27.09.2012.By.Rajah.இந்துக்களுக்கு வசதி ஏற்படுத்துங்கள்; நம்பிக்கை பொறுப்புச் சபை தலைவர் கடற்படையிடம் கோரிக்கை | |||
நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கு வரும் அடியவர்கள் குறித்த நேரங்களில் இடம்பெறும் பூசைகளுக்குச் செல்ல பிரத்தியேக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோயில் நம்பிக்கை பொறுப்புச் சபை தலைவர் ஏ.தியாகராஜா புங்குடுதீவு கடற்படை தலைமை அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கு வரும் இந் துக்களுக்கு தனியான வரிசை அமைத்து வழங்கல் எனும் தலைப்பில் எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆலயத்தின் பூசைகள் இடம்பெறும் நேரங்கள் காலை 7 மணி, நண்பகல் 12 மணி, மாலை 5.30 மணி மற் றும் 6.30 மணி என்பனவாகும். இதில் அபிஷேகம் மற்றும் சாந்தி என்பன காலை 8.30 மணி முதல் 12 மணி வரை இடம்பெறும்.
அடியார்கள் யாழ். குடா நாடு மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து வருகின்றனர். இந்த வேளைகளில் தென்பகுதிகளில் இருந்து வரும் மக்களும் இந்து அடியார்களும் கலந்து நீண்ட வரிசையில் நிற்கும் போது இந்துக்கள் அம்பிகையின் பூசை நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாத அளவுக்குப் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நீண்ட நேரம் படகுகளுக்கு வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதால் பூசை வழி பாட்டை உரிய நேரத்துக்குச் சென்று வழிபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2010, 2011 காலப் பகுதிகளில் இந்துக்களுக்கு என தனியான வரிசை ஏற்படுத்தப்பட்டு உரிய நேரத்தில் பூசைக்கு செல்ல வழியேற்படுத்தி கொடுக்கப்பட்டது.
இந்த வசதி தற்போது செய்து கொடுக்கப்பட வில்லை. இதனால் இந்துக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையை கருத்தில் எடுத்து இந்துக்கள் உரிய நேரத்தில் பூசை வழிபாடுகளுக்குச் செல்ல பிரத்தியேகமான தனியான வரிசையை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறோம். என்றுள்ளது.
இந்தக் கடிதத்தின் பிரதி வடக்கு கடற்படை தலைமை அதிகாரி, அரச அதிபர், வேலணை பிரதேச செயலர், வேலணை பிரதேசசபை தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
| |||
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
வியாழன், 27 செப்டம்பர், 2012
நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு வரும்
வியாழன், செப்டம்பர் 27, 2012
செய்திகள்
உலக தமிழர்கள் கிளிநொச்சியில் நடந்த மனதை உருக்கும் சம்பவங்களை பாருங்கள்!
வியாழன், செப்டம்பர் 27, 2012
செய்திகள்
27.09.2012.ByRajah.பொதுமக்களுடைய நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் படையினரை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியும், வடக்கில் மக்களுடைய நிலங்களில் ஆக்கிரமித்திருக்கும் படையினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று கிளிநொச்சி நகரில் நடத்தியிருந்த போராட்டம் வெற்கறிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இன்று காலை 11மணியளவில் மாவட்டச் செயலகத்தின் முன்பாக கூடிய மக்கள் தமது நிலங்களில் ஆக்கிரமித்துள்ள படையினர் அங்கிருந்து வெளியேறவேண்டும் என பதாகைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பியவாறு உணர்ச்சிபூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

























முன்னதாக குறித்த போராட்டத்தில் மக்களை கலந்துகொள்ளவிடாது தடுப்பதற்குப் படையினர் கடும் பிரயத்தனம் எடுத்திருந்தனர். எனினும் மக்கள் முழுமையாக கலந்து கொண்டனர்.
