siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 20 அக்டோபர், 2012

புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட அன்டனோவ் விமானத்தின் கறுப்புப் பெட்டியை மீட்கும் பணி!



Saturday  20  October  22012..By.Rajah.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயாருக்கு சொந்தமான அன்டனோவ் விமானத்தின் கறுப்புப் பெட்டியை மீட்கும் பணியில் இலங்கையின் கடற்படை சுழியோடிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மன்னார் இரணைதீவு பிரதேச கடற்பரப்பில் சுழியோடிகள் கறுப்புப் பெட்டியைத் தேடி வருகின்றனர்.
இந்தக் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டதன் பின்னர் அதனை விசாரணைகளுக்காக ரஸ்யாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த கறுப்புப் பெட்டித் தகவல்களின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொண்ட போர்க்குற்றச் செயல்களை அரசாங்கத்தினால் நிரூபிக்க முடியும் என பாதுகாப்பு உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
14 ஆண்டுகளுக்கு முன்னர் 48 பயணிகள் மற்றும் ஆறு சிற்பந்திகளுடன் பலாலியிருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்த விமானத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தினர்.
இரணை தீவுக்கு அருகாமையில் அமைந்துள்ள கடற் பரப்பில் இந்த விமானம் வீழ்த்தப்பட்டது.
கடற்படை சுழியோடிகள் இரணைதீவு கடற்பகுதியிலிருந்து சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் என்ஜினின் ஒரு பகுதி, இரண்டு இறக்கைகள் மற்றும் டயர்கள் ஆகியனவற்றை மீட்டுள்ளனர்.

ஒரு மலாலாவை சுட்டு, உலகெங்கும் பல கோடி

           
 
Saturday20October2012 By.Rajah.மலாலாக்களைஉருவாக்கி விட்ட தாலிபான்கள் நான் நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்தில் நிற்பேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்டால், தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன். தொழுகையில் கலந்து கொண்ட அந்தக் குழந்தையின் தாயாரின் உள்ளம் தவிக்கக்கூடாது என்பதே இதற்குக் காரணம்’ என்று, குழந்தையின் அழுகைக்கே துடிக்கும் நபிகள் நாயகத்தின் வழியான இஸ்லாத்தைப் பின்பற்று கிறோம் என்று சொல்லும் தகுதியைக்கூட இழந்து விட்ட தாலிபான் அமைப்பினர், ஒரு பெண் குழந்தை மீது துப்பாக்கி சூடு நடத்தி தங்களைக் கொடூரர்கள் என்று மீண்டும் ஒரு முறை அடையாளப்படுத்தி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் மலாலா யூஸுஃப் ஸயீ.
14 வயதே நிறைவடைந்த மலாலா, வடமேற்கு பாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர். இவர் 11 வயதாக இருந்த போது, சுவாத் பள்ளத்தாக்கின் பழங்குடிப் பகுதிகளை தாலிபான்கள் ஆக்கிரமித்தனர். முதல் வேலையாக பெண்கள் பள்ளிகளை மூடினர். பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதும், மலாலா பி.பி.சி-யின் உருதுமொழி சேவைக்கு புனைப்பெயரில் தன் மனக் குமுறல்களை, 'டைரி’யாகக் கொட்டி அனுப்பி வைத்தார்.

