ருமேனியாவில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ருமேனியாவின் புக்கரெஸ்டில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நேற்று நள்ளிரவு வானவேடிக்கையுன் இசை நிகழ்ச்சி
நடைபெற்றது.
இதில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் கூரை தீப்பிடித்து எரிந்ததுடன் மளமளவென பரவ தொடங்கியது.
இதனையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறும் போது, பலர் தீயில் சிக்கி
பரிதவித்தனர்.
இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர், 155 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் காயமடைந்த நபர்களுக்கு ரத்தம் தேவைப்படுவதால் பொதுமக்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தவும் துணை பிரதமர் காப்ரியேல் ஒப்ரியா தெரிவித்துள்ளார்.