siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 19 நவம்பர், 2012

ரூ.5 லட்சம் மதிப்புள்ள செக்ஸ் ஊக்க மாத்திரையை கடத்திய டாக்டர்

         
குஜராத்மாநிலம்,அனந்த்மாவட்டத்திலுள்ளபிப்லவ்கிராமத்தைசேர்ந்தவர்கிஷோர். அமெரிக்காவில் டாக்டராக வேலை செய்து வருகிறார். சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் தாயகம் திரும்பிய கிஷோர், நேற்று அதிகாலை 3 மணியளவில் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லப்பாய் பட்டேல் விமான நிலையத்தில் இறங்கினார்.

இவரது உடைமைகளை பரிசோதித்த சுங்கவரி அதிகாரிகள், பெட்டியின் உள்ளே கத்தை கத்தையாக மாத்திரைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தனக்கு சர்க்கரை வியாதி இருப்பதாகவும், சொந்த தேவைக்கு மாத்திரைகளை எடுத்து வந்ததாகவும் அதிகாரிகளிடம் அவர் கூறினார். எனினும், சந்தேகத்தின் பேரில் விமான நிலைய டாக்டர்களை வரவழைத்த அதிகாரிகள், அந்த மாத்திரைகள் எந்த நோய்க்காக தரப்படுகின்றது? என்று கேட்டனர்.

அத்தனை மாத்திரைகளும், செக்ஸ் உறவை நீட்டிக்கவும், ஊக்கப்படுத்தவும் பயன்படுத்தப்படுபவை என அவர்கள் கூறினர். இதைப் போன்ற மாத்திரைகளை இறக்குமதி செய்யவோ, கொண்டுவரவோ முன் அனுமதியும் உரிமமும் தேவை. ஆனால், கிஷோர் இதற்கான அனுமதியை பெறவில்லை.

அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அமெரிக்காவில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய மாத்திரைகளை, அதிக விலைக்கு இந்தியாவில் விற்கும் நோக்கத்தில் கொண்டு வந்ததாக தெரிய வந்துள்ளது. காலாவதி காலத்திற்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள இந்த மாத்திரைகளின் மதிப்பு ரூ. 5 லட்சம் என்றும் வரி மற்றும் அபராதமாக ரூ. 2 லட்சம் கட்ட வேண்டியது இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் சிங்கப்பூரில் இருந்து வந்த ஒரு பயணியிடமும் ரூ1.50 லட்சம் மதிப்புள்ள மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பல பயணிகள் இதைப் போல் மாத்திரை கடத்தல்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பதை இனி கண்காணிக்க குஜராத் டி.ஜி.பி. போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்

0 comments:

கருத்துரையிடுக