'என் பள்ளிச் சீருடையை, என் பையை, என் பேனா பெட்டியை பார்க்கும்போதெல்லாம் என்மனம் உடைகிறது. நாளை ஆண்கள் பள்ளி திறந்திருக்கும். ஆனால், பெண் கல்விக்குத் தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்’ என்று குமுறி இருந்தார்.
மலாலாவின் குமுறல்கள் ஆட்சியாளர்களை எட்டவே, சுவாத் பள்ளத்தாக்கில் இருந்து தாலிபான்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். 'தாலிபானுக்கு எதிரான டைரி’ எழுதிய மலாலாவுக்கு தீரச் செயலுக்கான தேசியவிருது வழங்கப்பட்டது. மேலும், அவர் பெயர் சமாதானத்துக்கான சர்வதேச விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. பாகிஸ்தான் மட்டுமின்றி உலகெங்கும் 'பெண் கல்வியின் போராளி’ என்று மலாலா போற்றப்பட்டார்.
தாங்கள் விரட்டியடிக்கப்பட்டதற்கு காரணமான மலாலாவைப் பழிவாங்கத் துடித்தனர் தாலிபான்கள். சுவாத் பள்ளத்தாக்கின் முக்கிய நகரமான மின்கோராவில் இருந்து பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மலாலா மீது, கொஞ்சம்கூட இரக்கமே இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மலாலாவின் தலைப்பகுதியில் குண்டு துளைத்து விட, கிட்டத்தட்ட மரணத்தின் வாசலைத் தொட்டார் மலாலா.
ராணுவ மருத்துவமனையில் மலாலாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும், நாளுக்குநாள் மலாலாவின் உடல் மோசமடைந்தது. அதனால், மருத்துவக் குழுவோடு மலாலா இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இப்போது அவருக்கு பர்மிங்ஹாம் நகரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இப்போது, உலகெங்கும் மசூதிகளிலும், தேவலாயங்களிலும் இன்னும் பிற வழிபாட்டுத் தலங்களிலும், மலாலா உயிர் பிழைத்து வருவதற்காக வேண்டுதல் நடத்தப்படுகிறது. தாலிபான்கள் ஒரு மலாலாவை சுட்டு, உலகெங்கும் பல கோடி மலாலாக்களை உருவாக்கி விட்டனர்.
மலாலா நிச்சயம் வருவாள். அவள் ஆசைப்படியே

ஒபாமா குழந்தைகள் படிக்கும் பள்ளியில் வெடிகுண்டு பீதி

         
Saturday 20 October 2012  By.Rajah.
அமெரிக்க அதிபர், ஒபாமாவின் மகள்கள், படிக்கும் பள்ளி கூடத்தில், சந்தேகத்திற்குரிய வகையில் பை கிடந்ததால், மாணவர்களும், ஆசிரியர்களும் வெளியேற்றப் பட்டனர்.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள்கள், மாலியா, 14, சாஷா, 11, இருவரும், வாஷிங்டனில் உள்ள, "சிட்வெல் பிரெண்ட்ஸ்' பள்ளியில் படிக்கின்றனர்.
நேற்று முன்தினம், இந்த பள்ளி மைதானத்தில், ஒரு பை, கேட்பாரற்று கிடந்தது. இந்த பையில், வெடிகுண்டு வைக்கப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால், பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் வெளியேற்றப் பட்டனர்.வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சந்தேகத்திற்குரிய பை சோதிக்கப் பட்டதில், அதில் ஒன்றுமில்லை, என தெரிய வந்தது. இதையடுத்து, மாணவர்களும், ஆசிரியர்களும் மீண்டும் பள்ளிக்கு திரும்பினர்.

