siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 5 டிசம்பர், 2012

உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்ந்த 116 வயது பெண் மரணம்.

உலகின் மிகவும் வயது முதிர்ந்த பெண்மணியாக கருதப்பட்ட பெசி கூப்பர் (வயது 116) அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். கின்னஸ் சாதனை பதிவுகளின்படி 1997ம் ஆண்டு வரை 122 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த ஜீனே கல்மென்ட் என்பவர் உலகில் வயது முதிர்ந்த நபராக கருதப்பட்டார். இவர் பிரான்சு நாட்டில் பிறந்தவர்.இந்த சாதனைக்கு பிறகு அமெரிக்காவின் ஜார்ஜியா மாவட்டத்தில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியை பெசி கூப்பரை, உலகில் வயது முதிர்ந்த நபராக கின்னஸ் நிறுவனம்...

மாங்குளத்தில் பொலிசார் மீது மோதிவிட்டு தப்பியோடிய?

கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதிவிட்டு தப்பியோடிய தனியார் பஸ்ஸை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் கூறியுள்ளதாக, ஏ- 9 வீதியின் முருங்கன் ஆலயத்திற்கு அருகில் இச்சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது என மேலும் அறியப்படுகிறது. மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் இந்த சம்பவத்தில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஆனால் மோதிவிட்டு நிற்காமல் சென்ற பஸ் எங்கே...

இனிமேல் அனுமதி பெற்றே நுழைவார்கள் !படைத் தளபதி

      நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் இனிமேல் சிறிலங்கா படையினரோ காவல்துறையினரோ யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையமாட்டார்கள் என்று யாழ். படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க வாக்குறுதி அளித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையிலான குழுவுடன், நடத்திய 3 மணிநேரப் பேச்சுக்களை அடுத்தே, அவர் நேற்று மாலை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “யாழ்.பல்கலைக்கழக சுற்றுப்புறத்தில்...

நாடு திரும்பிய குடும்பத் தலைவர் - புலனாய்வுப் பிரிவினரால்

இந்தியாவில் தஞ்சமடைந்திருந்து நாடு திரும்பிய குடும்பத் தலைவர் ஒருவரை, சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் விசாரணை என்ற பெயரில் தினமும் துன்புறுத்தி வருகின்றனர். திருகோணமலை, சாம்பல்தீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய கோவிந்தன் சிவராசா என்ற குடும்பத் தலைவரையே சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தொடர் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். 2006ம் ஆண்டு இடம்பெயர்ந்து இந்தியா சென்ற இவரது கடந்த செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா திரும்பி சொந்த இடத்தில்...

பிலிப்பைன்ஸை தாக்கியது போபா புயல்: 43 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானௌ தீவை போபா புயல் நேற்று தாக்கியதில் 43 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பிலிப்பைன்சில் மணிக்கு 210 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய புயல், மின்டானௌ தீவில் நேற்று கரையை கடந்தது. இதனால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வர்த்தக நகரான ககாயான் டியோரோ நீரில் மூழ்கியுள்ளது. 41 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கல்வி நிறுவனங்களுக்கு...

ரஷ்ய சரக்கு கப்பல் கருங்கடலில் மூழ்கியது

ரஷ்யாவுக்கு சொந்தமான சரக்கு கப்பலொன்று கடல் சீற்றத்தின் காரணமாக கருங்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகருக்கு அருகில் உள்ள சிலே என்ற இடத்திலேயே இந்த கப்பல் மூழ்கியுள்ளது. இந்த கப்பலில் 11 ரஷ்யர்களும், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒருவரும் பயணம் செய்தனர். இவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே இதே பகுதியில் வந்த மற்றொரு ரஷ்ய கப்பலும் கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளது. இந்த கப்பலையும் தேடும் பணி...

ஆளில்லா உளவு விமானத்தை கைப்பற்றியது??

  அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக சந்தேகம் கொண்ட அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனால் அணு சக்தியை ஆக்கப்பூர்வமான விடயங்களுக்கு மட்டும் தான் பயன்படுத்தி வருகிறோம் என ஈரான் கூறிவருகிறது. ஈரானின் பேச்சில் நம்பிக்கை இல்லாத அமெரிக்கா அணுசக்தி நிலையம் உள்ள பகுதிகள், கச்சா...