siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 3 செப்டம்பர், 2012

பிறந்து ஆறே நாட்களில் குழந்தையின் விரல்கள் துண்டிக்கப்பட்ட பரிதாபம்

03.09.2012.BY.rajah.பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் பிறந்து ஆறு நாட்களான குழந்தை ஒன்றின் விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி ஒருவரின் கவனயீனத்தின் காரணமாக இந்த குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தை தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் மேலும் தெரிவிக்கப்படுகிறது