இந்நிலையில் போராட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது. இதில் காணாமல்போனோர் மற்றும் சிறைகளிலுள்ளோரின் உறவினரும் கலந்து கொண்டு தங்கள் உறவினர்களை மீட்டுத்தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் இந்தப்போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் மனோ கணேசன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, வினோ, மற்றும் சி.சிறிதரன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னிணியின் சார்பில் அதன் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் முடிவில் ஜ.நாவுக்கான வதிவிடப்பிரதி நிதியிடமும், மாவட்டச் செயலரிடமும் மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன எமது உறவுகளை மீட்க சர்வதேசமே மனமிரங்கு!- கிளிநொச்சியில் உறவுகளைப் பறிகொடுத்த தயார்மார் கதறல்
சர்வதேசமே இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் போன எமது பிள்ளைகளை மீட்டுத்தர நடடிவடிக்கை எடு என கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உறவுகளை இழந்த தாய்மார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தின் போதே அவர்கள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
காணாமல் போனவர்களின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு கண்ணீர் மல்க நெஞ்சை உருக்கும் வகையில் அவர்கள் ஒன்றாக சர்வதேசத்திடம் நீதி கோரினார்கள்.
இராணுவத்தினரால் கடத்தப்பட்டும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும் காணாமல் போன தமது உறவுளை மீட்டுத்தரவும் தமிழர்களுக்கான நீதியை வழங்கவும் சர்வதேச தலையிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உலக வெப்பமயமாதலின் எதிரொலி: 10 கோடி பேர் உயிரிழக்க நேரிடும் அபாயம்
வியாழன், செப்டம்பர் 27, 2012
தகவல்கள்
27.09.2012.By.Rajah.உலக
வெப்பமயமாதல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், 2030ஆம் ஆண்டுக்குள்
உலகளவில் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் இறக்க நேரிடும் என்ற அதிர்ச்சி தகவல்
தெரியவந்துள்ளது.
2010 மற்றும் 2030ஆம் ஆண்டில் வானிலை மாற்றத்தால் மனித இனம் மற்றும்
பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாரா என்ற மனித இன நலம் சார்ந்த
நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் வாயுக்கள் அதிகளவில் வெளியிடப்படுவதால், உலகில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது, துருவப் பகுதிகளிலும் பனி உருகுகிறது. இதனால் வறட்சி, கடல் நீர் மட்டம் உயர்தல் போன்ற அபாயங்கள் ஏற்படும். தற்போது காற்று மாசு, பசி, நோய் போன்றவற்றால் 50 லட்சம் பேர் ஆண்டுதோறும் இறக்கின்றனர். பெட்ரோலியப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் 2030ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 60 லட்சமாக உயரும். இவர்களில் 90% பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அடுத்த 10 ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 10 கோடி பேர் உயிரிழக்கக்கூடும். தொழிற்துறைகள் வளர்வதற்கு முன்பு இருந்ததை விட இப்போது 0.8 சதவீதம் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு கேன்கன் சுற்றுச்சூழல் மாநாட்டின் போது, உலக வெப்பத்தை 2 சென்டிகிரேட் வரை குறைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புக்கொண்டன. ஆனால், மாசு ஏற்படுத்தும் வாயுக்கள் அளவைப் பார்த்தால் 2 சென்டிகிரேட் வெப்பத்தை குறைப்பது கூட போதுமானதாக இருக்காது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். |
நவீன மயமாக்கப்படும் மருத்துவப் பதிவேடுகள்
வியாழன், செப்டம்பர் 27, 2012
தகவல்கள்
27.09.2012.By.Rajah.சுவிட்சர்லாந்தில் கடந்த
சில வருடங்களாக மருத்துவத் துறையில் "பதிவேடுகள், நோயாளி விபரங்கள், மருந்துச்
சீட்டு, எக்ஸ்ரே, ஸ்கேன்" போன்றவை அனைத்தும் காகித வடிவத்திலிருந்து
நவீனமயமாக்கப்பட்டு கணனி வடிவத்தில் இருப்பது குறித்து அதிகமாக
விவாதிக்கப்படுகின்றது.
கணனி பதிவுகள் மலிவானவை, குழப்பமற்றவை, நிரந்தரமானவை என்பதால் விபரங்களை CD
க்களில் பாதுகாக்கப் பலரும் விரும்புகின்றனர். நோயாளியின் நோய் விபரம், அதற்காக
நடைபெற்ற பரிசோதனை விபரங்கள், மருந்துப் பட்டியல் ஆகியன காகித வடிவத்திலிருந்தால்
விரைவில் கிழிந்து போகும். ஆனால் CD க்களாக மாற்றினால் பாதுகாப்பாக இருக்கும். கணனி சார்ந்த மருத்துவர்கள் இந்த மருத்துவ மின் பதிவுகளின் தரத்தை உயர்த்தி செலவைக் குறைக்க முயல்கின்றனர். காகிதங்களில் பாதுகாக்கும் போது மருத்துவரின் கிறுக்கலான எழுத்துகள் தவறான மருந்துகளைப் பெற வழிவகுக்கும். இது போன்ற தவறுகள் மின்பதிவுகளில் ஏற்படாது. அமெரிக்காவில் மட்டும் இத்தவறுகளால் ஆண்டொன்றுக்கு 1,00,000 மரணங்கள் ஏற்படுகின்றன. ஆனால் சுவிட்சர்லாந்தில் ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து பேர் வரை உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இத்தகவலை மருத்துவத் தகவலியல் கழகத்தின் தலைவரான கிறிஸ்ட்டியன் லோவிஸ்(Christian Lovis) தெரிவித்தார். நல்ல தரமான சிகிச்சைக்கு நோயாளி பற்றிய தகவல்களின் நம்பகத்தன்மையும் துல்லியமும் மிகவும் முக்கியம் என்றார் லோவிஸ். தகவல் தெரிவித்தல் தவிர வேறு கூடுதல் பயன்கள் எதுவும் இம் மின்பதிவுகளால் இல்லை, என்றும் தெரிவித்தார். மின்நலவாழ்வுத் திட்டத்தில் மருந்து, நோயாளி கோப்பு, தொலை மருந்துகள், நுகர்வோர் உடல்நலத் தகவலியல், அயலக மருத்துவ சேவை, மற்றும் தொலைதூதரகத்திலிருக்கு நோயாளி குறித்த தகவல்களைச் சேகரித்து தொகுத்தல் ஆகிய அனைத்தும் அடங்கும் |
சாட்டை (வீடியோ இணைப்பு)
வியாழன், செப்டம்பர் 27, 2012
காணொளி
27.09.2012.By.Rajah.தங்கள் கடமையை மறந்து கண்ணியம் தவறும் ஆசிரியர்களுக்கும், பிள்ளைகளை சரிவர புரிந்து கொள்ளாத பெற்றோருக்கும் கொடுக்கப்படும் அடியே சாட்டை. |
நெய்வேலி அருகே உள்ள கிராமத்து அரசு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிபவர்
தம்பி ராமையா. இப்பள்ளியில் எப்படியாவது தலைமையாசிரியராக வேண்டும் என்ற நினைப்புடன்
இருந்து வருகிறார். இந்நிலையில் இயற்பியல் ஆசிரியராக வரும் சமுத்திரகனி, இந்த பள்ளியின் நிலையை கண்டு வியப்படைகிறார். பள்ளியில் இருக்கும் ஒவ்வொரு சட்டங்களையும் மாற்றுகிறார். மாணவர்களை அடித்து திருத்துவதைவிட அன்பாக நான்கு வார்த்தை பேசினாலே நல்வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற புது பார்முலாவை கடைபிடிக்கிறார். இது அவருக்கு கைகொடுக்கிறது. இதனால் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சமுத்திரகனியை பிடித்துப் போய்விடுகிறது. இது மற்ற ஆசிரியர்களுக்கு பொறாமையாக இருக்கிறது. தம்பி ராமையாவுக்கும் சமுத்திரகனியின் நடவடிக்கை மேல் அதிருப்தி ஏற்படுகிறது. எனவே அவரை பள்ளியில் இருந்து விரட்டவும், கொலை செய்யவும் திட்டம் தீட்டுகிறார். இதை மகிமா சமுத்திரகனியிடம் சொல்கிறாள். அவரும் அவளுக்கு ஆறுதல் சொல்லி அனுப்புகிறாள். அடுத்தநாள் மகிமா விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ய, அவளை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அவள் விஷம் குடித்ததற்கான காரணம் வேறென்றாலும், சமுத்திரகனிதான் காரணம் என சந்தேகத்தில் மகிமாவின் உறவினர்கள் அவரை அடித்து உதைக்க, இது அவர்மீது பொறாமை கொண்ட மற்ற ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இறுதியில், சமுத்திரகனி தன் மீது விழுந்த இந்த கரையை அழித்தாரா? மாவட்டத்திலேயே பின்தங்கியிருக்கும் பள்ளியை முன்னுக்கு கொண்டு வந்தாரா? யுவன், மகிமாவின் காதல் என்னவாயிற்று? என்கின்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிப்படம். ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? என்பதை சமுத்திரகனி, ஆசிரியர் கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார். உதவி தலைமை ஆசிரியராக வரும் தம்பி ராமையா, திறமையான தனது நடிப்பில் பளிச்சிடுகிறார். தன் வழுக்கை தலைமுடியை எடுத்து வேர்வையை துடைப்பதாகட்டும், சமுத்திரகனியை பார்த்தாலே மனதுக்குள் கொழுந்து விட்டெரியும் வில்லத்தனத்திலும் சபாஷ் போட வைக்கிறார். இவர் தட்டும் கைதட்டலுக்கு திரையரங்கம் முழுவதும் இவருக்கு கைதட்டலை வாரி இறைத்திருக்கிறது. தலைமை ஆசிரியராக ஜூனியர் பாலையா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தாலும், அவரது திறமையான நடிப்பால் சிறப்பான ஆசிரியர் என்பதை நம் மனதில் பதிய வைத்திருக்கிறார். படத்தில் பெரும் பகுதி ரசிகர்களின் கோபத்தை தூண்டும் விதத்திலேயே நாயகன் யுவனின் நடிப்பு அமைந்துள்ளது. இறுதியில், நல்லவனாக மாறும் இவர், ரசிகர்களிடம் நெருங்குகிறார். இசையமைப்பாளர் டி.இமான் தான் ஒரு மெலோடி கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அந்த அளவுக்கு ரொம்ப அழகான மொலோடி மெட்டுக்களை கொடுத்திருக்கிறார். ‘சகாயனே சகாயனே’, ‘அடி போடி ராங்கி’ போன்ற பாடல்கள் காதுகளுக்கு இனிமையை தருகின்றன. அரசு பள்ளிக்கூடங்களில் இருக்கும் ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும், தனியார் பள்ளிகளின் தற்போதைய நிலை என்னவென்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் அன்பழகன், தனது முதல் படத்திலேயே இப்படி ஒரு கருத்தை சொல்லியதற்கு ரசிகர்களிடம் பலத்த பாராட்டைப் பெற்றுவிடுகிறார். மொத்தத்தில் சாட்டை சுழற்றிய விதம் மிகவும் அருமை... நடிகர்: சமுத்திரகனி, யுவன், தம்பி ராமையா. நடிகை: மகிமா. இயக்குனர்: அன்பழகன். இசை: டி.இமான். ஒளிப்பதிவு: ஜீவன். |
முன்செல்ல |
ஒக்ரோபர் 12ல் திரைக்கு வரும் மாற்றான்
வியாழன், செப்டம்பர் 27, 2012
செய்திகள்
27.09.2012.By.Rajah..சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடித்த 'மாற்றான்', ஒக்ரோபர் 12ம் திகதி திரைக்கு வருகின்றது. |
ஐரோப்பியா, ரஷ்யா நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள மாற்றானின் இறுதிகட்ட பணிகள்
தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் கிராஃபிக்ஸ் காட்சிகள் அனைத்தையும் இயக்குனர் கே.வி முடித்து விட்டார். ஒரு சில மாற்றங்களுடன் க்ளைமேக்ஸ் காட்சி மட்டுமே தற்போது நடைபெற்று வருகின்றன. மாற்றான் படத்தின் கால அளவு 168 நிமிடங்களாம். படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து, சென்சாருக்கு செப்டம்பர் 28ம் திகதி அல்லது ஒக்ரோபர் 1ம் திகதி அனுப்ப இருக்கிறார்கள். ஏற்கனவே திட்டமிட்டபடி அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதால் ஒக்ரோபர் 12ம் திகதி 'மாற்றான்' திரைக்கு வருகின்றது. 'மாற்றான்' படத்தின் தமிழ் டப்பிங், தெலுங்கு டப்பிங் என தான் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் சூர்யா முடித்துக் கொடுத்து விட்டார் |
கந்தகோட்டை பட இயக்குனரின் அடுத்த படம் “ஈகோ”
வியாழன், செப்டம்பர் 27, 2012
செய்திகள்
27.09.2012.By.Rajah.நகுல், பூர்ணா, சந்தானம் நடித்த கந்தகோட்டை படத்தை இயக்கிய சக்திவேல் “ஈகோ” என்னும் பெயரில் புதிய படத்தை இயக்குகிறார். |
இந்த படத்தில் வேலு என்னும் புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். இவர்
அமெரிக்காவில் பொறியியல் படித்தவர். படம் குறித்து இயக்குனர் சக்திவேல் கூறுகையில், அழகான பொய்கள் மற்றும் எதிர்பாராத சம்பவங்களால் உண்டான நட்பு, காதல், வெறுப்பு மற்றும் ஈகோ நாயகன் நாயகி வாழ்கையை புரட்டி போடுகின்றன. அதன் பின்பு அவர்கள் வாழ்க்கையில் என்ன ஆகிறது என்பது தான் கதை. இந்த கதையை நகைச்சுவையோடு கலகலப்பாக எல்லா தரப்பினரும் ரசிக்கும் படி சொல்லியிருகிறோம் என்று கூறியுள்ளார். முதல் கட்ட படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் நடைபெற்றுள்ளது. இரண்டாம் கட்ட படபிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்றது. பாடல்கள் நியூசிலாந்தில் படமாக்கப்பட்டன. இறுதிகட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் திரைக்கு வருகிறது இந்த படம் என்கிறது படக்குழு. |
நடிகை மீது நடன இயக்குனர் பரபரப்பு புகார்
வியாழன், செப்டம்பர் 27, 2012
செய்திகள்
27.09.2012.By.Rajah.கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடனம் ஆட மறுத்து, தகராறு செய்தார் என்று நடிகை ஆண்டிரிட்டா ராய் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார் நடன இயக்குனர். |
கன்னடத்தில் உருவாகும் படம் ரஜினி காந்தா. இப்படத்தில் துன்யா விஜய்
நாயகனாகவும், ஆண்டிரிட்டா ராய் நாயகியாகவும் நடிக்கின்றனர். தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா இரண்டையும் பிரித்து கையாண்டார்கள். படத்தை பொறுத்தவரை தங்கள் திறமையை வெளிப்படுத்த கடினமாக உழைப்பார்கள். ரஜினி காந்தா படத்திற்கான நடன காட்சிகளை முடிக்க எனக்கு குறைந்த கால அவகாசமே தரப்பட்டது. ஆனால் அதை ஆண்டிரிட்டா புரிந்து கொள்ளவில்லை. கதாநாயகனுடன் நெருக்கமான இருக்கும் படி நடிக்க சொன்னால் பிரச்னை செய்வார். இரவு நேர பார்ட்டிகளில் கலந்துகொண்டுவிட்டு பகலில் படப்பிடிப்புக்கு வரும்போது தூக்க கலக்கத்துடனே வருவார். மேக்கப் போட்டு மறைத்தாலும் அதை மறைக்க முடியாது. ஆண்டிரிட்டாவை நடனம் ஆட வைப்பதற்குள் நரக வேதனை அனுபவித்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார். இது பற்றி ஆண்டிரிட்டா ராய் கூறுகையில், தேவையில்லாத காரணங்களை வைத்துக்கொண்டு என் மீது இம்ரான் குற்றம் சாட்டுகிறார். அவர் சொல்வதற்கு ஆதாரம் கிடையாது. என் மீது இவ்வளவு புகார் சொல்பவர் கடந்த 2 மாதத்துக்கு முன்பே படப்பிடிப்பு நடந்த போது ஏன் சொல்லவில்லை. ஆதாரமற்ற புகார் சொல்ல அவர் ஏன் 2 மாதம் காத்திருந்தார் என்று தெரியவில்லை என்றார். |
சத்யராஜ் மகள் ஆவணப் படத்தில் அறிமுகம்
வியாழன், செப்டம்பர் 27, 2012
செய்திகள்
27.09.2912.Byx.Rajah.சமூகப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, முதன்முறையாக ஆவணப் படமொன்றில் நடித்துள்ளார். |
சத்யராஜின் மூத்த மகன் சிபிராஜ், ஏற்கனவே லீ, நாணயம் உட்பட பல படங்களில்
நடித்துள்ளார். இந்நிலையில் சத்ய ராஜின் மகள் திவ்யா முதன்முறையாக ஆவணப்படமொன்றில் அறிமுகமாகி நடித்துள்ளார். இப்படத்தைப் பார்த்த சிபிராஜ், திவ்யாவின் நடிப்பை பாராட்டினாராம். மேலும் இப்படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை கொல்கத்தாவை சேர்ந்த சிர்ஷாய் என்பவர் இயக்கி உள்ளார். இந்த வேடத்தில் நடிக்க முதலில் கங்கானா ரனாவத்தை அணுகினார். ஆனால் இவர் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் திவ்யாவை நடிக்க வைத்தனர் |
பொதுநலவாயத் தலைவர்களின் மாநாடு இலங்கையில் வேண்டாம்; அரச சார்பற்ற நிறுவனங்கள் கோரிக்கை
வியாழன், செப்டம்பர் 27, 2012
செய்திகள்
பரீட்சை நிலையம் இடமாற்றம்
வியாழன், செப்டம்பர் 27, 2012
செய்திகள்
27.09.2012.By.Rajah.இலங்கை வங்கியாளர் சங்கத்தினால் யாழ். திருக்குடும்ப கன்னிய மடப் பாடசாலையில் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. சி.பி.எவ். டி.பி.எவ். ஆகிய பரீட்சைகள் வரும் சனி, ஞாயிறு மற்றும் ஒக்ரோபர் 6 ஆம் திகதி ஆகிய நாள்களில் நடைபெற ஏற்பாடாகியிருந்தன.
இந்தப் பரீட்சைகள் குறித்த தினங்களில் யாழ். கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
|
கேப்பாபிலவு மக்களை கவனிப்பார் யாருமில்லை அவலவாழ்வு தொடர்கிறது
வியாழன், செப்டம்பர் 27, 2012
செய்திகள்
27.09.2012.By.Rajah.சொந்த இடத்தில் மீள் குடியமர்வு எனக் கூறி நேற்றுமுன்தினம் நந்திக் கடல் அருகே சூரியபுரம் காட்டுப் பகுதியில் படையினரால் இறக்கிவிடப்பட்ட கேப்பாபிலவைச் சேர்ந்த 110 குடும்பங்களும் தொடர்ந்தும் அங்கு பெருந்துன்பங்களை அனுபவிப்பதுடன் உதவிகள் எதுவுமின்றி அல்லல்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அடிப்படை வசதிகள் இல்லாமையால் இந்தக் குடும்பங்கள் அந்தரித்த நிலையில் காணப்படுவதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன. நேற்றுமுன்தினம் படையினரால் அந்தப் பகுதியில் இறக்கிவிடப்பட்ட இந்தக் குடும்பங்களுக்கு குடிதண்ணீர் மற்றும் உணவு வசதிகள் நேற்று சிறிதளவே வழங்கப்பட்டதாகவும் அங்குள்ள முழு மக்களுக்கும் உதவிகள் கிடைக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
பகலில் கடும் வெப்பமான கால நிலையால் சிறுவர்கள் வெயிலில் வாடி வதங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் மலசல கூடங்கள் எதுவும் இல்லாமையால் பெண்களும் சிறுவர்களும் பெரும் அல்லல் படுகின்றனர்.
இந்த அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர் ஒருவர் உதனிடம் தெரிவித்தார். மர நிழல்களிலும் சிறிய கூடாரங்களை அமைத்தும் தாம் தங்கியுள்ளதாகவும் இரவில் பாம்புகளின் தொல்லை தம்மை அச்சத்துக்குள்ளாக்கியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
இன்னும் எவ்வளவு காலத்துக்கு இவ்வாறான ஒரு அபாய நிலையில் குடியிருக்க நேருமோ எனவும் அவர் அச்சம் வெளியிட்டார். போதிய குடிதண்ணீரோ உணவோ இல்லாமல் மக்கள் பரிதாப நிலைக்கு உட்பட்டிருப்பதாகவும் இது குறித்து அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தம்மைக் காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் கோரினார்
|
மாற்றங்கள் ஏற்படாவிட்டால் விளைவுகள் கடுமையாகும் இலங்கையை எச்சரிக்கிறது கனடா
வியாழன், செப்டம்பர் 27, 2012
செய்திகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)