siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

இலங்கையில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளின் முக்கிய கேந்திர நிலையங்களாக மலேசியா,நைஜீரியா!


Friday28September2012By.Rajah.சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள், தங்களது செயற்பாடுகளுக்கு மலேசியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளை பயன்படுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுற்றுலா வீசாக்களைப் பயன்படுத்தி குறித்த நாடுகளுக்கு இலங்கை அகதிகளை அழைத்து அங்கிருந்து சில நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளின் முக்கிய கேந்திர நிலையங்களாக மலேசியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா வீசா மூலம் அழைத்துச் செல்லப்படும் சிலர் அங்கேயே நிர்க்கதியான நிலையில் கைவிடப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு கைவிடப்பட்ட 300 பேர் மலேசியாவில் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் குறித்து குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.