siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 3 செப்டம்பர், 2012

குடும்பத் தகராற்றினால் குடும்பத் தலைவர் தற்கொலை

03.09.2012.BY.rajah. கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற தகராற்றின் காரணமாக குடும்பத் தலைவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பண்டத்தரிப்புப் பகுதியில் நேற்று முந்தினம் இடம் பெற்றுள்ளது.பண்டத்தரிப்பு பனிப்புலம் பகுதியினைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான சுந்தரமூர்த்தி புஸ்பராசா (வயது 40) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இவர் நஞ்சருந்திய நிலையில் சங்கானை வைத்திய சாலையில் நேற்று முந்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார்...

தொடர் வண்டிக் கட்டண உயர்வால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது

03.09.2012.BYrajah சுவிட்சர்லாந்தில் கடந்த 2004ம் ஆண்டுக்கு பின்பு முதன்முறையாக இப்போது பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டில் மத்திய தொடர் வண்டித்துறை புதுப்பிக்கப்பட்டது. அதன்பின்பு இந்த முதல் ஆறு மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை 1.6 சதவீதம் குறைந்துவிட்டது. பயணிகளால் கிடைக்கும் வருமானமும் 65 மில்லியன் சுவிஸ் ஃபிராங்க் அளவிற்கு அதாவது மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டது. இதற்குக் காரணம் மத்திய தொடர்வண்டித் துறை, சுற்றுலாத்...

வடமராட்சியில் தண்ணீர் பாத்திரத்தினுள் வீழ்ந்து 2 வயது குழந்தை பரிதாபச் சாவு

03.09.2012.BY.rajah-2 வயது நிரம்பிய ஆண் குழந்தையொன்று தண்ணீர்ப் பாத்திரத்தினுள் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று யாழ். வடமராட்சிப் பிரதேசத்தின் கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (1)மாலை 4.00 மணியளவில் நடைபெற்றுள்ள இச்சம்பவத்தில் வீட்டின் வெளியே இருந்த நீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் தலைகீழாக வீழ்ந்து உயிரிழந்ததாக தெரியவருகின்றது. குழந்தையைக் காணவில்லை எனத் தேடிய பெற்றோர் தண்ணீர்ப் பாத்திரத்தில் குழந்தை வீழ்ந்து கிடப்பதை அறிந்து வைத்தியசாலைக்கு...

பிறந்து ஆறே நாட்களில் குழந்தையின் விரல்கள் துண்டிக்கப்பட்ட பரிதாபம்

03.09.2012.BY.rajah.பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் பிறந்து ஆறு நாட்களான குழந்தை ஒன்றின் விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி ஒருவரின் கவனயீனத்தின் காரணமாக இந்த குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தை தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள்...

அறிவியல், மருத்துவத்தில் சிறந்து விளங்கும் சவுதி பெண்கள்

03.09.2012.BY.rajah.அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் சவுதி அரேபிய பெண்கள் சிறந்து விளங்குவதால் தான் அவர்களுக்கு உலகளாவிய ரீதியில் சுதந்திரம் கிடைத்துள்ளது என கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. யுனஸ்கோ வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி சமார்பாட்னி என்பவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், மேற்கத்திய நாட்டு பெண்களை காட்டிலும் சவுதி அரேபிய பெண்கள் அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் அதிக அளவில் பட்டம் பெறுகின்றனர். சவுதி அரேபியாவில் 40...

மரபணு சோதனை மூலம் தலைமயிர், கண்கள் நிறங்களை அறியலாம்

03.09.2012.BY.rajah. குற்றம் நடக்கும் இடங்களில் கிடைக்கும் மரபணுக்கள் குற்றவாளிகளின் கண்கள் மற்றும் தலைமயிரின் நிறத்தை கண்டுபிடிக்க உதவும் குற்றம் நடந்துள்ள இடமொன்றிலிருந்து கிடைக்கும் டிஎன்ஏ மரபணுப் பொருட்களைக் கொண்டு சந்தேகநபர் ஒருவரின் தலைமயிர் மற்றும் கண்களின் நிறங்களை கண்டறிய கூடிய தடயவியல் பகுப்பாய்வு முறையொன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கிடைக்கின்ற டிஎன்ஏ தகவல்களைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காண முடியாது போகின்ற பட்சத்தில்,...