யாரிடமும் வாய்ப்பு கேட்டு கெஞ்ச மாட்டேன்: கமாலினி முகர்ஜி

 Saturday, 20 October 2012, By.Rajah.
வாய்ப்பு கேட்டு கெஞ்சும் பழக்கம் என்னிடம் இல்லாததால் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றார் கமாலினி முகர்ஜி.
வேட்டையாடு விளையாடு, காதல்னா சும்மா இல்ல படங்களில் நடித்த கமாலினி முகர்ஜி கூறுகையில், கொலிவுட்டில் இரண்டு படங்களில் நடித்தேன். டோலிவுட்டில் நிறைய படங்களில் நடித்து வந்தேன்.
மலையாளத்தில் நேதோலி செரியா மீன் அல்ல என்ற படத்தில் நடிக்கிறேன். இது பன்முகம் கொண்ட கதாபாத்திரம். சமீபத்தில் டோலிவுட்டில் ஷிருடி சாய் படத்தில் நாகார்ஜூனாவுடன் நடித்தேன்.
ஷிருடி பக்தையான நான் இதில் நடித்தது மகிழ்ச்சி. ஒரு நடிகையாக என்னை பிரபலப்படுத்திக் கொள்ளாமல் அடக்கியே வாசித்தேன்.
எனக்கு மேனேஜர்கள் கிடையாது. வாய்ப்பு வேண்டும் என்று கேட்டு யாரிடமும் கெஞ்சியதில்லை.
முந்தைய படங்களில் நடித்ததை வைத்தே அடுத்தடுத்த படங்கள் எனக்கு வந்திருக்கின்றன. நான் வங்காளப் பெண். ஆனாலும் நடிகையாகி 7 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் வங்காள மொழிப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.
இந்தியில் ரேவதி இயக்கிய பிர் மிலிங்கே என்ற படம் மூலம் அறிமுகமானேன். ஒரு நடிகையாக தென்னிந்திய படங்கள்தான் என்னை பிஸியாக வைத்திருக்கிறது.
வெவ்வேறு மொழிகளில் நடிப்பது கஷ்டமா? என்கிறார்கள். அது எனக்கு கடினமாக தெரியவில்லை. அதை சவாலாக எடுத்துக்கொண்டேன். விரைவில் வங்காள மொழிப் படம் ஒன்றை இயக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் நடிக்க வந்தார் குட்டி ராதிகா

Saturday, 20 October 2012,By.Rajah.கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்த குட்டி ராதிகா மீண்டும் நடிக்க வந்தார்.
இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா.
இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
சமீபத்தில் லக்கி என்ற படம் மூலம் தயாரிப்பாளராக திரையுலகிற்குள் நுழைந்தார். இதில் யாஷ், திவ்யா நடித்தனர்.
இதையடுத்து சுவீட்டி நானா ஜோடி என்ற படத்தை தயாரிப்பதுடன் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ராதிகா நடித்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன.
மீண்டும் நடிக்க வந்தது பற்றி ராதிகா கூறுகையில், படங்களில் கிளாமராக நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஆபாசமான உடை அணிய மாட்டேன். இந்த கட்டுப்பாடுகளுடன் படங்களில் நடிக்கிறேன்.
இப்படத்தில் ஆதித்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே அவருடன் நான் நடித்திருக்கிறேன். தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது என்றார்

திருமணத்திற்கு சென்ற 19 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

 சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012,By.Rajah.
ஆப்கானிஸ்தானில் குண்டு வெடித்ததில் திருமணத்திற்கு சென்ற 19 பேர் பலியாகினர், 16 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் தவ்லத் அபாத் மாகாணத்தில் மினி பேருந்து ஒன்றில் திருமணத்திற்கு பெண்கள், குழந்தைகள் என பலர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் மினி பேருந்து வெடித்து சிதறியது.
இதில் பயணித்த 19 பேர் பலியாகினர், 16 பேர் படுகாயமடைந்தனர். தலிபான்கள் தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஒபாமாவை கொலை செய்ய திட்டமிட்ட இளைஞர் மாணவர்

 சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012,By.Rajah.
விசாவில் வந்துள்ளார்: புதிய தகவல்அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கொலை செய்ய திட்டமிட்டதாக வங்கதேச இளைஞர் அஷான் நாபிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் பெடரல் வங்கி கட்டிடத்தை குண்டு வைத்து தகர்க்க நாபிஸ் திட்டமிட்டிருந்தார். இது உளவு அமைப்பான எப்.பி.ஐ-யினால் முறியடிக்கப்பட்டது. அதன்பின் நாபிஸ் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் மேற்படிப்புக்காக மாணவர் விசா பெற்று நாபிஸ் அமெரிக்கா சென்றுள்ளதும், அதற்கான தேர்விலும் அவர் தேர்ச்சி பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் 2011ஆம் ஆண்டில் வங்கதேசத்தைச் சேர்ந்த 1,136 பேருக்கு எஃப் 1 விசா வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் நாபிசும் ஒருவர் என்றும் அமெரிக்க வெளிவிவகாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

