கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற தகராற்றின்
காரணமாக குடும்பத் தலைவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பண்டத்தரிப்புப்
பகுதியில் நேற்று முந்தினம் இடம் பெற்றுள்ளது.
பண்டத்தரிப்பு பனிப்புலம் பகுதியினைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான சுந்தரமூர்த்தி புஸ்பராசா (வயது 40) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் நஞ்சருந்திய நிலையில் சங்கானை வைத்திய சாலையில் நேற்று முந்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
திங்கள், 3 செப்டம்பர், 2012
குடும்பத் தகராற்றினால் குடும்பத் தலைவர் தற்கொலை
திங்கள், செப்டம்பர் 03, 2012
செய்திகள்