siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

மரண அறிவித்தல் {ஏழாலைசிவஞானசுந்தரம்}

திரு கந்தவனம் சிவஞானசுந்தரம்
(பலநோக்கு கூட்டுறவுச் சங்க இளைப்பாறிய முகாமையாளர்)
பிறப்பு : 27 மே 1928 — இறப்பு : 26 ஒக்ரோபர் 2012ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தவனம் சிவஞானசுந்தரம் அவர்கள் 26-10-2012 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற காசிநாதர், சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரனும்,
சிவசக்தி(கனடா), ஞானசக்தி(இத்தாலி), சுகுமார்(கனடா), ஞானதர்சினி(பிரான்ஸ்), ஞானசேகர்(இத்தாலி), சிவாஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துரைரத்தினம், கிருபாகரன், ரேவதி, பகீரதன், விமலினி, விக்கினராஜா, காலஞ்சென்ற பத்மநாதன், குணசிங்கம், தேவநாயகம், இராஜமனோகரி, இராஜசுசீலா, சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
உதயகீதன், ரஜிதா, மகிபா, துஜோன், துசி, துசன், புளோரா, பிரிஷா, ஜனகா, ஜனகன், துவாரகா, பாரதி, பரணி, ராகவேந்தன், வைஷ்ணவி, வினோத், வித்தியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தனிஷ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-10-2012 திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணிதொடக்கம் மாலை 5:00 மணிவரை கொழும்பிலுள்ள மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் யாழ்.ஏழாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று,31-10-2012 புதன்கிழமை அன்று உசந்தி ஓடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவசக்தி — கனடா
தொலைபேசி: +15144952957
ஞானசக்தி — இத்தாலி
தொலைபேசி: +3951364580
சுகுமார் — கனடா
தொலைபேசி: +15142788824
ஞானதர்சினி — பிரான்ஸ்
தொலைபேசி: +33141599278
ஞானசேகர் — இத்தாலி
தொலைபேசி: +3951731983
சிவாஜினி — கனடா
தொலைபேசி: +15142732296
 

 

 
:
:
:
:

சுவிஸ் இன்டோர்: இறுதிப்போட்டியில் ஃபெடரர்- டெல் பொட்ரோ மோதல்

 ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, 06:35.47 மு.ப GMT
சுவிஸ் இன்டோர் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரரும், அர்ஜெண்டீனாவின் ஜான் மார்டின் டெல் பொட்ரோவும் மோதவுள்ளனர். சுவிட்சர்லாந்தில் சுவிஸ் இன்டோர் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் டெல் பொட்ரோ 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸின் ரிச்சார்டு கேஸ்கியூட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இவர், இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் ஃபெடரரை எதிர்கொள்கிறார். சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும் ஃபெடரர், இக்கிண்ணத்தை எளிதாகக் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கிண்ணத்தை ஃபெடரர் ஏற்கெனவே 5 முறை வென்றுள்ளார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஃபெடரர் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் பிரான்ஸ் வீரர் பெளல் ஹென்றி மேத்யூவை வீழ்த்தினார்.
கடைசியாக விளையாடிய 34 போட்டிகளில் 33ல் ஃபெடரர் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மெண்டிஸ் மலேசியாவில் விளையாடுகிறார்

 ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, By.Rajah.
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ் மலேசியாவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். அஜந்த மென்டிஸ் காயமடைந்துள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையிலேயே அவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளில் கழக மட்டத்தில் விளையாடுவதற்காக இலங்கை இராணுவத்தில் இணைந்திருந்த அஜந்த மென்டிஸ், மற்றொரு வீரரான சீக்குகே பிரசன்னா ஆகியோர் இலங்கை இராணுவ அணிக்காக மலேசியாவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர்.
இலங்கை இராணுவ அணி நட்புறவு கிரிக்கெட் போட்டிகளுக்காக மலேசியா சென்றுள்ளதுடன், அங்கு சென்ற இராணுவ அணியின் தலைவராக அஜந்த மென்டிஸ் செயற்பட்டுள்ளார்.
இவருடன் மற்றொரு வீரரான சீக்குகே பிரசன்னாவும் இணைந்துள்ளார். 3 போட்டிகளில் அங்கு இராணுவ அணி போட்டிகளில் பங்கேற்றது.
இதில் இலங்கை அணி, ரோயல் மலேசியன் விமானப்படை அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்திலும், மலேசிய கிரிக்கெட் வாரியத்தின் ஜனாதிபதி அணியை 170 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
மலேசியப் படை வீரர்களுக்கெதிரான போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டிருந்தது.
சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 போட்டி மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணியில் அஜந்த மென்டிஸ் காயம் காரணமாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற வேலைக்கார பெண்

 ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, By.Rajah.
வீட்டில் வேலை செய்த பெண் ஒருவர், உரிமையாளரின் 2 குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கெவின் கிரிம், அவருடைய மனைவி மரினா கரிம் மற்றும் இவர்களது குழந்தைகள் லூலூ(6), லியோ(2), 3 வயது மகளுடன் வசித்து வருகின்றார்.
கணவன் மற்றும் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை பார்த்துக் கொள்ள, யோசிலின் ஓர்டகா(50) என்ற பெண்ணை வேலைக்கு வைத்திருந்தனர்.
வேலை விஷயமாக கெவின் வெளியூர் சென்றிருந்தார். கடந்த வியாழக்கிழமை உள்ளூர் நடன ஸ்டுடியோவுக்கு மகளுடன் சென்றார் மரினா வீட்டிற்கு திரும்பினார்.
விளக்குகள் எரியாமல் அவரது வீடு இருட்டாக இருந்ததும், பதற்றம் அடைந்த மரினா அவசர அவசரமாக வீட்டுக்கு சென்றார்.
கதவை திறந்தவுடன், உள்ளே சென்ற மரினாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கழிவறையில் இரண்டு குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
மரினாவை பார்த்ததும் வேலைக்கார பெண் யோசிலின், கத்தியால் தன்னை தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
மரினாவின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர், தகவல் அறிந்து வந்த பொலிசார் 2 குழந்தைகளின் சடலங்களையும் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு செல்லப்பட்ட வேலைக்கார பெண்ணுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து நியூயார்க் பொலிஸ் கமிஷனர் ரே கெல்லி கூறுகையில, கெவின் குடும்பத்தார் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் அருகில்தான் யோசிலின் வசிக்கிறார்.
யோசிலின் நினைவற்று கிடப்பதால் விசாரணை நடத்த முடியவில்லை. அதனால் வழக்கு எதுவும் இதுவரை பதிவு செய்யவில்லை என்றார்.

அவுஸ்திரேலியா இரண்டு நாட்களில் 29 இலங்கையர்களை ???

 
 ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, By.Rajah.
கடந்த இரண்டு நாட்களில் அவுஸ்திரேலியா, 9 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்தவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தங்காலை குடாவெல்ல பிரதேசத்தில் படகு ஒன்றை கடத்தி அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுகளைச் சென்றடைந்த 14 பேர் நாடு கடத்தப்பட்டனர்.
இதற்கு மேலதிகமாக கிறிஸ்மஸ் தீவுகளைச் சென்றடைந்த 15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஏழு பேர் கடந்த வெள்ளிக்கிழமையும், எட்டுபேர் கடந்த சனிக்கிழமையும் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெறும் உலக தமிழர் மகாநாடு