பக்கவாதத்தை தடுக்கும் சாக்லேட்

தொப்பையை பெருக்கச் செய்யும் என்பதால், சாக்லேட்டுக்கள் உங்களது உடலுக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவை முளையை பக்கவாதம் தாக்குவதில் இருந்து தடுப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. 37 000 சுவீடன் நாட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி அதிகம் சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வருவது குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாக்லேட்டுக்களை அதிகம் உண்பது இதயத்துக்கு நல்லது என்று கூறும் பல ஆய்வுகளை அடுத்து தற்போது இந்த ஆய்வு முடிவு...

செத்த பிணத்தை மீண்டும் எழுப்பலாம் : அதிர்ச்சி தகவல்!!

03.09.2012.BY.rajah.ஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி “இப்ப நான் எங்கிருக்கேன்ப? என்று பேச ஆரம்பித்து வாக்கிங் கிளம்பி விடும். அதன் பிறகு மீண்டும் 60 வயசுக்கு ஆயுட் காலம் இது புதிய ஹாலிவுட் படக்கதை அல்ல! உலகம் முழுக்க சோடாப்புட்டி கண்ணாடியை மாட்டிக் கொண்டு 100க்கணக்கான விஞ்ஞானிகள் இரவு, பகலாக பிணங்களுடன் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிற சர்வமகா நிஜம்! மனித...

20 வினாடிகளில் விமானமாக மாறும் கார்

03.09.2012.BY.rajah.சொந்தமாக விமானம் வாங்கி அதில் பறக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதே சமயம் இது சாத்தியமாகுமா? என்ற கேள்வியும் எழும். இனிமேல் அது பற்றிய கவலை வேண்டாம். கார்களையே ஜெட் வேகத்தில் பறக்கும் விமானமாக மாற்றி பயணம் செய்யலாம். இதை அமெரிக்க ஏரோ நாட்டிக்கல் பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர். சாலைகளில் 4 சக்கரங்களில் செல்லும் இந்த காரின் பட்டன்களை அழுத்தினால் 20 வினாடிகளில் அது விமானமாக மாறிவிடும். டயர்கள் உள்ளிழுக்கப்பட்டு...

மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பம்

03.09.2012.BY.rajah. மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. சுமார் 800 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு உள்ளக விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு விமான நிலையத்தின் ஓடு தளம் உள்ளிட்ட பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன. 1700 மீற்றர் நீளத்திலான விமான ஓடு பாதை ஒன்றும், விமானத் தரிப்பிடம் ஒன்றும் அமைக்கப்பட உ...

கடலில் மிதந்து வந்த போத்தலில் மதுபானம் இருப்பதாக அருந்திய இளைஞன் உயிரிழப்பு

03.09.2012.BY.rajah. மன்னார், வங்காலைக் கடலில் மிதந்துவந்த போத்தல் ஒன்றில் மதுபானம் இருப்பதாக எண்ணி அதனை எடுத்து அருந்திய 4 இளைஞர்களில் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார், வங்காலைக் கிரமாத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த இளைஞர் மன்னார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டன. வங்காலைக் கடற்கரைக்கு...

மக்களின் காணிகளில் இராணுவ முகாம்கள்: அதிர்ச்சியில் முல்லைத்தீவு மக்கள்

03.09.2012.BY.rajah. முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் விஸ்தரிக்கப்படுவதால் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுப் பறிபோவதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆங்காங்கு உள்ள மினி காவலரண்கள் அகற்றப்பட்டு பெரியளவிலான இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒட்டுசுட்டான் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அதனை அண்டிய காணிகள், கற்சிலைமடுவில் சிவன் ஆலய வளாகமும் அதனை அண்டிய மக்களின் காணிகளும், முத்துஐயன்கட்டு தட்டையர் மலைப்பகுதியில்...

யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்காக 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபா வசூல்

03.09.2012.BY.rajah.   யாழ். மாவட்டத்தில் கடந்த எட்டு மாத காலப் பகுதிக்குள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர்களிடமிருந்து 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபா வசூல் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட மதுவரித் திணைக்களக் கட்டுப்பாட்டு அதிகாரி என்.கிருபாகரன் தெரிவித்தார். அனுமதியின்றி அரச சாராயம் விற்றமை, வயது குறைந்தோருக்கு புகைபொருள் விற்றமை, சட்ட விரோதமாக கள் விற்பனை செய்தமை போன்ற குற்றத்துக்காக 362 பேருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தக்...

பிறந்த நாள் வாழ்த்து.. விமல்ராஜ்

02.09.2012.BY.rajah. விமல்ராஜ் அவர்களுக்கு எமது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தொடர்தும் உமது இணையபணிகள் சிறப்பாக அமைய நல்வாழ்த்துகள் அன்புடன் நவற்கிரி இணைய ங்கள் ...