siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 11 பிப்ரவரி, 2013

ஐரோப்பிய நாடான செர்பியாவில் உள்ள..

<
செர்பிய பிரதமரை நேர்காணல் செய்த பெண், உள்ளாடை அணியாத விவகாரம், அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிவி' சேனல் ஒன்று, "மிஷன் இம்பாசிபிள்' என்ற பெயரில் வேடிக்கை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. மாடல் அழகியான, ப்ராங்கா நெசிவிக், பிரதமர் இவிகா டேகிக்கை நேர்காணல் செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது
நேர்காணலின் போது, உள்ளாடை அணியாமல், குட்டை பாவாடை அணிந்திருந்த அந்த பெண், கால் மேல் கால் போட்டு அமர்ந்தார். பேட்டி கண்ட பெண், காலை மாற்றி அமரும் போது, அவர், உள்ளாடை அணியாததை, பிரதமர் பார்ப்பது போன்று, வீடியோ ஒளிபரப்பானது.

இந்த சம்பவம், செர்பியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."நாட்டை அவமதிக்கும் விதமாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு காரணமானவர்களை, பிரதமர் அலுவலகம் தண்டிக்காமல் விடாது' என, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியுள்ளார்.நிகழ்ச்சியை, "டிவி'யில் ஒளிபரப்புவதை நிறுத்தி வைத்த அந்த சேனல், நிகழ்ச்சியின் முன்னோட்டத்தையும், தன் வலைதளத்தில் இருந்து நீக்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சதுக்கத்தில் ,,,,

