பிரிட்டனின் மிகப்பெரிய வங்கி
மோசடியில் ஈடுபட்ட கிவேக்கு அடோபோலி என்பவருக்கு சவுத்வார்க் நீதிமன்றம் ஏழாண்டுச்
சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
கானா நாட்டில் பிறந்து வளர்ந்தவர் அடோபோலி(32). சுவிட்சர்லாந்தின் UBS வங்கியில்
பணியாற்றிய போது செய்த மாற்றங்களால் வங்கிக்கு இலாபம் கிடைப்பதாகக் கணக்கும்
காட்டினார். ஆனால், உண்மையில் இவர் செய்த மாற்றங்களால் UBS வங்கிக்கு 12 பில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் இவர் மீது திட்டமிட்ட சதி மற்றும் பண மோசடி வழக்குகள் தொடரப்பட்டன. வழக்குகளை விசாரித்த நீதிபதி பிரையன் கீத், "உன்னிடம் ஒரு சூதாடி இருப்பதால் தான் நீ மற்றவர் பணத்தை வைத்து சூதாடி ஜெயிக்க நினைத்திருக்கிறாய். வங்கி விதிமுறைகளை மீறக்கூடிய முரட்டுத்தனம் உன்னிடம் இருந்திருக்கிறது என கூறி தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார் |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
புதன், 21 நவம்பர், 2012
வங்கி மோசடியாளருக்கு ஏழாண்டுச் சிறைத்தண்டனை
உலக நாடுகளில் எய்ட்ஸ் நோயின் பாதிப்பு குறைந்து வருகிறது: ஐ.நா தகவல்
உலகின் பல்வேறு நாடுகளில் எய்ட்ஸ்
நோயின் பாதிப்பு குறைந்து வருவதாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள
நாடுகளில் பாதிக்கும் மேலாக எய்ட்ஸ் பாதிப்பு குறைந்து விட்டது என்றும், குறிப்பாக
மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருந்த ஆப்ரிக்க நாடுகளிலும் எய்ட்ஸ் நோயின்
தாக்கம் குறைந்து விட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மலாவி(73%), போத்ஸ்வானா(71%), நமீபியா(68%), ஜாம்பியா(58%), சிம்பாவே(50%), ஸ்வாஸிலாந்து(41%), தென்னாப்பிரிக்கா(41%) போன்ற நாடுகளில் எச்ஐவி நோய்த்தொற்று பாராட்டத்தக்க அளவில் குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மாத்திரிகளை சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை 63 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. |
கழுத்தில் வெடிகுண்டை வைத்து இளம் பெண்ணை மிரட்டிய நபர்
இளம்
பெண்ணின் கழுத்தில் வெடிகுண்டை வைத்து 10 மணி நேரமாக அச்சுறுத்திய நபருக்கு,
அவுஸ்திரேலிய நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் டக்ளஸ் பீட்டர்ஸ். இவர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம்
மெடிலீன் புல்வர்(வயது 18) என்ற பெண்ணின் கழுத்தில், போலி வெடிகுண்டை வைத்து,
வெடிக்க செய்வதாக 10 மணி நேரமாக மிரட்டியுள்ளார். உடனே விரைந்து சென்ற பொலிசார், அப்பெண்ணை மீட்டதுடன் டக்ளஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் பெண்ணின் கழுத்தில் போலி வெடிகுண்டை மாட்டி அவரை மிரட்டியதை ஒப்புக்கொண்டார். மனைவி விவாகரத்து செய்ததால் மன வருத்தத்தில் இருந்த அதிகப்படியாக மது அருந்தி உள்ளார். இதன் காரணமாகவே இந்த தவறை செய்ததாக அவரது வழக்கறிஞர்கள் வாதாடினர். டக்ளசின் இந்த நடவடிக்கையால் மெடிலீன் எந்த அளவு பயந்திருப்பார் என்பதை எங்களால் உணர முடிகிறது. எனவே டக்ளஸ் மீது கருணை காட்டமுடியாது என கூறிய நீதிபதி அவருக்கு பதிமூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் 10 ஆண்டுகளுக்கு அவர் பரோலில் வெளியே வரமுடியாத படி தீர்ப்பு கூறியுள்ளார். |
யாழில் பெரும் தொகையானவர்கள் இராணுவத்தில்
{புகைப்படங்கள்,} }கிளிநொச்சியைஅடுத்துயாழில்இருந்தும்பெரும் தொகையானவர்கள்இராணுவத்தில்இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துறுசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்று கீழ் வாழும் குடும்பங்களுக்கு வீடு கையளிக்கும் நிகழ்வு அளவெட்டியில் நடைபெற்றது.
யாழ்.மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்று கீழ் வாழும் குடும்பங்களுக்கு வீடு கையளிக்கும் நிகழ்வு அளவெட்டியில் நடைபெற்றது.
அளவெட்டிமத்தியில்நடைபெற்றஇந்நிகழ்வில்கலந்து கொண்டு பயணாளிகளுக்கான வீடுகளைக் கையளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
ஆராம்ப காலத்தில் இராணுவத்தில் பெருமளவான தமிழர்கள் பணிபுரிந்து வந்தனர். அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் இராணுவத்தில் இருந்து விலகிக் கொண்டனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)