siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 19 நவம்பர், 2012

துபாயில் 34 அடுக்கு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

{காணொளி, புகைப்படங்கள்}துபாயில் 34 அடுக்கு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. துபாயில் ஜுமிரா லேக் டவர்ஸ் என்ற 34 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக கட்டிடத்தில் தங்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டதால், யாருக்கும் காயம் ஏதுமில்லை.
ஆனால் கட்டிடத்தில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமாயின. தீ விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.




விமானத்தில் திடீர் தீ விபத்து: அவசரமாக தரையிறக்கம்

 
பாகிஸ்தான் விமானத்தில் திடீரென தீ ஏற்பட்டதை தொடர்ந்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பாகிஸ்தானில் கராச்சி ஜின்னா விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்ல விமானம் புறப்பட்டதும், விமானத்தின் வாள் பகுதியில் தீ பற்றி எரிந்தது.
இதனையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, தீ அணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.

கற்பழிக்க வந்த வாலிபரின் நாக்கை கடித்து துண்ட்டாக்கிய

       
உத்திரப்பிரதேச பர்த்தானா மாவட்டத்திலுள்ள பர்ரா சாலேம்பூர் என்ற கிராமத்தில் கைலாஷ் பஹேலியா என்ற 25 வயது வாலிபர் 17 வயதான இளம் பெண்ணை வீட்டில் அடைத்துவைத்து கற்பழிக்க முயற்சித்திருக்கிறார். தடுத்து பார்த்தும் பயணில்லாததால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவள் இறுதியாக தன் கற்பை காப்பாற்றிக்கொள்ள அவனது நாக்கை கடித்து துண்டாக்கியிருக்கிறாள்.

இச்செய்தி வெளியில் தெரியவர காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

ரூ.5 லட்சம் மதிப்புள்ள செக்ஸ் ஊக்க மாத்திரையை கடத்திய டாக்டர்

         
குஜராத்மாநிலம்,அனந்த்மாவட்டத்திலுள்ளபிப்லவ்கிராமத்தைசேர்ந்தவர்கிஷோர். அமெரிக்காவில் டாக்டராக வேலை செய்து வருகிறார். சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் தாயகம் திரும்பிய கிஷோர், நேற்று அதிகாலை 3 மணியளவில் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லப்பாய் பட்டேல் விமான நிலையத்தில் இறங்கினார்.

இவரது உடைமைகளை பரிசோதித்த சுங்கவரி அதிகாரிகள், பெட்டியின் உள்ளே கத்தை கத்தையாக மாத்திரைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தனக்கு சர்க்கரை வியாதி இருப்பதாகவும், சொந்த தேவைக்கு மாத்திரைகளை எடுத்து வந்ததாகவும் அதிகாரிகளிடம் அவர் கூறினார். எனினும், சந்தேகத்தின் பேரில் விமான நிலைய டாக்டர்களை வரவழைத்த அதிகாரிகள், அந்த மாத்திரைகள் எந்த நோய்க்காக தரப்படுகின்றது? என்று கேட்டனர்.

அத்தனை மாத்திரைகளும், செக்ஸ் உறவை நீட்டிக்கவும், ஊக்கப்படுத்தவும் பயன்படுத்தப்படுபவை என அவர்கள் கூறினர். இதைப் போன்ற மாத்திரைகளை இறக்குமதி செய்யவோ, கொண்டுவரவோ முன் அனுமதியும் உரிமமும் தேவை. ஆனால், கிஷோர் இதற்கான அனுமதியை பெறவில்லை.

அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அமெரிக்காவில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய மாத்திரைகளை, அதிக விலைக்கு இந்தியாவில் விற்கும் நோக்கத்தில் கொண்டு வந்ததாக தெரிய வந்துள்ளது. காலாவதி காலத்திற்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள இந்த மாத்திரைகளின் மதிப்பு ரூ. 5 லட்சம் என்றும் வரி மற்றும் அபராதமாக ரூ. 2 லட்சம் கட்ட வேண்டியது இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் சிங்கப்பூரில் இருந்து வந்த ஒரு பயணியிடமும் ரூ1.50 லட்சம் மதிப்புள்ள மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பல பயணிகள் இதைப் போல் மாத்திரை கடத்தல்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பதை இனி கண்காணிக்க குஜராத் டி.ஜி.பி. போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்

மூளைக்காய்ச்சல் தடுப்பூசிக்கு நோவார்ட்டிஸ் ஒப்புதல்

சுவிஸ் மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவார்ட்டிஸ், பெக்ஸெரோ என்ற பெயரில் மூளைக்காய்ச்சலுக்கு ஒரு தடுப்பூசி மருந்தைத் தயாரித்துள்ளது. அந்த மருந்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து முகமை ஒப்புதல் வழங்குகியுள்ளது.
Men B (meningecoecal serogroup B) என்ற நோய் வராமலிருக்க இந்தத் தடுப்பூசியை இனிப் பயன்படுத்தலாம், என்று நோவார்ட்டிஸ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மூளையையும் தண்டுவடத்தையும் சுற்றியுள்ள சவ்வுப் பகுதி வீங்கிவிடும் மூளைக்காய்ச்சல் வராமல் தடுக்க நோவார்ட்டிஸின் Men B தடுப்பூசி உதவும்.
தற்போதைய மருந்துகள் வேறு பல வகை மூளைக்காய்ச்சல் வராமல் தடுத்தாலும் இந்த மூளையின் சவ்வுப்பகுதி வீக்கம் உண்டாகும் நோய்க்கு இதுவரை தடுப்பூசி எதுவும் வரவில்லை.
இந்த Men B வியாதியைக் கடைசி நேரத்தில் தான் கண்டுபிடிக்கின்றனர் என்பதால் அதன் பின்பு மருந்து கொடுத்தும் பலன் இல்லை.
24 மணி நேரத்துக்குள் நோயாளிகள் இறந்து விடுகின்றனர்.
இந்த நோய் பெரும்பாலும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தாக்குகின்றது.
எனவே இன்னும் மூன்று மாதத்தில் ஐரோப்பிய ஆணையம், இந்த தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி முழுக்க விற்கலாம் என்ற முடிவை எடுக்கும்.
இப்போது உலகமெங்கும் 1.2 மில்லியன் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டனர்.
ஐரோப்பாவில் மட்டும் ஏழாயிரம் பேர் இந்நோய்ப் பாதிப்புக்கு ஆளாகினர்.
13 வகையான மெனிஞ்சோகோக்கல் வியாதிகளில் ஐரோப்பாவில் மென் B எனப்படும் நோய் வகையே அதிகம் காணப்படுகிறது.
கடந்த 2003ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பு 3406 முதல் 4819 பேர் இந்த Men B நோயால் பாதிக்கப்பட்டனர் என்பதைத் தெரிவித்துள்ளது.