 
Sunday, 28-10-2012,By.Rajah.இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட யுத்தம் தொடர்பிலான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றை உடனடியாக ஆரம்பிக்குமாறு உலகம் முழுவதிலுமுள்ள தமிழர் விடுதலைப் போராட்ட சக்திகள் அனைவரும் ஒரேகுரலில் வலியுறுத்தும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மகாநாடு....
.....ஒன்றை தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் இணைந்து எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடத்தவிருக்கின்றன.
தாயகத்திலிருந்து தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உலகம் பூராகவுமுள்ள புலம் பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டு முக்கிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற இருப்பதுடன் முக்கிய அரசியல் கலந்துரையாடல்களிலும் ஈடுபடவிருக்கின்றனர்.
2009ம் ஆண்டு மாபெரும் மனிதப்படுகொலையுடன் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாள்முதல் இன்று வரை நாம் எமது உறவுகளின் மரணங்களை கணக்கிட்டு வருகின்றோம். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் சுமார் 40,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் யுத்தத்தின்போது காணமல் போனவர்களின் எண்ணிக்கை 146 ,000 ஐயும் விட அதிகமாகும். யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் வகை தொகையாக சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு கொள்ளப்பட்டமை தொடர்பில் ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன.
போதிய ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில் கால தாமதம் செய்யாமல் உடனடியாக சர்வதேச சுயாதீன விசாரணையை ஆரம்பிக்குமாறு ஐ. நா. மற்றும் சர்வதேச சமூகத்தை உலக தமிழ் மக்கள் ஒரே குரலில் வலியுறுத்துவதற்கும் அதற்கான வழி வகைகள் குறித்து ஆராய்வதுமே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் 2013 கூட்டத் தொடரின்போது சிறி லங்காவுக்கெதிராக சர்வதேச சமூகம் கடும் நிலைப்பாட்டை எடுக்கச் செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக இந்த மகாநாடு அமையும்.
தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் , தமிழ்நாட்டில் உள்ள சகல அரசியல் கட்சிகளினதும் மக்கள் பிரதிநிதிகள், உலகம் முழுவதிலுமுள்ள புலம்பெயர் தமிழ் மக்களின் அரசியல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக அமைபுக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், தமிழகத்து கலைத்துறை அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்று பல்வேறுபட்ட தரப்பினர் இந்த மகா நாட்டில் கலந்து கொள்வர்.
இம்மாநாட்டின் இரு முக்கிய அமர்வுகள் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளன. மகா நாட்டில் கலந்துகொள்ளும் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான இராப்போசன விருந்தும், மக்கள் சந்திப்பும் தனித் தனியாக நடைபெற ஏற்பாடாகி உள்ளது.இவை பற்றிய கால நேர விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இந்த மகாநாடு மகத்தான வெற்றிபெறுவதற்கு உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டி நிற்கிறது. இந்த மகாநாடு தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவையுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

நீரில் மூழ்கியது காலி!காற்றுடன் கூடிய மழை எச்சரிக்கை!

         
Sunday 28 October 2012.By.Rajah.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த குறைந்த தாழமுக்கமானது தற்போது வலுவடைந்துதாழமுக்கமாக மாறியுள்ளதாக திணைக்களத்தின் கடமைநேர வானிலை நிபுணர் எஸ்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய வானிலையை அடுத்து காலி நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
காலி சங்கமித்த பாடசாலைக்கு அருகிலுள்ள வீதி நீரில் மூழ்கியுள்ளமையினால் போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபில தெரிவித்துள்ளார்.
கராபிட்டி பகுதியின் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
எச்சரிக்கை! வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
யாழ். கிழக்கு கடற்பரப்பில் 600 கடல் மைல் தொலைவில் வங்காள விரிகுடாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திடீர் தாழமுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தினால் காற்றின் வேகம் அதிகரித்திருக்மென்றும் கடல் அலைகளின் வேகம் அதிகரித்திருக்குமென்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், மேற்குறிப்பிட்ட 3 மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது

கொலை செய்தது குடும்ப நண்பரே..அதிர்ச்சி தகவல். ?

