siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 27 செப்டம்பர், 2012

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு வரும்

 27.09.2012.By.Rajah.இந்துக்களுக்கு வசதி ஏற்படுத்துங்கள்; நம்பிக்கை பொறுப்புச் சபை தலைவர் கடற்படையிடம் கோரிக்கை
நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கு வரும் அடியவர்கள் குறித்த நேரங்களில் இடம்பெறும் பூசைகளுக்குச் செல்ல பிரத்தியேக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோயில் நம்பிக்கை பொறுப்புச் சபை தலைவர் ஏ.தியாகராஜா புங்குடுதீவு கடற்படை தலைமை அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கு வரும் இந் துக்களுக்கு தனியான வரிசை அமைத்து வழங்கல் எனும் தலைப்பில் எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆலயத்தின் பூசைகள் இடம்பெறும் நேரங்கள் காலை 7 மணி, நண்பகல் 12 மணி, மாலை 5.30 மணி மற் றும் 6.30 மணி என்பனவாகும். இதில் அபிஷேகம் மற்றும் சாந்தி என்பன காலை 8.30 மணி முதல் 12 மணி வரை இடம்பெறும்.
அடியார்கள் யாழ். குடா நாடு மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து வருகின்றனர். இந்த வேளைகளில் தென்பகுதிகளில் இருந்து வரும் மக்களும் இந்து அடியார்களும் கலந்து நீண்ட வரிசையில் நிற்கும் போது இந்துக்கள் அம்பிகையின் பூசை நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாத அளவுக்குப் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நீண்ட நேரம் படகுகளுக்கு வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதால் பூசை வழி பாட்டை உரிய நேரத்துக்குச் சென்று வழிபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2010, 2011 காலப் பகுதிகளில் இந்துக்களுக்கு என தனியான வரிசை ஏற்படுத்தப்பட்டு உரிய நேரத்தில் பூசைக்கு செல்ல வழியேற்படுத்தி கொடுக்கப்பட்டது.
இந்த வசதி தற்போது செய்து கொடுக்கப்பட வில்லை. இதனால் இந்துக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையை கருத்தில் எடுத்து இந்துக்கள் உரிய நேரத்தில் பூசை வழிபாடுகளுக்குச் செல்ல பிரத்தியேகமான தனியான வரிசையை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறோம். என்றுள்ளது.
இந்தக் கடிதத்தின் பிரதி வடக்கு கடற்படை தலைமை அதிகாரி, அரச அதிபர், வேலணை பிரதேச செயலர், வேலணை பிரதேசசபை தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.