். கண்டுபிடிக்க முடிகிறதா? அவர்கள்:

1.இந்திரா காந்தி. 2.ராஜிவ்காந்தி 3.ஜவகர்லால் நேரு 4.மகாத்மா காந்தி 5.பாலகங்காதர திலகர் 6. கோபால கிருஷ்ண கோகலே 7.சுபாஷ் சந்திர போஷ் 8.ரவிந்திரநாத் தாகூர் 9. வ.உ.சிதம்பரப்பிள்ளை 10.பகவத் சிங்.

இவர்களில் கோபால கிருஷ்ண கோகலே யார் என்பது குறித்த விபரத்தையும் இணைத்துள்ளோம்.

கோபால கிருஷ்ண கோகலே (மே 9, 1866 - பிப்ரவரி 19, 1915) இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். கோகலே இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்பின் உருவாக்குனரும் ஆவார்.

இவர் தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார். வன்முறையைத் தவிர்த்தல் மற்றும் இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல். இவரது தாக்கமே அஹிம்சா மூர்த்தியாக மகாத்மா காந்தி மலர வழிவகுத்தது எனில் மிகையில்லை

நாய் இரு கால்களால் நடக்கும் அதிசயம்

18.08.2012.முன்னங்கால்களை இழந்த நிலையில் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள டெல் நோர்ட் மனிதாபிமான சபையின் பராமரிப்பில் வளர்ந்த இந்நாயின் நடப்பதற்கான விடாமுயற்சியைக் கண்டு வியந்த மிருக வைத்தியர்கள் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் நினைவாக இதற்கு 'லண்டன்' எனப் பெயர் சூட்டியுள்ளனர். இந்த நாய்க்கு நடப்பதற்கு வசதியாக சக்கர நாற்காலி கட்டமைப்பு பொருத்தப்படவுள்ள நிலையில் இது மனிதர்கள் போன்று கால்களால் நடக்கக் கற்றுக் கொண்டுள்ளது

3 வருடங்களின் பின் இணைந்த மனிதக் குரங்குகள் மகிழ்ச்சியில் ஆரத் தழுவிக் கொண்டன

18.08.2012.நீண்ட காலம் பிரிந்திருந்த உறவினர்கள் ஒரு வரை யொருவர் கட்டித் தழுவி மகிழ் ச்சியை வெளிப்படுத்துவது போல் பிரித்தானியாவில் வில்ட்ஷியரிலுள்ள லோங்லீட் சபாரி பூங்காவில் 3 வருடங்களுக்குப் பின் சந்தித்துக் கொண்ட மனிதக் குரங்குகள் ஒன்றையொன்று கட்டித் தழுவி மகிழ் ச்சியைப் பரிமாறி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. அயர்லாந்தில் டப்ளின் நகரில் பிறந்த கெஷோ, அல்ப் ௭ன்ற இந்த மனிதக் குரங்குகளில் கெஷோ 3 வருடங்களுக்கு முன் லோங்லீட் சபாரி பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் மூன்று வருடங்கள் கழித்து கெஷோ இருந்த அந்த மிருக க் காட்சி சாலைக்கு அல்ப் கொண்டுவரப்பட்ட போது, இரு மனிதக் குரங் கு களும் ஒன்றையொன்று இனங் கண்டு ஆ ரத் தழுவிக் கொண்டன.

மாத்தளையில் மலைப்பாம்பு


17.08.2012.
சுமார் 22 அடி நீளமும் 125 கிலோகிராம் நிறையும் கொண்ட மலைப்பாம்பு ஒன்று மாத்தளை உக்குவலை பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது.

உக்குவளை மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகிலிருந்து தாம் இந்த பாம்பை பிடித்ததாக கூறும் வன இலாக்கா அதிகாரிகள் இதை எலஹர கிரித்தலே சரணாலயத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


Share