சுவிட்சர்லாந்தில் கடந்த 2004ம்
ஆண்டுக்கு பின்பு முதன்முறையாக இப்போது பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டில் மத்திய தொடர் வண்டித்துறை புதுப்பிக்கப்பட்டது. அதன்பின்பு
இந்த முதல் ஆறு மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை 1.6 சதவீதம் குறைந்துவிட்டது. பயணிகளால் கிடைக்கும் வருமானமும் 65 மில்லியன் சுவிஸ் ஃபிராங்க் அளவிற்கு அதாவது மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டது. இதற்குக் காரணம் மத்திய தொடர்வண்டித் துறை, சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட நெருக்கடியால் பயணிகள் அதிகமாக சுவிஸ்சுக்கு வரவோ, போகவோ இல்லை என்றும் உள்ளூர் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி எதுவுமில்லை எனவும் கூறியுள்ளது. சுவிஸ் செய்தி நிறுவனத்திடம் இக்கருத்தை தொடர்வண்டித்துறை சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் ரெட்டோ சார்லி கூறினார். நுகர்வோர் அமைப்புகள் கட்டண உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்தன. போக்குவரத்து மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கான சுவிஸ் அமைப்பினைச் சேர்ந்த பிரான்சிஸ்கா ட்யூஷெர், கட்டண உயர்வினால் மக்கள் தொடர்வண்டிகளை விடுத்து தங்கள் கார்களில் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். போக்குவரத்து அமைச்சர் டோரிஸ் லியுதார்ட் இனி பொதுப் போக்குவரத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று ட்யூஷெர் கேட்டுக்கொண்டார். மேலும் கட்டண உயர்வு இதே நிலையில் தொடர்ந்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் கட்டண உயர்வு 20 சதவீதமாகி விடும். இதனைத் தவிர்த்தாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தொடர் வண்டித்துறையின் செய்தித் தொடர்பாளரான சார்லி, அரைக்கட்டணச் சீட்டுக்கும் பொதுப் பயணச்சீட்டுக்கும் கட்டண உயர்வு இருந்தபோதும் தமது விற்பனையில் குறையவேயில்லை. எனவே பயணிகள் ஆதரவில் மாற்றம் காணப்படவில்லை என்றார். இவர், எதிர்வரும் 2030ம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை 45 சதவீதம் உயர்ந்துவிடும் என்று உறுதிபடத் தெரிவித்தார் |
திங்கள், 3 செப்டம்பர், 2012
தொடர் வண்டிக் கட்டண உயர்வால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது
திங்கள், செப்டம்பர் 03, 2012
செய்திகள்