         
Sunday 28 October 2012  By.Rajah.
 அமெரிக்காவில் கடத்தப்பட்ட 10 மாத பெண் குழந்தையின் சடலம், அபார்ட்மென்ட் தரை தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குடுமுலகுண்டலா கிராமத்தில் வசிப்பவர் வேலுகொண்டா. இவரது மனைவி சத்யவதி (61). இவர்களுடைய மகன்கள் சிவா, கிருஷ்ணா. இவர்கள் இருவரும் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக உள்ளனர். பென்சில்வேனியா மாநிலம் கிங் ஆப் புரூசியா பகுதியில் சிவா வசிக்கிறார். இவரது மனைவி லதா. இவரும் சாப்ட்வேர் இன்ஜினியர். இருவரும் வேலைக்கு செல்வதால், இவர்களது 10 மாத பெண் குழந்தை சானி வென்னாவை பாட்டி சத்யவதி கவனித்து வந்தார். கடந்த திங்கட்கிழமை வீட்டில் பேத்தியுடன் இருந்தார் சத்யவதி.

அப்போது வீட்டுக்குள் நுழைந்த 3 மர்ம ஆசாமிகள், சத்யவதியை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொன்று விட்டு குழந்தையை கடத்தி சென்றனர். தகவல் அறிந்து எப்.பி.ஐ. புலனாய்வு ஏஜென்சி மற்றும் போலீசார் குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில் குழந்தையை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.16 லட்சம் பரிசு அளிப்பதாக வட அமெரிக்க தெலுகு சங்கத்தினரும் போலீசாரும் அறிவித்தனர். இந்நிலையில், 10 மாத பெண் குழந்தை சானி வென்னாவின் சடலம், கிங் ஆப் புரூசியாவில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் பேஸ்மென்ட்டில் கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து பிலடெல்பியா போலீசார் கூறுகையில், பாட்டி, குழந்தை கொலை தொடர்பாக குடும்ப நண்பர் ரகுநாதன் எண்டமூரி என்பவரை கைது செய்துள்ளோம். குழந்தையை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதற்கான ஆதாரங்களை கைப்பற்றி உள்ளோம். இவர் மீது கொலை, கடத்தல், கொள்ளை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம் என்றனர். அமெரிக்காவில் இரட்டை கொலை நடந்துள்ளது அங்குள்ள இந்தியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது

கே.பியின் திரைமறைவுக் கும்பல் அம்பலம்! ?

         
Sunday 28 October 2012  By.Rajah.
இரகசிய ஈமெயில் ஒன்று அம்பலமானதால், பல விடையங்கள் வெளியாகியுள்ளதாக ஆங்கிலப் ஊடகமான கார்டியன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் சில புலம்பெயர் தமிழர்களை அழைத்து தாம் சமரசம் பேசவிருப்பதாக இலங்கை அரசு அறிவித்தது. இதனை மகிந்தவே நடத்துவார் என்றும் அது தம்பட்டம் அடித்தது.
இதனை அடுத்து பிரித்தானியா கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகள், தாமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என வெளிப்படையாக அறிவித்தது யாவரும் அறிந்ததே. இந் நிலையில் கே.பி சில தமிழர்களுடன் மின்னஞ்சல் மூலம் தொடர்புகளை மேற்கொண்டுள்ளார். இவர்களில் உள்ள வெள்ளை ஆடு ஒன்று, (கறுப்பாடு இல்லை) இந்த மின்னஞ்சலில் ஒன்றை காப்பி எடுத்து, அப்படியே ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அனுப்பிவிட்டார். இதனை சாட்சியாக வைத்தே தற்போது பல செய்திகள் வெளியாகியுள்ளதாக ஸ்ரீலங்கா கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு கடந்த அரசில் இருந்து, நிதி அமைச்சர் இளையதம்பி, அவைத் தலைவர் பென் பால்ராஜன், கனடாவில் இருந்து இன்பம், லண்டனில் இருந்து லேபர் பார்டி கவுன்சிலர் கணா, நோர்வேயில் இருந்து சர்வே, இதில் பங்குகொள்வதாக கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் இவர்கள் தான் ஒட்டுமெத்த புலம்பெயர் தமிழர்களின் தலைவர்கள் என்று நினைக்கிறது இலங்கை அரசு ! இல்லை இல்லை இப்படி ஒரு படம் காட்டப்பட்டுள்ளது. இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினால், புலம்பெயர் தமிழர்கள் தமது கோரிக்கையை கைவிட்டுவடுவார்களாம் ! மற்றது மகிந்தர் வெளிநாடு வந்தால் போராட்டம் நடத்தமாட்டார்களாம்.
இது எல்லாவற்றையும் நாங்க பாத்துகொள்ளுவோம் என்று இவர்கள் ஒரு 70MM படம் ஓட்டியுள்ளார்கள்போல. இதை டாரக்ட் பண்ணுவது கே.பியாம் !

இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக இணைத்து, இலங்கைக்கு அனுப்ப GTV இன் உரிமையாளர் செல்வி நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தார் என்ற செய்தியும் மின்னஞ்சலில் உள்ளதாக, ஸ்ரீலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக அரசாங்கத்தின் இரகசியப் பிரதிநிதி ஒருவர் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா சென்றுவந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் புலிகள் ஆதரவாளராக இருந்த நோர்வேயில் வசிக்கும் சர்வே தற்போது இலங்கை அரசின் சார்பாக இயங்குவது யாவரும் அறிந்த விடையம். ஆனால் நாடு கடந்த அரசின் பிரதிநிதிகள் இதில் ஏன் கலந்துகொள்ளவேண்டும் என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இதேவேளை பிரதமர் ருத்திரகுமாரனுக்குத் தெரியாமல் தான் இச் சந்திப்பு நடைபெறவிருப்பதாகவும், வெளியான அந்த மின்னஞ்சலில் உள்ளதாக ஸ்ரீலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளின் பாரிய பின்னடைவை சந்திக்க 2006ம் ஆண்டில் இருந்தே கே.பி தான் காரணம் என அந்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
2006ம் ஆண்டில் இருந்தே, கே.பி இலங்கைப் புலனாய்வுத் துறையின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான கபில ஹந்தவிதாரண வுடன் தொடர்புகளில் இருந்துள்ளார். அவர் வழங்கிய பல தகவல் தான் புலிகள் அழிக்கப்பட ஏதுவாக இருந்தது என்பதனை எந்தத் தமிழர்களும் மறந்துவிடவில்லை.

மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டில், போனமுறையை விட மிகவும் கடினமான இலங்கைக்கு எதிரான தீர்மாணம் ஒன்றைக் கொண்டுவர மேற்குலகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் இருந்து தப்ப முடியாது என்பதனை உணர்ந்த இலங்கை தற்போது, புலம்பெயர் நாட்டில் உள்ள பல தமிழ் தலைவர்களையும், அமைப்புகளையும் வளைத்துப்போடும் குள்ளத்தனத்தை கையாண்டு வருகிறது.
இதன் ஒரு அங்கமாகவே கே.பியை சு.ப தமிழ்செலவன் அவர்களின் வீட்டில் அமர்த்தி, தேசிய தலைவர் பாவித்த ஒரு வீடை காரியாலயமாக்கி, புலம்பெயர் தமிழ் மக்களை கே.பி ஊடாக தம் பக்கம் இழுக்க முயற்சிகளை அது மேற்கொண்டு வருகிறது. கே.பி சு.ப தமிழ்ச் செல்வன் அவர்களின் வீட்டில் இருந்தால், தமிழ் மக்கள் என்ன அவரை நம்பி விடுவார்களா ? துரோகி என்றுமே துரோகிதான் !

மின்னல் தாக்குதலின் காரணமாக 44 பேர் பலி!???

          
Sunday 28 October 2012  By.Rajah. 
இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள் மின்னல் தாக்குதலின் காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை நாட்டின் பல பாகங்களிலும், மின்னல் தாக்குதலுக்கு இலக்கான பலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் மின்னல் தாக்குதலின் காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏப்ரல் மாதத்திலேயே மின்னலின் காரணமாக அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இம்மாதத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே மழைகாலங்களில் மக்கள் தமக்கான பாதுகாப்பு குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது