
சீனாவில் உள்ள ஒரு ஆற்றில், ஆலையில் இருந்த கசிந்த ரசாயனம் கலந்ததால், குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. சீனாவின், ஷான்சி மாகாணத்தில் உள்ள ஒரு ஆலையில், குழாய் உடைந்து, "அனிலைன்' என்ற ரசாயனம், சுவாசாங் என்ற நதியில் கலந்தது.
இந்த நதியின் தண்ணீர், சாங்கி நதியில் இணைந்தது. ஹீபி மாகாணத்தில் உள்ள ஹான்டன் நகருக்கு, சாங்கி நதி தண்ணீர் தான், குடிநீராக வினியோகம் செய்யப்படுகிறது. ஆற்றில் ரசாயனம் கலந்த செய்தியை கேள்விப்பட்ட,...