உளவு பார்க்கும் பணிக்கு இளைஞர்களை தெரிவு செய்யும் இங்கிலாந்து அரசு

சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012By.Rajah.
உளவு பார்ப்பதற்கு 18 வயதுக்கு உட்பட்டவர்களை இங்கிலாந்து அரசு தெரிவு செய்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகளவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இணையம் மூலம் தீவிரவாதிகள் பல்வேறு தகவல்களை, சதி திட்டங்களை பரிமாறி வருகின்றனர்.
அத்துடன் சில சமூக விரோதிகள் மற்ற முக்கிய அமைப்புகளின் கடவுச்சொல்லை திருடி ரகசியங்களை தெரிந்து கொண்டு சதி திட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
இவற்றை தடுக்க ஒவ்வொரு நாடும் போராடி வருகின்றன. இந்நிலையில் சைபர் தீவிரவாதம், பாஸ்வேர்டு திருட்டு போன்ற பிரச்னைகளை சமாளிக்க 18 வயதுக்கு உட்பட்ட டீன்ஏஜ் வாலிபர்கள், இளம்பெண்களை இங்கிலாந்து அரசு தெரிவு செய்து வருகிறது.
அவர்களுக்கு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வருவது போல், உளவு பார்க்க பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
பெரும்பாலும் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற சிறந்த மாணவர்களே உளவு பார்க்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்போது முதல் முறையாக 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
இத்திட்டத்தை வெளிவிவகாரத் துறை அமைச்சர் வில்லியம் ஹாக் அறிவித்தார். அவர் கூறுகையில், வாலிபர்களும் இளம்பெண்களும்தான் நாட்டின் வருங்கால வெற்றிக்கு தூணாக உள்ளனர். 2ம் உலக போரில் இளம் வயதினர் முக்கிய பங்கு வகித்தனர் என்றார்.
இங்கிலாந்து எலக்ட்ரானிக் கண்காணிப்பு ஏஜென்சிக்காக உளவு பார்க்க 18 வயதுக்கு உட்பட்ட 100 பேரை முதற்கட்டமாக தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் கேம் போன்றவற்றில் மிகச்சிறந்த அறிவு படை வாலிபர்கள், இளம்பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தெரிவு செய்யப்படுபவர்களுக்கு 2 ஆண்டு பயிற்சி அளிக்கப்படும்.
அதன்பின் முழு நேர பணி வழங்கப்படும். உளவு பார்க்கும் பணிக்கு பள்ளி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவிடமிருந்து போர் விமானங்களை வாங்குகிறது ஈராக்

சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012, By.Rajjah.
தனது விமான படையை பலப்படுத்தும் நடவடிக்கையாக ஈராக் அரசு, அமெரிக்காவிடமிருந்து 36 போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இந்த போர் விமானங்கள் எப்-16 ரகத்தை சேர்ந்தவை ஆகும். முதற்கட்டமாக 18 போர் விமானங்கள் வாங்குவதற்கு அமெரிக்காவுடன் ஈராக் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்தது.
இந்த விமானங்கள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈராக்கிற்கு வழங்கப்படும். இதன் விலை 3 பில்லியன் டொலர்கள் ஆகும்.
இந்நிலையில் தற்போது மேலும் 16 போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவுடன் ஈராக் கையெழுத்திட்டது.
இந்த விமானங்கள் 2018ஆம் ஆண்டு ஈராக் வந்து சேரும். இந்த தகவல்களை ஈராக் இராணுவ அமைச்சர் பொறுப்பு வகிக்கும் சதாவுன் அல் துலாய்மி தெரிவித்தார்