siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 11 ஜனவரி, 2013

மனைவியின் தொலைபேசி அழைப்பை கேட்டு பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்ததால்

இத்தாலி செல்வதற்காக, விமானத்தில் அமர்ந்திருந்த நபர், மனைவியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பால், பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்தார். பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது குஜராத் மாவட்டம். இந்த பகுதியை சேர்ந்தவர் பைசல் அலி; வேலை நிமித்தமாக, இத்தாலிக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக, நேற்று முன்தினம், லாகூர் விமான நிலையத்திற்கு சென்று, விமானத்தில் ஏறி அமர்ந்தார். விமானம் புறப்படுவதற்கு முன், இவர் மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. கணவன் வெளிநாடு செல்வதை விரும்பாத மனைவி, தொலைபேசியிலேயே கதறி அழுதார். இதனால், மனம் உருகிய பைசல் அலி, விமானத்திலேயே, தன் பாஸ்போர்ட்டை கிழித்து எறிந்தார். இது குறித்து, விமான ஊழியர்கள் விசாரித்த போது, "நான் வெளிநாடு செல்வதை மனைவி விரும்பவில்லை. அவள் அழுவதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. எனவே, இத்தாலி செல்லும் முடிவை கைவிட்டு, பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்தேன்' என்றார். விமான நிலையத்திலிருந்து வெறுங்கையோடு வெளியேறிய, பைசல் அலியை அனுமதிக்க, விமான நிலைய அதிகாரிகள் மறுத்து விட்டனர். அதன் பின், அவர், தான் கிழித்தெறிந்த பாஸ்போர்ட்டை எடுத்து வந்து, அதிகாரிகளிடம் காட்டினார். இதையடுத்து, அவரை, அதிகாரிகள், வெளியே செல்ல அனுமதித்தனர்

வேகமாக பரவி வரும் காட்டுத் தீ: வீடுகள் எரிந்து நாசம்

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு ஏராளமான வீடுகள் எரிந்து சாம்பலாகி உள்ளன. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் 150க்கும் அதிகமான ஹெக்டேர் வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியுள்ளது.
இதனால் ஏராளமான வீடுகள் எரிந்து சாம்பலாகி உள்ளதுடன், அப்பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காட்டுத் தீயை அணைக்கும் பணியில், ஹெலிகாப்டர்கள் மற்றும் 20 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
காட்டுத் தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில், கிறிஸ்ட்சர்ச் பகுதியில் 185 பேர் உயிரிழந்தனர், அதனை தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை மிக மோசமான இயற்கை சீற்றமாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்: 115 பேர் பலி

பாகிஸ்தானில் நேற்று தொடர்ச்சியாக நடந்து குண்டுவெடிப்பு சம்பவங்களில் 115 பேர் கொல்லப்பட்டனர், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். குவெட்டாவை தலைநகராகக் கொண்ட தென் மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் தொடர்ந்து வன்முறைகளும், பயங்கரவாதத் தாக்குதல்களும் தலைவிரித்தாடி வருகின்றன.
இங்கு தான் ஷியா முஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள் என்பதால், தொடர்ந்து சன்னி முஸ்லீம்கள் இந்தப் பகுதியைக் குறி வைத்துத் தாக்கி வருகின்றனர்.
இங்கு வசிக்கும் ஷியா பிரிவினர் பெரும்பாலும் ஆப்கானிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள பில்லியர்ஸ் அரங்கொன்றில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 85 பேர் வரை கொல்லப்பட்டனர், இதனால் அப்பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது.
இறந்தவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன, காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர், ஆனால் மருத்துவமனைகளில் இடமில்லாமல் அவை நிரம்பி வழிந்தன.
குவெட்டா தவிர மிங்கோரா என்ற இடத்தில் நடந்த இன்னொரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் நேற்று மொத்தம் 4 இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.