முருகதாசன் எனும் ஈழத்து இளைஞன் பெப்ரவரி 12, 2009 அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரிலுள்ள ஐ. நா. அகதிகளுக்கான ஆணையர் அலுவலகத்தின் முன்பு தீயிட்டு தன் இன்னுயிரை தமிழீழ மக்களுக்காக ஈகம் செய்தார். “உலகத் தமிழ் சமூகத்துக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தயவு செய்து ஒன்று கூடுங்கள். நம் மக்கள் உரிமைகளை மீட்டிடவும், உலகின் பல்வேறு தேசிய இனங்களின் மனங்களையும், இதயங்களையும் வென்றெடுக்கவும் கைகோர்த்துக் குரலெழுப்புங்கள். இது ஒரு மாபெரும் கடைசி வாய்ப்பு. என் உடல் மீது எரிகிற நெருப்பு உங்களை விடுதலைக்கு இட்டுச்செல்கிற தீவட்டியாகட்டும். உடலால் உங்களை விட்டு வெகுதூரத்தில் இருந்தாலும், உங்கள் இதயத்தின் மிக அருகே இருக்கிறேன்” என்று சக்தி மிக்க வார்த்தைகளுடன் தன் வாழ்வை முடித்துக்கொண்டார். சிங்களப் பேரினவாதம் 2008-2009 ஆண்டு காலகட்டத்தில் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்துகொண்டிருந்தபோது, ஐ.நா. சபையும், அதன் உறுப்பு அமைப்புகள் சிலவும், சர்வதேச சமூகமும் நம்பிக்கைக்குரியன அல்ல என்பதை உலகுக்கு உரக்க எடுத்துரைத்தார் முருகதாசன். இந்த அமைப்புக்கள் அரச பயங்கரவாதத்தை ஆதரிப்பவை, துன்புறும் ஏழை மக்களை ஒருபோதும் ஆதரிக்க மாட்டா என்பதை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சார்ல்ஸ் பெற்றி எனும் ஐ.நா. ஊழியர் ஒருவர் தயாரித்து 13.11.2012 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை முருகதாசனின் தீர்க்கதரிசனக் கருத்துக்களை உறுதிப்படுத்துகிறது. வேலியே பயிரை மேய்ந்தது போல, காவல்காரனே களவு செய்தது போல, ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கி மூன், அவரது மருமகன் சித்தார்த் சாட்டர்ஜி, ஐ.நா. ஊழியர் விஜய் நம்பியார், அவரது தம்பியும் ராஜபக்சே அரசின் இராணுவ ஆலோசகருமான சதீஷ் நம்பியார், ஐ.நா. ஊழியர் ஜான் ஹோம்ஸ் போன்ற பலர் தமிழீழத் தமிழருக்கு எதிராக ஒரு மாபெரும் கபட நாடகத்தை, துரோகத்தை அரங்கேற்றினர். தன் மக்களுக்காக இன்னுயிர் ஈந்த ஈகி முருகதாசன் அவர்களை நினைவு கூர்ந்து, தமிழர்களை வஞ்சித்த ஐ.நா.வின் நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது காலத்தின் கட்டாயம்; ஒவ்வொரு தமிழனின் கடமை. “மே 17 இயக்கம்” முன்னெடுக்கும் இந்தக் கடமையில் இடிந்தகரை மக்களாகிய நாங்களும் இணைந்துகொள்கிறோம். பிப்ரவரி 12, 2009 அன்று காலை 10 மணிக்கு போராட்டப் பந்தலில் ஈகி முருகதாசனுக்கு வீர வணக்கம் செலுத்திவிட்டு, ஐ.நா.வின் அயோக்கியதனத்தை ஓர் ஆங்கில ஆவணமாக தயாரித்து, எங்கள் பகுதி தமிழ்க் கடலில் மிதக்க விடுவது என்று தீர்மானித்திருக்கிறோம். அனைவரும் வருக. வணக்கம். போராட்டக் குழு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் பெப்ரவரி 11, 2013 பிரான்சு பாரிஸ் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சதுக்கத்தில் நாளை முற்றுகை போராட்டம் ஐ.நா செயலகத்தின் முன் தீயிட்டு வீரமரணமடைந்த முருகதாசன் நினைவு நாள் 12/02/2013யில் சென்னையில் ஐ.நா அலுவலக முற்றுகைப் போராட்டம். முத்துக்குமார் முருகதாசன் மற்றும் தமிழுக்காக, தமிழ் மக்களின் விடுதலைக்காக, தமிழீழ மக்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்பதற்காக தமிழரின் எழுச்சிக்காக தங்களை வேள்வி தீயாக்கிய செங்கொடி மற்றும் அணைத்து தியாக உள்ளங்களை நினைவு கொண்டு- முற்றுகை இடுவோம். பொதுமக்களை காக்கும் சர்வதேச விதிமுறைகளை இலங்கைக்காக உடைத்தெறிந்த ஐ.நா அதிகாரிகள் பான்-கி-மூன், விஜய் நம்பியார், ஜான் ஹோல்ம்ஸ் ஆகியோரை விசாரி. தமிழீழ விடுதலையை தடுப்பதற்காக இவர்கள் நிறுத்தி வைத்துள்ள ஐ.நா பொது வாக்கெடுப்பினை உடனே நடத்து. மேற்குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எதிராக பல நூறு ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றுள் சில, போரில் சிக்கிய தமிழர்களுக்கு உணவும், மருந்தும் அனுப்புவதை ஐ.நா நிறுத்தியது. உணவையும், மருந்துகளையும் தடை செய்வது போர் குற்றம். (இறுதியாக அனுப்பிய உதவி பொருட்களில் உணவு- மருந்துக்கு பதிலாக கிரிக்கெட் மட்டைகள், பந்துகளை ஐ.நாஅனுப்பியது). இலங்கை அரசால் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை வெளியிட மறுத்ததன் மூலம் போரை தொடர்ந்து நடத்த அனுமதித்தது.(இன்றுவரை இந்த எண்ணிக்கையை வெளியிடவில்லை). இலங்கை அரசு செய்த போர்குற்றங்கள், படுகொலை குற்றச்சாட்டுகளை புலிகளின் மீது சுமத்தச் சொல்லி கீழ்மட்ட அதிகாரிகளை ஐ.நா நெருக்கியது. போர்முனைக்கு சென்று நடக்க இருக்கும் இனப்படுகொலையை தடுக்க அனுப்பப்பட்ட விஜய் நம்பியார் கொழும்பு விடுதியை விட்டு வெளியே வராமல் ஓய்வு எடுத்தது. இனப்படுகொலையை முடித்த்தை வெற்றிவிழாவாக கொண்டாடிய இலங்கை அரசு விழாவில் பான்-கி-மூன் பங்கெடுத்து சிங்களர்களை வாழ்த்தியது. சனல்4 காணொளியை ஐ.நாவின் உயர் அதிகாரிகளுக்கு காண்பிக்க மறுத்து, இலங்கை அரசு தயாரித்த விளம்பர காணொளியை பான்- கி-மூன் காட்டியது. சர்வதேச விசாரணை வேண்டும் என ஐ.நா அதிகாரிகள் சொன்னதை மறுத்து “இலங்கையே தன்னை விசாரித்துக் கொள்ளட்டும்” என்று பான்-கி-மூன் சொன்னது. தமிழர்களை கொன்ற இந்திய அமைதிகாப்பு படையில் வேலை செய்த “சித்தார்த்” என்பவரே பான்-கி-மூனின் மருமகன். இனப்படுகொலை போரின் அலோசகர் சதீஸ் நம்பியாரே, இனப்படுகொலையை தடுக்கும் பொறுப்பினை ஏற்ற விஜய் நம்பியாரின் உடன் பிறந்த அண்ணன். இனப்படுகொலை ஆதாரங்களை அழிக்க பான்-கி-மூன் இலங்கைக்கு கால அவகாசம் அளித்தது, என பல நூறு ஆதாரங்கள் வெளியாகியுள்ளது. “தமிழர்களை இலங்கை அரசு நன்றாக காப்பதாக” தற்போது கூறி வரும் ஐ.நாவின் உயர் அதிகாரிகளை அம்பலப்படுத்தவும், 18 தமிழர்கள் தீயிட்டு தியாகம் செய்தும் தடுத்து நிறுத்த முடியாத இனப்படுகொலை போரின் பின்னனியில் ஐ. நாவும், இந்திய அரசும் வேலை செய்ததை கண்டிக்கவும், தமிழீழ விடுதலையை அறிவிக்க கோரியும் தவறாது கூடுவோம். 2009யில் நாம் தடுக்க தவறிய இனப்படுகொலைக்கு இன்றாவது நியாயம் கேட்க ஒன்று திரள்வோம். தமிழர்களுக்கு துரோகம் செய்த ஐ.நாவின் அதிகாரிகளுக்கும் இந்திய அரசுக்கும் எதிரான தொடர் போராட்டத்திற்கு தயாராவோம். கொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நியாயம் கேட்க இனியாவது ஒன்றாவோம். நீதி கேட்டு வீதிக்கு வருவோம். தமிழின இயக்கங்களே, தமிழர்களே கைகோர்ப்போம். 2009யில் செய்யாததை செய்து முடிப்போம் வாருங்கள். இடம்: மனிதவுரிமை சதுக்கம், (Metro: Trocadero Ligne: 6/9) காலம்: செவ்வாய் 12-02-2013 மாலை 3 மணிக்கு (15h00) தொடர்பு : mte.france@gmail.com / 06 52 72 58 67